செகாவ் வாழ்கிறார்
“இந்த பூமியில் மனிதனுக்குத் தேவை ஏழடி நிலம் தான்“ “இல்லை, சவத்திற்குத் தான் ஏழடி நிலம் வேண்டும், மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது“ எனத் தனது குறிப்பேடு ஒன்றில் செகாவ் கூறுகிறார். இந்தக் குறிப்பை வாசிக்கும் போதெல்லாம் மனது மிகுந்த கிளர்ச்சி அடைகிறது. டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதை How Much Land Does A Man Need , இதில் ஆறு அல்லது ஏழு அடி தான் ஒரு மனிதனுக்குக் கடைசியில் தேவை என்பதை டால்ஸ்டாய் வலியுறுத்துகிறார். …