கனடா மற்றும் அமெரிக்கப் பயணம்
இயல்விருது பெறுவதற்காக கனடா செல்ல இருக்கிறேன், டொரன்டோ நகரில் ஜுன் 16 அன்று நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறேன், அதை ஒட்டிப் பத்து நாட்கள் கனடாவில் இருக்கிறேன், பின்பு அங்கிருந்து அமெரிக்கா சென்று மூன்று வார காலம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன் கனடாவில் நடைபெறும் நிகழ்வுகளை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் மற்றும் நண்பர் செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்கிறார்கள் அமெரிக்கப் பயணத்தை பாஸ்டன் பாலாஜி ஒருங்கிணைப்பு செய்கிறார் இன்னமும் பயணத்திட்டம் முழுமையாக வடிவம் பெறவில்லை, …