கண்மூடிப் பறத்தல்

இயக்குனர் பெர்க்மென் தனது முதிய வயதில் அளித்த ஒரு நேர்காணலில் தான் கண்களை மூடிக் கொண்டால் தலைக்குள் கூட்டம் கூட்டமாக வெண்ணிறமான பறவைகள் பறப்பதாகவும், அவற்றை மனதிற்குள்ளாக எண்ணிக் கொணடிருப்பதே தனது வேலை எனவும், ஒருவேளை பறவைகள் தனது கண்ணில் இருந்து மறைந்துவிட்டால் தனது வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார், இதை வாசிக்கையில் எனக்கு ஜோர்ஜ் லூயி போர்ஹெஸின் பறவைகள் கதை நினைவிற்கு வந்து போனது, இது முதுமையின் பிரச்சனை மட்டுமில்லை, ஆழமான ஒரு ஆன்மீக அனுபவம், …

கண்மூடிப் பறத்தல் Read More »

வம்சி புத்தக வெளியீடு

குழந்தைகளுக்காக நான் தொகுத்து வெளியான கால்முளைத்த கதைகள் நூலை மூன்றாம் வகுப்பு படிக்கும் சைதன்யா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இவர் நண்பர் வினோத்தின் மகள், வினோத் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர், ஒரு எளிய பயிற்சி போலத் துவங்கி சில மாதங்களில் முழு நூலையும் சைதன்யா மொழியாக்கம் செய்து முடித்துவிட்டார். Nothing but water என்ற அந்த நூலின் வெளியீட்டு விழா வருகின்ற 9 ம் தேதி மாலை சென்னை அண்ணா சாலை புக் பாயிண்ட் அரங்கில் …

வம்சி புத்தக வெளியீடு Read More »

கடவுளின் செய்தி

இந்த உலகிற்கு கடவுள் அவ்வப்போது ஏதாவது செய்தி அனுப்பிக் கொண்டேயிருக்கிறார், அந்தச்  செய்தி, யார் வழியாக, எப்படி வருகிறது என்பதைக் கண்டு கொள்வது கடினமானது என்று ஆப்ரிக்க மக்கள் நம்புகிறார்கள் ஒரு பெண் சிங்கத்திற்கும் மான்குட்டிக்கும் இடையில் உருவான பாசத்தைப் பற்றிய  Heart of lioness என்ற அனிமல் பிளானெட்டின் ஆவணப்படத்தில் கென்யாவை சேர்ந்த ஒரு பழங்குடி மனிதன் பெண்சிங்கம் மான்குட்டியை தனது பிள்ளையைப் போல நேசிப்பது என்பது  கடவுள் இந்த உலகிற்குச் சொல்லி அனுப்பிய செய்தியே …

கடவுளின் செய்தி Read More »

தேநீர்கலை

ஒககூரா எழுதிய ஜப்பானிய நூலான The Book of tea யை வாசித்துக் கொண்டிருந்தேன், தேநீரைப்பற்றி எவ்வளவு நுட்பமாக, கவித்துவமாக, அற்புதமாக எழுதியிருக்கிறார் என்ற வியப்பு அடங்கவேயில்லை, கவிதை நூல்களை வாசிப்பதைப் போல சொல் சொல்லாக ருசித்து வாசிக்க வேண்டிய புத்தகமிது புத்தகத்தை வாசிக்க வாசிக்க உடனே டீக்குடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது, ஜப்பானியர்கள் டீக்குடிப்பதை மகத்தான தியானம் என்கிறார்கள், டீ தயாரிப்பதும், பரிமாறப்படுவதும் கலைவெளிப்பாடாகும், எனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜப்பானிய தேநீர்கடைகளில் தேநீர் குடித்திருக்கிறேன், உண்மையில் …

தேநீர்கலை Read More »

கன்பூசியஸ்

சீனாவின் புகழ்பெற்ற தத்துவ ஞானியான கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன் ஆழமற்ற, மேலோட்டமான திரைப்படம், கன்பூசியஸின் அரசியல் வாழ்க்கையைப் பிரதானப்படுத்தி அவரது ஞானத்தேடுதலை அதிகம் கண்டுகொள்ளாமல் நகர்ந்து போய்விட்டது திரைப்படம் சாக்ரடீஸ் போலவே கன்பூசியஸ் இளைஞர்களிடம் போதனை செய்திருக்கிறார், கல்விநிலையத்தை உருவாக்கி அங்கே சமகாலப் பிரச்சனைகள் குறித்த வாதபிரதிவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார், அதிகாரத்துடன் மோதி தனது கருத்துகளில் உறுதியாக நின்றிருக்கிறார். கன்பூசியஸ்க்குப் பன்முகங்களிருக்கின்றன, அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, …

