பிறந்த நாள்

இன்று எனது பிறந்த நாள், இதற்காக மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ***

அருவிகளின் லீலை

நடந்தாய் வாழி காவேரி என்று தி.ஜானகிராமன் காவேரி ஆற்றின் பாதையெங்கும் நதியின் புகழ்பாடியபடியே பயணித்த அனுபவ நூல் ஒன்றை வாசித்திருக்கிறேன் அது  தந்த உத்வேகத்தில் தமிழ்நாட்டில் ஓடக் கூடிய ஏழு நதிகளையும் அதன் வழியெங்கும் பயணம் செய்து பார்த்திருக்கிறேன்.  ஏரி, குளம், கண்மாய், அணைகள் என்று தமிழக நீர்நிலைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக நான்கு ஆண்டுகள் அலைந்து திரிந்திருக்கிறேன், இந்தப் பயணத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டைப் பற்றி நான் கொண்டிருந்த மனச்சித்திரமே மாறிவிட்டது. தமிழ்நாடு வறுமையானது என்ற எண்ணம் அடியோடு …

அருவிகளின் லீலை Read More »

சமணச் சிற்பங்கள்

இரா.பானுகுமார், சென்னை இரா. பானுகுமார், சமணச் சிற்பங்கள் குறித்து அருமையான விளக்க கட்டுரையை எழுதியிருக்கிறார்,அவரது வலைத்தளத்தில் சமணம் குறித்து விரிவான கட்டுரைகள் உள்ளன, கட்டுரையின் முக்கியத்துவம் கருதி அதை மீள்பிரசுரம் செய்கிறேன். ••• பல சொற்கள் உணர்த்தாததை ஒரு படம் உணர்த்தும் என்பார்கள். சிற்பங்களும் அவ்வாறே. சமயச் சிற்பங்களும், சித்திரங்களும் அந்தந்த சமயங்களின் பிரதிபலிப்பு என்றால் அதுமிகையாகாது. இந்திய சமய வரலாறும் உணர்த்துவதும் அதுவேயாம். இந்திய வரலாற்றை ஆராயும்போது உருவ வழிபாடு என்பது சிரமண மதங்களிலிருந்தே தொடங்குகிறது. …

சமணச் சிற்பங்கள் Read More »

புன்னகை விற்பனைக்கு

எனது காதல்மேஜை என்ற குறுங்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட குறும்படமிது, நித்திலன் இயக்கிய இப்படம் கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது *** புன்னகை விற்பனைக்கு — https://www.youtube.com/watch?v=rfpG8YlhHEE

சிங்கப்பூர் பதிவு

சிங்கப்பூரில் நான் நடத்திய சிறுகதைப் பயிலரங்கு பற்றி THE WALL STREET JOURNALல் வெளியாகி உள்ள கட்டுரை https://blogs.wsj.com/searealtime/2012/04/09/creating-the-next-generation-of-tamil-storytellers/ •••

இணையத்தாக்குதல்

எனது இணையம் சில விஷமிகளால் தொடர்ந்து வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது, இது போலவே எனது மின்னஞ்சலுக்குப் போலி பெயர்களில் மின்னஞ்சல் அனுப்பி வக்ரபுத்தி கொண்ட சிலர் விளையாடுகிறார்கள், இரண்டையும் பற்றி முழுமையான தகவல்கள், அவர்களின் ஐபி முகவரி திரட்டப்பட்டுள்ளது, இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் முறையான புகார் ஒன்றினை அளிக்க இருக்கிறேன், கூடுதலாக சைபர் கிரைம் பிரிவிலும் எனது வலைத்தளம் மற்றும் மெயிலில் புகுந்து விளையாடும் நபர்கள் பற்றி தனிப்புகார் அளிக்க இருக்கிறேன், விரைவில் அவர்கள் …

இணையத்தாக்குதல் Read More »

சிங்கப்பூர் செல்கிறேன்

சிங்கப்பூரில் நடைபெறும் சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக இன்றிரவு செல்கிறேன், சிங்கப்பூரில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் ஆதிமூலம் 81500707 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் பத்தாம் தேதி சென்னை திரும்புகிறேன் ***

முல்லைபுரத்து மனிதர்கள்

White Man Falling என்ற நாவலை வாசித்தேன். Mike Stock என்ற பிரிட்டீஷ் இளம் எழுத்தாளர் எழுதிய இந்த நாவல் தமிழ் குடும்பத்தின் கதையை விவரிக்கிறது, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ்வாழ்க்கையைப்  பற்றிய நாவல் என்பதால் படு சுவாரஸ்யமாக இருக்கிறது, 2006ல் வெளியான இந்நாவலுக்கு சிறந்த முதல்நாவலுக்கான Goss Award  பெற்றிருக்கிறார் மைக் ஸ்டாக்ஸ் இந்திய ஆங்கில நாவல்களின் கதை சொல்லும் முறையை ஒத்த கதைசொல்லலே மைக் ஸ்டாகிஸிடம் உள்ளது, ஆனால் இந்திய ஆங்கில எழுத்தாளர் பலரிடமும் காணமுடியாத …

முல்லைபுரத்து மனிதர்கள் Read More »

பயம் வெறும் கற்பனையில்லை

அகிரா குரசேவா படங்களில் அதிகம் பேசப்படாத படம்,  1955ல் வெளியான I Live In Fear , இதே படம் Record of a Living Being என்ற தலைப்பிலும் வெளியாகி உள்ளது,  அணுஆயுத வீச்சால் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியில் பல லட்சம் மக்கள் அழிவிற்கு உள்ளானார்கள், யுத்தம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னும் அணுஆயுதங்கள் குறித்த பயம் ஜப்பானின் எளிய மனிதர்கள் மனதிலிருந்து மறையவேயில்லை என்பதை மிக வலிமையாக, உண்மையாக குரசேவா இப்படத்தில் சொல்லியிருக்கிறார், செவன் சாமுராயின் …

பயம் வெறும் கற்பனையில்லை Read More »

வைரஸ் தாக்குதல்

எனது இணையதளத்தை யாரோ ஹேக் செய்து வைரஸைப் புகுத்தியிருக்கிறார்கள், அதனால் கடந்த இரண்டு நாட்களாக இணையதளம் முடங்கிப்போனது இது குறித்து நிறைய நண்பர்கள், வாசகர்கள், தொலைபேசியிலும் மெயிலிலும் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தது மிகவும் நெகிழச் செய்தது. தற்போது இணையதளம் சரிசெய்யப்பட்டு விட்டது இதற்கு உறுதுணை செய்த லீலைராஜன் மற்றும் அவரது தொழில்நுட்பக் குழுவினர்களுக்கு நன்றி