கனடா மற்றும் அமெரிக்கப்பயணம்

எனது கனடா மற்றும் அமெரிக்கப்பயணம் முழுமையாகத் திட்டமிடப்பட்டு விட்டது தற்போதைய பயணத்திட்டம் இதுவே ••• ஜுன் 14 – அதிகாலை  – சென்னை டொரன்டோ பயணம் ஜுன் 16  -இயல் விருது வழங்கும் விழா ஜுன் 20   -டொரன்டோ கலையாற்று குழுவினர்களுடன் நாடகப் பயிலரங்கம் ஜுன் 24   -டொரன்டோ திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி ஜுன் 27   -நயாகரா, அமெரிக்கப் பயணம் ஜுன் 28, 29, 30  -திருமூர்த்தி – டெட்ராய்ட் -மிஷிகன் ஸ்டேட் ஜுலை 1,2,3   -சொர்ண வேல்- ஈஸ்ட் …

கனடா மற்றும் அமெரிக்கப்பயணம் Read More »

வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை

‘வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதை நூல் சமீபத்தில் வெளியான புத்தகங்களில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது, சீனாவின் மரபு இலக்கியக் கவிதைகள் நேரடியாக சீன மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை, ஐரோப்பிய இலக்கியங்கள், ருஷ்ய இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்கு தமிழில் சீன இலக்கியங்கள் அறிமுகமானதில்லை, லூசுன் சிறுகதைகள், லாவோட்சூவின் தாவோ மொழியாக்கம், கன்ப்யூசியஸின் தத்துவங்கள், இளைஞன் ஏர்கையின் திருமணம். பெருஞ்சுவருக்குப் பின்னே. மிதந்திடும் …

வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை Read More »

புத்தனின் சித்திரக்கதை

ஜப்பானில் மட்டும் ஏன் காமிக்ஸ் அதிகம் படிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஜப்பானியர்கள் சொல்லும் பதில், ஜப்பானில் மட்டும் தான் ஒசாமு டெசூகா (Osamu Tezuka)  இருக்கிறார், இவரது சித்திரக்கதைகளை ஒரு முறை வாசித்தால் போதும் பிறகு வாழ்க்கை முழுதுவம் நீங்கள் மாங்கா வாசிப்பவராகி விடுவீர்கள் என்கிறார்கள், அது உண்மை தான் ஒசாமு டெசூகாவை மாங்காவின் கடவுள் என்று சொல்கிறார்கள். மாங்கா என்பது ஜப்பானிய காமிக்ஸ், ஐந்து முதல் ஐம்பது வரை ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவகையில் காமிக்ஸ் புத்தகங்கள் …

புத்தனின் சித்திரக்கதை Read More »

மான்வேட்டை

வனவேட்டையை ஒவியம் வரைவது ஒரு சவாலான கலை, பல நேரங்களில் ஒவியர்கள் தானும் வேட்டையாடும் மன்னருடன் அல்லது பிரபுக்களுடன்  காட்டிற்குள் நேரில் சென்று கோட்டோவியமாக வரைந்து கொண்டு பின்பு அதை வண்ணம் தீட்டுவதுண்டு மொகலாய மினியேச்சர்களில் மன்னர்களின் வேட்டையைப் பிரதானமாக கொண்ட ஒவியங்கள் நிறைய இருக்கின்றன, அக்பர் துப்பாக்கி ஏந்தி வேட்டையாடும் ஒரு ஒவியம் குறிப்பிடத்தக்கது ஐரோப்பாவில் நரிவேட்டை பிரபலமாக இருந்த நாட்களில் அது பற்றி  Richard Newtown, Jr. வரைந்த ஒவியங்களில் காணப்படும் நாய்களின் உடல்வாகு நமது …

மான்வேட்டை Read More »

பியர் பூர்தியு

பியர் பூர்தியு (Pierre Bourdieu) பிரெஞ்சின் முக்கியமான சமூகவியல் சிந்தனையாளர்,  தொலைக்காட்சியின் செயல்பாட்டின் பின்னுள்ள அரசியலை, பார்வையாளனின் உளவியலை, பொறுப்புணர்வைக் குறித்து எழுதியுள்ள  தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் என்ற புத்தகம் மிக முக்கியமான ஒன்று, இந்திய மொழிகளில் தமிழில் மட்டும் தான் இந்த நூல் வெளியாகி உள்ளது, பிரெஞ்சில் இருந்து நேரடியாக இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம் 2004ல் வெளியிட்டுள்ளது, சராசரியாக ஒரு பார்வையாளன் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து மணி நேரங்களாவது தொலைக்காட்சி …

