தமிழ் சங்கம் விருது

 இந்த ஆண்டிற்கான தமிழ் சங்கம் விருது எனக்கு வழங்கப்பட உள்ளதாக சேலம் தமிழ் சங்கம் அறிவித்துள்ளது. இவ்விருது பதினைந்தாயிரம் ரொக்கமும் நினைவுப்பரிசும் உள்ளடக்கியது   நவீன தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 26ம் தேதி ஞாயிறு காலை 10 மணி அளவில் சேலத்தில் உள்ள தமிழ் சங்க கட்டிடத்தில் நடைபெற உள்ளது. விருப்பமான நண்பர்கள் வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி …

தமிழ் சங்கம் விருது Read More »

கதை கேளுங்கள்

தமிழ் ஸ்டுடியோ இணைய தளத்தில் கதை சொல்லி என்ற புதிய பகுதி செயல்பட்டு வருகிறது, இதில் ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குப் பிடித்தமான இரண்டு கதைகளை அவர்களது குரலில் பேசிப் பதிவு செய்து வருகிறார்கள், மிகுந்த பாராட்டிற்கு உரிய முயற்சியது இதில் எனது நண்பரும் தமிழின் முக்கிய கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனக்குப் பிடித்த கதையாக எனது மிருகத்தனம் என்ற சிறுகதையைச்  சொல்லியிருக்கிறார், மிக நன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் தமிழ் ஸ்டுடியோ நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் …

கதை கேளுங்கள் Read More »

காலத்தின் ஜன்னல்

இலக்கியத்தை வாசிப்பவர்கள் சொற்களின் வழியே ஒரு பிம்பத்தை தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள். அதில் காட்சிபடுத்துதல் தான் வாசகனின் வேலை. அதே நேரம் சினிமாவோ காட்சிகளை முன்வைக்கிறது. அதை தனது மனதிற்குள் சொற்களாக, நினைவுகளின் பகுதியாக மாற்றிக் கொள்வதை பார்வையாளர்கள் செய்கிறார்கள். இந்த எதிர்நிலையைப் புரிந்து கொண்டுதான் நான் படங்களை உருவாக்குகிறேன். இங்கே காட்சிகளின் வேலை மனதில் ஒளிந்துள்ள சில சொற்களை மீட்டு எடுப்பதாகும். இவை தினசரி நாம் பயன்படுத்தும் சொற்களில்லை. மாறாக  விசேசமானவை. அரிதான தருணங்களில் …

காலத்தின் ஜன்னல் Read More »

பாலஸ்தீனப் பயணம்

எனது நண்பரும் தீவிர அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான மதுரையைச் சேர்ந்த அ.முத்துகிருஷ்ணன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார், பாலஸ்தீனத்தின் நெருக்கடிநிலையை உலகின் கவனத்திற்கு எடுத்துரைக்கவும் காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஆசியாவின் 18 நாடுகளைச் சேர்ந்த 500 பேர் பாலஸ்தீனம் நோக்கி ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். டிசம்பர் 2 தேதி டெல்லியில் இருந்து கிளம்பும் இந்தப் பயணம் ஜனவரி 4ம் தேதி நிறைவுபெறுகிறது, தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை …

பாலஸ்தீனப் பயணம் Read More »

நிசப்தமான அலைகள்

தினசரி திரைப்படங்களைக் காணும் போது வெகு அரிதாகவே  ஒன்றிரண்டு படங்கள் நம்மை புரட்டிப் போட்டுவிடுகின்றன. அது போன்ற படங்களைப் பார்த்து முடித்த சில நாட்களுக்கு வேறு படங்களைக் காண்பதற்கு விருப்பமேயிருக்காது. அந்த மனநிலையில் அதே படத்தை அடுத்தடுத்து நாலைந்து முறை பார்ப்பது கூட  நடந்திருக்கிறது. சமீபத்தில் அப்படி நான் பார்த்து வியந்த திரைப்படம் டகாசி கிடானோவின் A Scene at the Sea சமகால ஜப்பானிய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர் டகாசி கிடானோ.( Takeshi Kitano)  …

நிசப்தமான அலைகள் Read More »

குதிரைகள் பேச மறுக்கின்றன.

