பிறந்தநாள்

இன்று எனது பிறந்த நாள், வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் **

தெலுங்கில்

எனது சிறுகதை ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே தெலுங்கில் வெளியாகி உள்ளது, இதனை மொழியாக்கம் செய்திருப்பவர், மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற திருப்பதி பாலாஜி,  விசால ஆந்திரா 7ம் தேதியிட்ட வார இணைப்பில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.

செம்மீன்

நேற்று திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்த போது கேரளாவின் புகழ்பெற்ற நடிகர் மதுவைச் சந்தித்தேன், தனியே அமர்ந்து வார இதழ் ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தார், அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு பேசியபோது புன்சிரிப்புடன் தமிழ் மக்கள் எனது படங்களை நேசிக்கிறார்களா எனக்கேட்டார்,  செம்மீனைப் பிடிக்கும் என்று சொன்னேன், செம்மீன் ஒரு நல்ல படம் என்று சொல்லிவிட்டு பெருமூச்சிட்டுக் கொண்டார், பிறகு வேடிக்கையான குரலில் சொன்னார், அது கருத்தம்மாவின் படம், ஷீலாவைத் தமிழ் மக்களுக்கும் ரொம்ப பிடித்திருந்தது, …

செம்மீன் Read More »

கால்முளைத்த ஆசை

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குனர் பாலசந்தரின் தயாரிப்பில் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் சொர்ணவேல் இயக்கிய கால்முளைத்த ஆசை என்ற தொலைக்காட்சி குறுந்தொடர் வெளியானது,  திங்கள் முதல் வெள்ளிவரை ஒரு வார காலம் இந்த ஒரு கதை ஒளிபரப்பபட்டது, இதனை அப்படியே தனி ஒரு டெலிவிஷன் திரைப்படமாக வெளியிடுவது என்ற முனைப்புடன் இது உருவாக்கபட்டது. அதன் காணொளி பிரதிகள் எதுவும் என் வசமில்லை,  தற்போது எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி அவர்களால் இத்தொடர் மூன்று …

கால்முளைத்த ஆசை Read More »

பிரெஞ்சு படத்தில்

பிரபல பிரெஞ்சு இயக்குனரான Michel Spinosa வின் இயக்கத்தில் உருவான Son épouse ( “His wife”) என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் நான் பணியாற்றி உள்ளேன், இப்படத்தின் ஒரு பகுதி இந்தியாவில் படமாக்கபட்டுள்ளது, இந்தப் பகுதியின் திரைக்கதை உரையாடலை நான் எழுதியிருக்கிறேன், மிஷேல் ஸ்பினோசா நான்கு முக்கிய பிரெஞ்சுத் திரைப்படங்களை உருவாக்கியவர், அவரோடு இணைந்து பிரெஞ்சு திரைப்படத்தில் பணியாற்றியது சந்தோஷம் தரும் அனுபவமாக அமைந்திருந்தது, இரண்டு மாத காலம் பாண்டிச்சேரி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் …

பிரெஞ்சு படத்தில் Read More »

தேர்தல் ஒவியங்கள்

பிரிட்டீஷ் ஒவியரான வில்லியம் ஹோகார்த் (William Hogarth) மிக முக்கியமான ஒவியர், கேலிச்சித்திரக்காரர், காமிக்ஸ் புத்தகங்களின் முன்னோடி, சமூகவிமர்சகர், அரசியல் கேலிச்சித்திரங்களை வரைவதில் சிறப்பானவர், 1720ல் லத்தீன் ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் ஹோகார்த், செதுக்கோவியங்களில் தீவிரப்பயிற்சி பெற்று தேர்ந்த செதுக்கோவியக் கலைஞராக திகழ்ந்தார், சூதாட்டம், கள்ளச்சந்தை, மிருகங்களை சித்ரவதை செய்வது, அரசியலில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி வெளிப்படையான கண்டனத்துடன் ஒவியங்களை வரைந்திருக்கிறார் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரில் நடைபெற்ற தேர்தல் குறித்து கேலியான நான்கு செதுக்கோவியங்களை ஹோகார்த் வரைந்திருக்கிறார், 1755ல் …

தேர்தல் ஒவியங்கள் Read More »

பிறமொழிகளில்

ஜுனியர் விகடனில் நான் எழுதி வரும் எனது இந்தியாவின் முதல்பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது, புத்தகம் வெளியான நாள் முதல் இன்றுவரை தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், வாழ்த்துகள் எனக்கு வந்தவண்ணம் இருக்கின்றன, வரலாற்றை வாசிப்பதில் உள்ள விருப்பமும், அறியப்படாத உண்மைகளை நோக்கிய வாசகர்களின் தேடுதலும் இப்பத்தியைத் தொடர்ந்து எழுதுவதற்கு மிகுந்த உத்வேகம் தருகின்றது சிறப்பான வடிவமைப்புடன், நேர்த்தியாக உருவாக்கபட்டுள்ள எனது இந்தியா விகடன் பிரசுர வெளியீடாக வந்துள்ளது, எனது இந்தியாவிற்கான அறிமுகக் கூட்டம் நான்கு …

பிறமொழிகளில் Read More »

பென்குவின் தொகைநூல்

சென்னை நகரைப்பற்றி எழுத்தாளர் அம்பை தொகுத்துள்ள The Unhurried City: Writings on Chennai நூலை பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, இந்த நூலில் மிதந்து செல்லும் அறைகள் என்ற எனது கட்டுரையை அம்பை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் சென்னையின் வரலாற்றையும் சென்னை நகரைப் பற்றிய பல்வேறு நினைவுகளையும், படைப்பு இலக்கியங்களையும் உள்ளடக்கிய சிறப்பான தொகுப்பு  இது •••

பாலாவின் பரதேசி

பாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல் நாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி, தேயிலைதோட்டங்களில் புதையுண்டு போன மனிதர்களின் வாழ்க்கையை அதன் சகல …

பாலாவின் பரதேசி Read More »

ஒஹெரு வாழ்கிறாள்

இதிகாசங்களின் தனித்தன்மை உணர்ச்சிகளைக் கையாளும் முறையாகும், குறிப்பாக பிரிவை, மரணத்தை, நிர்கதியை, பெருங்கோபத்தை, அதனால் ஏற்படும் மனக்கொந்தளிப்புகளை நுட்பமாகவும் நேர்த்தியாகவும்  குரலை உயர்த்தாமல் ஆழமாக மனதில் உணர்த்துவதாகும். மகாபாரதமும் ராமாயணமும் இதில் பெரும் சாதனையைப் புரிந்திருக்கின்றன, அதனால் தான் நூற்றாண்டுகளாக அவை மீள்வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டேயிருக்கின்றன, அத்தோடு காவியநிகழ்வுகளைக் குறித்து  புதிய கண்ணோட்டத்தில் படைப்புகள் வெளியாகி வருவதும் இதன்பொருட்டே, மகாகவி பாஷனின் சமஸ்கிருத நாடகமான உறுபங்கம் (Urubhangam )துரியோதனனைப் பற்றிய பொதுப்பிம்பத்தை மாற்றியமைக்க கூடியது. இதிகாசம் காட்டும் …

ஒஹெரு வாழ்கிறாள் Read More »