சிங்கப்பூர் பயணம்

தங்கமீன் பதிப்பகம் சார்பில் நடைபெற உள்ள சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் 6 முதல் 10 வரை நான்கு நாட்கள் சிங்கப்பூர் செல்ல இருக்கிறேன் நண்பர் பாலு மணிமாறன் இதனை ஒருங்கிணைக்கிறார். ஏப்ரல் 7 மற்றும் 8 இரண்டு நாட்களும் சிறுகதைப் பயிலரங்கு நடைபெறுகிறது.

லூயி மாலின் மதராஸ்

பிரெஞ்சுசினிமா இயக்குனரான லூயிமால் (Louis Malle) இந்தியா பற்றி ஆறு மணி நேரம் ஒடக்கூடிய விரிவான ஆவணப்படம் ஒன்றினை இயக்கியிருக்கிறார், 1969 ஆண்டு வெளியான Phantom India என்ற இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக தமிழகக் கலைகள் மற்றும் வாழ்க்கை முறை பற்றி நுண்மையாகப் பதிவு செய்திருக்கிறார் “Things Seen in Madras” என்ற ஐம்பது நிமிசங்கள் ஒடும் காட்சிகள் தமிழகம் குறித்த அரிய ஆவணப்பதிவுகளாகும், குறிப்பாக மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின்  அறுபத்துமூவர் தேரோட்டம், சோவின் துக்ளக் நாடகத்தை …

லூயி மாலின் மதராஸ் Read More »

ரயிலேறிய கிராமம்

எதிர்பாராமல் வாசிக்க கிடைக்கும் நல்லபுத்தகம் மனதை மிகுந்த உற்சாகம் கொள்ள வைத்துவிடும்,  டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக வாங்கிய THIRD CLASS TICKET என்ற Heather Wood ன் புத்தகத்தை வாசித்து முடித்தபோது இத்தனை நாள் இதை எப்படித் தவறவிட்டிருந்தேன், அற்புதமான புத்தகம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. இது ஒரு உண்மைச் சம்பவம் என்பது கூடுதலாகப் புத்தகத்தின் மீது மதிப்பு வரும்படியாக செய்திருந்தது, கடந்த இரண்டு நாட்களாகவே இதைப்பற்றி சந்திக்க வரும் நண்பர்கள் பலருடன் பேசிக் …

ரயிலேறிய கிராமம் Read More »

தியான நடனம்

ருஷ்ய மெய்ஞானியான  குர்ஜீப்பின்(Gurdjieff) இளமைக்காலம் குறித்த Meetings with Remarkable Men படத்தை மூன்று நாட்களுக்கு முன்பாகப் பார்த்தேன், 1979ம் ஆண்டு வெளியான இப்படத்தை பீட்டர்புரூக் இயக்கியிருக்கிறார், இவர் மகாபாரதத்தை நாடகமாகவும் திரைப்படமாகவும் இயக்கியவர், நவீன நாடக உலகில் தனிப்பெரும் ஆளுமை,  குர்ஜீப்பின் தத்துவச் செறிவான நினைவலைகளை பீட்டர்புரூக் ஆழ்ந்து புரிந்து கொண்டு சிறப்பாக படமாக்கியிருக்கிறார். குர்ஜீப்பை எனது கல்லூரி நாட்களிலே படித்திருக்கிறேன், கவிஞர் தேவதச்சன் அறிமுகம் செய்து வைத்து Meetings with Remarkable Men நூலை …

தியான நடனம் Read More »

தனித்திருத்தல்

டாம் பிரௌன் ஜுனியரின் Grandfather  புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன், அமெரிக்காவில் வாழும் இயற்கையியலாளரான டாம் பிரௌன் தனது நண்பனின் தாத்தாவும் Lipan Apache இனத்தைச் சேர்ந்த பூர்வகுடி இந்தியருமான Stalking Wolf தங்களுக்கு கற்றுதந்த வாழ்க்கைப் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை புரிந்து கொள்ளும் புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகிறார், இந்தப் புத்தகம் Stalking Wolf  தங்களுக்கு என்ன கற்றுதந்தார், அதை எப்படி தாங்கள் புரிந்து கொண்டோம், தாத்தாவின் தனித்துவங்கள் எவை என்பதைப் பற்றி பேசுகிறது, இந்த …