பியர் பூர்தியு Read More »

கம்பளிபூச்சியின் மனைவி

நான்காவது முறையாக நேற்றிரவு CATERPILLAR என்ற ஜப்பானிய படத்தைப் பார்த்தேன், சமீபத்தில் ஒரு திரைப்படம் என்னை இவ்வளவு உலுக்கியதில்லை, சென்னை திரைப்பட விழாவில் இடம்பெற்ற முக்கியமான படம் என்று சொல்லி ஒரு நண்பர் அதன் டிவிடியை தந்திருந்தார், கடந்த ஒரு மாத காலத்தில் இதை நான்காவது முறையாகப் பார்த்துவிட்டேன் 1930களில் நடைபெற்ற ஜப்பான் சீன யுத்தத்தில் கலந்து கொண்ட குரோகவா என்ற ஜப்பானிய ராணுவ வீரன் பெண்களைத் தாக்கி வன்புணர்ச்சி செய்து கொல்கிறான், ரத்தவெறி அவனைப் பிடித்தாட்டுகிறது, …

கம்பளிபூச்சியின் மனைவி Read More »

அறியப்படாத தீவின் கதை

ஜோஸே ஸரமாகோ, (José Saramago) நோபல்பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளர், இவரது அறியப்படாத தீவின் கதை மிகச்சிறிய நாவல், 55 பக்கங்களே உள்ளது, கவிஞர் ஆனந்த் மொழியாக்கத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது ஸரமாகோவின் எழுத்துலகம் தனித்துவமானது, முற்றுப்புள்ளியில்லாத நீண்டவாக்கியங்கள், உரையாடல்களில் யார் யாரோடு பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியாத ஊடுபாவும் முறை, வியப்பூட்டும் சம்பவங்கள், மாய நிகழ்வுகள், கவித்துவமான விவரணைகள் என்று வாசகனை எழுத்தாளனுக்கு நிகராக வேலை செய்ய வைப்பவர் ஸரமாகோ, …

அறியப்படாத தீவின் கதை Read More »

திரைப்படக் கலந்துரையாடல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் திரைப்படக் கலந்தாய்வு குழு மாற்றுச்சினிமாவுக்கான கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வின் முதல் திரைப்படமாக பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 திரைப்படம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வருகிற 19ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில்,சென்னை வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்கத்தில் நடக்கவிருக்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “வழக்கு எண் 18/9” திரைப்படத்தில் திரைக்கதை யுக்திகள், படிமங்கள் என்ற தலைப்பில் நான் …

திரைப்படக் கலந்துரையாடல் Read More »

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

சிறுகதை. தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20  ஞாயிற்றுகிழமை, 1998, அப்போது அவளுக்கு வயது இருபத்திமூன்று, கோகிலவாணியை இப்போது யாருக்கும் நினைவிருக்காது, ஒருவேளை நீங்கள் தினசரி பேப்பரைத் தவறாமல் படிக்கின்றவராகயிருந்தால் உங்கள் நினைவின் ஏதாவது ஒரு மூலையில் அவள் பெயர் ஒட்டிக் கொண்டிருக்க கூடும், ஆனால் தினசரி செய்திகளை யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவை சாலைவிபத்துக்களைக் …

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது Read More »

புரூகேலின் வேட்டைக்காரர்கள்

பீட்டர் புரூகேலின் (Pieter  Bruegel)  The Hunters in the Snow ஒவியத்தின் பிரதி ஒன்றை என் அறையில் மாட்டி வைத்திருக்கிறேன், ஒவ்வொரு நாளும் காலையில் அதைச் சில நிமிஷங்கள் பார்த்துக் கொண்டேயிருப்பது எனது வழக்கம். அது தான் எனது தியானம் மெல்ல அந்த ஒவியம் என் மனம் முழுவதும் நிரம்பும் வரை அதைப்பார்த்தபடியே இருப்பேன், ஒவியத்திலிருந்து கிடைத்த குளிர்ச்சியும், சில்லிடலும் மனதை மலர்ச்சி கொள்ளச் செய்யும், பின்பு அன்றாடப் பணிகளை நோக்கித் திரும்பிவிடுவேன், அந்த ஒவியம் …

புரூகேலின் வேட்டைக்காரர்கள் Read More »