  சிறுகதை ஞாயிற்றுகிழமை காலையில் அப்பா வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பும் போது கையில் ஒரு குதிரையைப் பிடித்தபடியே நடந்து வந்திருந்தார். என் வீட்டின் வாசல்கதவை திறந்து அவர் நிதானமாக  குதிரையை தென்னை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு எதுவும் நடக்காதவரைப் போல சுவரோரம் உள்ள தண்ணீர் குழாயில் காலைக் கழவிவிட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு நாளிதழைப் புரட்டி படிக்கத் துவங்கினார். சவரம் செய்தபடியே அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு குழப்பமாக இருந்தது. நான் ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தேன். குதிரையே தான். …

குதிரைகள் பேச மறுக்கின்றன. Read More »

திரையும் கதையும்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான எனது நேர்காணலின் முதற்பகுதி •• சினிமா எக்ஸ்பிரஸின் தீபாவளி சிறப்பிதழ்க்காக, திரைப்படக் கல்லூரி மாணவர்களோடு ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினால் என்ன? என்று தோன்றியது. அதன்விளைவாக எஸ்.ராமகிருஷ்ணன் உடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தோம். சென்னை – கே.கே.நகர், பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகேயுள்ள “டிஸ்கவரி புக் பேலஸி’ல், ஒரு காலைப்பொழுதில் மனம் மயக்கும் புத்தகங்களோடும், ஆர்வம் தாங்கிய கேள்விகளோடு வந்திறங்கிய திரைப்படக்கல்லூரி மாணவர்களோடும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னை பிணைத்துக் கொண்டார் விரிவான …

திரையும் கதையும் Read More »

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

என் ஆதர்ச எழுத்தாளரான அ.முத்துலிங்கம் அவர்கள் எனது சிறுகதைத்தொகுப்பான ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ பற்றி எழுதிய கட்டுரை. •• தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி அப்பூதியடிகள் என்ற தொண்டரைப்பற்றி பெரியபுராணத்தில் படித்திருப்போம். அவர் திருநாவுக்கரசரில் அளவில்லாத பக்தி கொண்டவர். திருநாவுக்கரசரை அவர் பார்த்தது கிடையாது, கேள்விப்பட்டதுதான். ஆன்மீக குருவாக அவரை வரித்து நிறைய தானதருமங்கள் செய்து வந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் ‘திருநாவுக்கரசர்’ என்றே பெயர் சூட்டினார். ஆடு மாடுகளுக்கும் அதே பெயர்தான். திருநாவுக்கரசர் பெயரால் ஒரு தண்ணீர் …

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை Read More »

கலந்துரையாடல்

களம் இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சியில் நவம்பர் 11 மாலை ஆறுமணிக்கு கதைக்குள் வராதவர்கள் என்ற தலைப்பில் நான் பேச இருக்கிறேன், அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு உள்ளது, விருப்பமான நண்பர்கள் யாவரும் வரலாம் நாள் :  11.11.10 இடம் :  ரவி மினி ஹால், கரூர் பைபாஸ் சாலை, திருச்சி நேரம் : மாலை 6 மணி

மூன்று இணைய இதழ்கள்

இணையத்தில் நம்பிக்கையூட்டும் விதமாக தொடர்ச்சியாக செயல்படும் சில இணைய இதழ்களைக் குறிப்பிட விரும்புகிறேன், சொல்வனம் மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் , 36 இதழ்கள் வெளியாகி உள்ளன, சிறப்பான மொழிபெயர்ப்புகள். அரசியல், அனுபவம்.விஞ்ஞானம். உலக சினிமா மற்றும் நுண்கலை சார்ந்த கட்டுரைகள் எனத் தனித்துவத்துடன் வெளியாகி வருகிறது. சிற்றிதழ் மரபின்  அதே தீவிரம் மற்றும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் மிக முக்கியமான இணைய இதழ் https://solvanam.com/ வல்லினம் மலேசியாவிலிருந்து நவீன தமிழ் இலக்கியம் சார்ந்து காத்திரமான படைப்புகள். …

மூன்று இணைய இதழ்கள் Read More »