தனித்திருத்தல் Read More »

விகடன் ஒவியக்கண்காட்சி

தானே புயலால் பாதிக்கபட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக விகடன் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து நிதிவுதவி பெற்று மறுசீரமைப்புப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, இதன் மூலம் தானொரு சமூகப்பொறுப்புமிக்க ஊடகம் என்பதை விகடன்  நிரூபணம் செய்திருக்கிறது, அதற்காக விகடன் நிறுவனத்திற்கும், துணைநிற்கும் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தானே புயலின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு நிதி திரட்ட ஒரு மாபெரும் ஒவியக்கண்காட்சி ஒன்றினை சென்னை லலித்கலா அகாதமியில் விகடன் நடத்திவருகிறது, …

விகடன் ஒவியக்கண்காட்சி Read More »

உளவாளிகளின் உலகம்

நேற்று சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் Tinker Tailor Soldier Spy என்ற பிரிட்டீஷ் திரில்லர் படம் திரையிடப்பட்டது, அத்திரைப்படம் பற்றி நான் ஒரு விரிவுரை நிகழ்த்தினேன், ப்யூஜி பிலிம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது என்னோடு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு படத்தின் ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசினார், முன்னதாக மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்த ஏழு நிமிஷக் குறும்படம் ஒன்று ஒளிபரப்பபட்டது, சர்க்கஸ் என்ற பிரிட்டீஷ் …

உளவாளிகளின் உலகம் Read More »

சிறியதே அழகு

Man is small, and, therefore, small is beautiful. டாக்டர் ஈ.எப்.ஷுமாஸர் எழுதிய Small is Beautiful உலகின் சிறந்த நூறு புத்தகங்களில் ஒன்று, தற்போது அந்நூல் சிறியதே அழகு எனத் தமிழில் எதிர்வெளியிடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது, யூசுப் ராஜா  மொழியாக்கம் செய்திருக்கிறார் சரளமான மொழிபெயர்ப்பு, அச்சில் தான் ஏகப்பட்ட குளறுபடிகள், பக்கம்மாறியிருப்பதும்,  ஒரு பக்கம் அச்சிட்டது மறுபக்கம் தெரிவதுமாக உள்ளது, இதற்காகவே முதல்தடவை வாங்கிய பிரதியை கடையில் கொடுத்து வேறு பிரதி மாற்றி வாங்கினேன், …

சிறியதே அழகு Read More »

முத்துகிருஷ்ணனின் பயணம்

அ.முத்து கிருஷ்ணன் தமிழில் எழுதி வரும் இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயம் என பல்வேறு தளங்களில் எழுதிவருகிறார். நீயா நானா, புதுப் புது அர்த்தங்கள் என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து காத்திரமானவிவாதங்களை மேற்கொண்டு வருபவர். எழுத்தாளராக மட்டுமின்றி ஒரு தீவிரமான சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து தனது கள ஆய்வுகளுக்காக இந்தியாவெங்கும் சுற்றிவருபவர். கடந்த ஆண்டு இவர் புதுதில்லியில் இருந்து தரை வழியாக 10 ஆயிரம் கிலோ …

முத்துகிருஷ்ணனின் பயணம் Read More »

புத்தகங்களின் ஊடே

உலகப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக புதுடெல்லி சென்று இப்போது தான் திரும்பினேன், 1500க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள்,  நாள் ஒன்றுக்கு ஐந்து மணி நேரம் புத்தகங்களுக்கு ஊடாக சுற்றியலைந்தேன்,  பிரகதி மைதானில் 14 வளாகங்களில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது, உலக மொழிகளில் பெரும்பான்மையினர் இங்கே தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள், குழந்தைகளுக்குத் தனிப்பிரிவு அமைக்கபட்டிருந்தது. இந்திய சினிமா குறித்த கருத்தரங்கம், மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கம், பிறமொழி படைப்புகளுக்கான உரிமை பெறுவது என்று தினம் ஒரு நிகழ்வு …

புத்தகங்களின் ஊடே Read More »