நாயன சஞ்சாரம்

கரிசல்காட்டு காற்றலைகளில் நாயன சஞ்சாரம் மதுரை வாசகன் *** வேறு எந்த வாத்தியத்தைவிடவும் கிராமத்து மக்களுக்கு நாதஸ்வரம் கேட்பதே பிடித்தமானதாக இருக்கிறது. அந்த இசையை, தங்களின் மண்ணின் இசையாகவே விவசாயிகள் நம்பினார்கள். கரிசலின் தொல்நினைவுகளை எல்லாம் நாதஸ்வரம் மீட்டுத் தருவதாகவே கருதினார்கள். -எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் வாசிக்கையில் பழகிய மனிதர்களோடு நமக்குப் பிடித்த ஊரில் அலைவதைப் போலிருந்தது. சஞ்சாரம் நாவலைக் குறித்து பதிவெழுதத் திண்ணையில் அமர்ந்தபோது காற்றலைகளில் ‘அங்க இடி முழங்குது.. கருப்பசாமி தங்க கலசமின்னுது’ பாடல் …

நாயன சஞ்சாரம் Read More »

புத்தகம் பேசுது

புத்தகம் பேசுது இதழில் சஞ்சாரம் நாவலுக்கு  தே. லட்சுமணன் எழுதியுள்ள விரிவான விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது. நன்றி புத்தகம் பேசுது. மார்ச் 2015

உருதுக்கதை

ஜோகிந்தர் பால் – உருதுக்கதை என் நாவலில் வரும் கதாநாயகனும் கதாநாயகியும் என்மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள் நாவலின் கடைசியில் தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என நான் செய்திருந்த முடிவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சரியான சந்தர்ப்பம் வருவதாகக் காத்திருந்தார்கள். முடிவில் ஒருநாள் நாவலில் இருந்து வெளியேறி மறைந்து போய்விட்டார்கள். நாவலின் பிரதி முழுவதும் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவேயில்லை எப்படிக் கண்டுபிடிப்பது, எங்கே போயிருப்பார்கள், எனக்குக் கவலை உண்டானது அவர்களைக் கண்டுபிடிக்கமுடிந்தால் உடனடியாகத் …

உருதுக்கதை Read More »

உயிர்மையில்

உயிர்மை மார்ச் 2015 இதழில் சஞ்சாரம் நாவல் குறித்து லஷ்மி சரவணக்குமார் எழுதிய விமர்சனம் வெளியாகியுள்ளது நன்றி: உயிர்மை

கணையாழி

கணையாழி மார்ச் 2015 இதழில் சஞ்சாரம் நாவல் குறித்து ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய விரிவான விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது நன்றி: கணையாழி

சா. தேவதாஸ்

எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான சா. தேவதாஸ் அவர்களுக்கு இந்த ஆண்டிற்குரிய மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது  அறிவிக்கபட்டுள்ளது. லடாக்கிலிருந்து கவிழும் நிழல் என்ற பபானி பட்டாச்சார்யா நூலின் மொழிபெயர்ப்பிற்காக இந்த விருது அளிக்கபடுகிறது. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

காலத்தின் திறவுகோல்

தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் நான்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது ஸ்டீபன் ஸ்வேக்கின் The Society Of The Crossed Keys கதையை மையமாகக் கொண்டு எடுக்கபட்ட படமது ஸ்டீபன் ஸ்வேக் (Stefan Zweig) ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் எழுதிய யாரோ ஒருத்தியின் கடிதம், ராஜவிளையாட்டு போன்ற நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கபட்டுள்ளன., உலக அரங்கில் இவர் காப்காவிற்கு இணையாகப் பேசப்படுகிறார். இவரது குறுநாவல்கள், நாவல்கள் பல திரைப்படங்களாக உருவாக்கபட்டுள்ளன, A Letter from an …

காலத்தின் திறவுகோல் Read More »

ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி

சிறுகதை ஆத்மாநாமிற்கும் எனக்குமான இடைவெளி நான்கு அடி தூரம். எவ்வளவு தான் நான் நெருங்கி நெருங்கிப்போனாலும் அந்த இடைவெளி அப்படியே தான் இருக்கிறது என்ற குரல் ஒலித்த போது டோக்கியோ செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் ஜோதிராம். அந்தக் குரல் குமாரசாமியுடையது, இருபத்திரெண்டு வருஷங்களுக்கு முன்பு ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். ஒரு வருஷம் ஜுனியர், பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசியது போல அத்தனை துல்லியமாக மனக்குரல் கேட்டது. பாதிசொருகியிருந்த கண்களைக் கசக்கிவிட்டபடியே மணி பார்த்தபோது இரவு …

ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி Read More »

செகாவ் திரைப்படங்கள்

The Lady with the Dog https://youtu.be/7Jq0C9JV7W4 Three Days of Rain https://youtu.be/B-Mgb9KHQpE Romance with a double bass-1911 silent film https://youtu.be/CUAHAeQEH2c Romance with a Double Bass – colour https://youtu.be/2vGxAaneZwo THREE SISTERS by Anton Chekhov. https://youtu.be/GtTnUGF2XtU The Seagull – 1975 – Anton Chekhov https://youtu.be/qiPfPzt8azc A Joke – Short Film Adapted from Anton Chekhov https://youtu.be/JnKgUgpr288 Being: a movie based …

செகாவ் திரைப்படங்கள் Read More »