மதுரை கருத்தரங்கம்
வதனம் இலக்கிய அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற சிறுகதை கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் அக்னி நட்சத்திர வெயில் கொதிக்கிறது. இதில் யார் கூட்டத்திற்கு வருவார்கள், தேதியை மாற்றிவிடுங்கள் எனச் சில நண்பர்கள் ஆலோசனைகள் சொன்னார்கள்.ஆனால் நான் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். மதுரையில் இலக்கியத்திற்கென எப்போதும் தனிவாசகர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என உறுதியாக நம்பினேன் ஒரு மாத காலமாகவே நண்பர் ஆத்மார்த்தி மிகுந்த ஈடுபாட்டுடன் இதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். திருவண்ணாமலை சிறார் இலக்கிய …