கேளா வரம்
புதிய சிறுகதை அந்த நபர் ரயிலில் பாஸ்கரனுக்கு எதிராக அமர்ந்திருந்தார். இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியின் முதல்பகுதியது. மற்ற இரண்டு பயணிகள் வரவில்லை. ஒருவேளை விழுப்புரத்தில் ஏறுவார்களோ என்னவோ. அந்த நபர் ஆங்கில வார இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்.. அந்த நபருக்கு ஐம்பது வயதிற்குள் இருக்கக் கூடும்.. சிவப்பான, மெலிந்த உடல். பட்டையான கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி. இடது புருவத்தில் ஒரேயொரு நரைமயிர் நீட்டிக் கொண்டு தெரிந்தது. சிகரெட் பிடிப்பவர் போலத் தோலுரித்த உதடுகள். …









