கலையின் மீதான பசி

ஃபிரான்ஸ் காஃப்காவின் பட்டினிக்கலைஞன் சிறுகதையில் சர்க்கஸ் ஒன்றில் ஒரு மனிதன் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறான். அவனொரு பட்டினிக்கலைஞன். அதாவது பணம் செலுத்தும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகப் பட்டினி கிடப்பவன். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அவனைப் போன்ற பட்டினிக்கலைஞர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் பல்வேறு நகரங்களில் காட்சி நடத்தியிருக்கிறார்கள். பொதுவாகத் திருவிழா, கண்காட்சியிலோ, அல்லது அரங்கம் ஒன்றிலோ இவர்களின் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்குக் கட்டணம் உண்டு. இவர்கள் அதிகப் பட்சம் நாற்பது நாட்கள் வரை பட்டினி கிடப்பதுண்டு. இந்த நிகழ்ச்சிக்காகப் பெரிய …

கலையின் மீதான பசி Read More »

எதுவும் குற்றமில்லை

லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளில் மோசமான மேயரின் கதாபாத்திரம் தொடர்ந்து இடம்பெறுகிறது. அங்குள்ள அரசியல் சூழலின் அடையாளமது. Herod’s Law திரைப்படம் அதிகாரத்திற்கு வரும் எளிய மனிதர் எப்படி மோசமானவராக மாறுகிறார் என்பதை விவரிக்கிறது. லூயிஸ் எஸ்ட்ராடா இயக்கிய Herod’s Law மெக்சிகோவின் PRI கட்சியின் ஆட்சியின் போது நடந்த ஊழல் பற்றிய அரசியல் நையாண்டி படமாகும். 1940 களில் சான் பெத்ரோ நகரின் மேயர் மிக மோசமான முறையில் கொல்லப்படுகிறார். அங்கிருந்து படம் துவங்குகிறது. அந்த நகரில் …

எதுவும் குற்றமில்லை Read More »

கவளம்

எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம். இதன் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை சென்னை சிஐடி நகரிலுள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது இந்த நிகழ்வில் எனது நான்கு நூல்கள் வெளியாகின்றன. கவளம் நூலிற்கான புதிய அட்டை ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். மிக அழகாக உள்ளது.

தபால் பெட்டி எழுதிய கடிதம்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24) அதில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன. சிறார்களுக்காக நான் எழுதியுள்ள புத்தகம் தபால் பெட்டி எழுதிய கடிதம். இக்கதை தபால்பெட்டிக்கும் ஒரு பள்ளிச் சிறுவனுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பினைப் பேசுகிறது ஆயிரமாயிரம் தபால்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த தபால்பெட்டி தன் வாழ்நாளில் ஒரேயொரு கடிதம் எழுதுகிறது அந்தக் கடிதம் வழியாக அதன் கடந்தகால நினைவுகள் விவரிக்கபடுகின்றன.

கற்பனை அலைகள்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24) அதில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன. எனது கட்டுரைத்தொகுப்பான கற்பனை அலைகள் உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளைப் பற்றியது. எழுவதும் படிப்பதும் எனது இரண்டு சிறகுகள். தொடர்ந்து உலக இலக்கியத்தினை வாசித்து வருபவன் என்ற முறையில் சர்வதேச அளவிலான சமகால இலக்கியங்களையும், சிறந்த செவ்வியல் படைப்புகளையும் நான் அறிவேன். வாசிப்பின் வழியே நான் அடைந்த அனுபவத்தையும், …

கற்பனை அலைகள் Read More »

பெட்ரோ பரமோ

யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பரமோ நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இப்படம் Netflix ல் காணக்கிடைக்கிறது. இதே நாவலை மையமாகக் கொண்டு கறுப்பு வெள்ளையில் உருவாக்கபட்ட படத்தைப் பார்த்திருக்கிறேன். பெட்ரோ பரமோ லத்தீன் அமெரிக்க நாவல்களில் ஒரு கிளாசிக். இப்படத்தின் இயக்குநர் ரோட்ரிகோ ப்ரிட்டோ ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் என்பதால் படத்தைக் காண ஆவலாக இருந்தேன். ருல்ஃபோவின் இந்த நாவல் 1955ம் ஆண்டு வெளியானது. இன்று வரை அந்த நாவல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. You will hear the …

பெட்ரோ பரமோ Read More »

ஒளியின் கைகள்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24) இந்த விழாவில் ஒளியின் கைகள் என்ற  கட்டுரைத்தொகுப்பு வெளியாகிறது. இது உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். ஒளி எப்போதும் தூய்மையின், கருணையின், அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அற்புதங்கள் ஒளியால் அடையாளப்படுத்தபடுகின்றன. எல்லா சமயங்களும் ஒளியைக் கொண்டாடுகின்றன. ஒளி ஒவ்வொன்றின் தனித்தன்மையை நமக்குப் புலப்படவும் புரியவும் வைக்கிறது. இருள் என்பது …

ஒளியின் கைகள் Read More »

டிசம்பர் 25 – புத்தக வெளியீட்டு விழா

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24) இந்த விழாவில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன. இதில் கவளம் என்ற புதிய சிறுகதைத் தொகுப்பு வெளியாகவுள்ளது. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளன. இலக்கியம் என்பது சாதாரண மனிதர்களிடமுள்ள அசாதாரணமானவற்றைக் கண்டுபிடிப்பது, அவற்றைச் சாதாரண வார்த்தைகளால் அசாதாரணமான அனுபவமாக மாற்றுவது என்கிறார் பாஸ்டர்நாக். இக்கதைகளும் அதையே மேற்கொள்கின்றன. சதுரங்க விளையாட்டினைப் போலவே …

டிசம்பர் 25 – புத்தக வெளியீட்டு விழா Read More »

சிறார் கதைகள்

புதுக்கோட்டையிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பாக எனது எட்டு சிறார் நூல்களை மாணவர்கள் வாசித்து உரையாடுகிறார்கள். இந்த நிகழ்வு 09.11.24 சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். பள்ளி முதல்வரும் எனது நண்பருமான தங்கம் மூர்த்தி அவர்களுக்கு அன்பும் நன்றியும். இந்த நூல்களைப் பெற விரும்புகிறவர்கள் தேசாந்திரி பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளவும் தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி (044)- 23644947. …

சிறார் கதைகள் Read More »

சில புதிர்கள்

புதிய குறுங்கதை. அப்பாவிற்கு ஒரு பழக்கமிருந்தது. சில நாட்கள் தந்திமரத்தெருவில் இருந்த கோல்டன் டெய்லர்ஸ் கடையின் முன்பாகப் போய் நின்று கொள்வார். அந்த டெய்லரிடம் எந்த உடையும் அவர் தைக்கக் கொடுக்கவில்லை. ஆனால் எதற்கோ காத்திருப்பவர் போல அங்கே நின்றிருப்பார். அவரது பார்வை தையல் இயந்திரத்தின் மீது நிலைகுத்தியிருக்கும். கடைக்குள் வரும்படி டெய்லர் விஜயன் அழைத்தாலும் வர மாட்டார். அந்தக் கடையினுள் என்ன பார்க்கிறார் என்று தெரியாது. வீட்டிலிருந்து யாராவது போய் எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டாலும் …

சில புதிர்கள் Read More »