கன்பூசியஸ் Read More »

பாரதி எனும் விசித்திரன்

மகாகவி பாரதியாருடன் நேரடியாகப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற 92வயது முதியவரை நேரில் சந்தித்து உரையாடும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, இவர் அம்ஷன் குமார் இயக்கிய சுப்ரமணிய பாரதி ஆவணப்படத்தில் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்போது கல்யாண சுந்தரம் உயிருடன் இல்லை, ஆனால் அவருடன் பேசிய நினைவுகள் அப்படியே பசுமையாக எனக்குள் இருக்கின்றன,  அவரைச் சந்தித்துப் பேசியதை ஆறாம்திணை என்ற இணையதளத்திற்கு ஒரு நேர்காணலாக எழுதித் தந்திருந்தேன், ஹரி கிருஷ்ணா என்ற பெயரில் வெளியாகி …

பாரதி எனும் விசித்திரன் Read More »

ஈரோடில்

தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்டுள்ள வானவன்மாதேவி மற்றும் வல்லபி இருவரும் ஆதவ் அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பினை உருவாக்கி சிறப்பாக நடத்திவருகிறார்கள் வருகின்ற 24 ஞாயிறு காலை 9.30 மணிக்கு ஈரோடில் உள்ள செங்குந்தர் திருமண மண்பத்தில் தசைச்சிதைவு நோய்குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு தேவையுள்ளவர்களுக்கான உதவிகள் செய்தல் தொடர்பான நிகழ்ச்சி  ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்வில் நானும் எழுத்தாளர் ஷாஜியும் கலந்து கொள்ள இருக்கிறோம் நண்பர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படியாக அழைக்கிறேன் நாள் : …

ஈரோடில் Read More »

பூவண்ணம் போல நெஞ்சம்

அழியாத கோலங்கள் திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பதின்வயதெனும் அடிவானத்தில் பறக்கத் துவங்கிவிடுகிறேன். நாம் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அந்த அடிவானம் மனதின் வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தபோதும் நாமாகச் சென்று அங்கே இளைப்பாறுவதற்கு முடியாது. ஒரு மாயக்கம்பளம் நம்மை அங்கே அழைத்துக் கொண்டு போனால் மட்டுமே சாத்தியம். இப்படம் அப்படியான ஒரு மாயக் கம்பளம்போல நம்மை மீண்டும் விடலைப் பருவத்தின் கனவுலகிற்குள் கொண்டு போய்விடுகிறது. கலையின் தேவையே இது போன்று நாம் திரும்பிச் செல்ல …

பூவண்ணம் போல நெஞ்சம் Read More »

புத்தக விற்பனை

சென்னை மற்றும் வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் இலக்கிய வாசகர்கள் எனது நூல்களை எப்படி வாங்குவது என்பது பற்றிய விபரங்களை அடிக்கடி மின்னஞ்சல் மூலம் கேட்டுவருகிறார்கள், அவர்களுக்கான இணைப்பு  இவை ••• “எனது இந்தியா” புத்தகம் தற்போது 600024.com இணையத்தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் உள்ள வாசகர்கள் இணையத்தின் மூலமே “எனது இந்தியா” புத்தகத்தினை வாங்கிக்கொள்ள இயலும். எனது இந்தியா புத்தகம் வாங்க: https://600024.com/store/enathu-india எனது அனைத்து புத்தகங்களையும் வாங்க: https://600024.com/store/index.php?route=special/attribute&attribute=Author&filter=S.Ramakrishnan ••• Flipkart இணைய தளத்தில் எனது …

புத்தக விற்பனை Read More »

பயிலரங்கில்

மலேசியாவில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ் இலக்கியம் கற்றல், கற்பித்தல் சார்ந்த பயிலரங்கினை ஒருங்கிணைப்பு செய்து நடத்தினேன், இந்த நிகழ்வு டைனஸ்டி ஹோட்டலில் நடைபெற்றது, மலேசியா முழுவதுமிருந்து தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் பயிலரங்கில் கலந்து கொண்டார்கள், மலேசிய தமிழ் இலக்கிய  ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.ராஜன் மற்றும் கல்வி அமைச்சகத்தைச் சார்ந்த உயரதிகாரியான பி.எம்.மூர்த்தி இருவரும் இந்த நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். கற்றல், கற்பித்தல் தொடர்பான உரைகள், உரையாடல்கள், எளிய பயிற்சிகள் என இரண்டு நாளும் …

பயிலரங்கில் Read More »