எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

ஜெய மோகன் முகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய  பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும் அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களாக் காட்சிகள் வேட்டைக் காட்சிகளில் கூட. முகலாய -சூபி மரபில் ரோஜா என்பது ஒரு மலர் மட்டுமல்ல. எரியும் பாலைவெளியில் அப்படிப்பட்ட ஒரு செடி வளர்ந்து அவ்வழகிய மலரை எப்படி உருவாக்குகிறது? முற்றிலும் கைக்குச் சிக்கக்கூடிய ஜடப்பொருளான மலருக்குள் இருந்து தொடமுடியா அற்புதமான மணம் எப்படி வந்தது? இப்பிரபஞ்சம் …

எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு Read More »

அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதை

எஸ்.ஏ. பெருமாள் நெடுங்குருதிக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் என்ற இந்தப் பெரிய நாவல் வந்திருக்கிறது கற்பனை செய்து காண முடியாத பழைய நூற்றாண்டுகளின் வாழ்வை, அதுவும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. 360  பெரிய பக்கங்களைக் கொண்ட யாமத்தில் நான்கு நூற்றாண்டு வரலாற்றின் வழியே மனித வாழ்வு பயணிக்கிறது. மனிதர்களின் அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதைகளை எழுதுகிறது. இந்திய மரபின் அதிசயங்கள் நிறைந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்த …

அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதை Read More »

காட்சிகளின் புதிர்பாதை

கிறிஸ்தபோர் நோலனின் இன்செப்ஷன் (Inception) திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு நிமிசம் எது நிஜம் எது கனவு என்று தெரியாதபடி நகரம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கனவிற்குள் போய் எண்ணங்களை திருடி வருபவனை பற்றிய படம். ஒரு கனவினுள் மற்றொரு கனவை உருவாக்கி அதன்வழியே புதிதாக ஒரு எண்ணத்தை புகுத்த முடியுமா என்று கதைகளத்தை எடுத்து கொண்டு சர்ரியலிச சினிமா போல உருவாக்கியிருக்கிறார்கள். அற்புதமான முயற்சி, காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன, ஆனாலும் படம் சற்று குழப்பமானது. காட்சிகள் …

காட்சிகளின் புதிர்பாதை Read More »

கனவின் மிச்சம்

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் தி போப்ஸ் டாய்லெட்.(ThePope`s Toilet) உருகுவே நாட்டில் தயாரிக்கபட்ட படமிது. இயக்கியவர் Cesar Charlone and Enrique Fernandez. 2007ம் ஆண்டு வெளியான இப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதிற்குச் சிபாரிசு செய்யபட்டது. லத்தின் அமெரிக்க நாடான உருகுவேயில் கதை நடைபெறுகிறது. மெலோ என்ற சிறிய ஊர். உருகுவே பிரேசில் எல்லையில் உள்ளது. இந்த ஊருக்கு 1988ம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் விஜயம் செய்யப் போவதாக …

கனவின் மிச்சம் Read More »

வளரும் புத்தகங்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பு என் கனவில் இரண்டாம் வகுப்பில் நான் படித்த பாடல் ஒன்று அப்படியே வரிமாறாமல் நினைவிற்கு வந்தது. அதைப் பாடிய டீச்சர் முகமும் குரலும் கூட எனக்கு துல்லியமாக கேட்டது. விடிந்து எழுந்து உட்கார்ந்தவுடன் அந்தப் பாடலை கடகடவென கணிணியில் அடித்துவிட்டேன். நம்பவே முடியவில்லை. எத்தனை வருசங்களாகிவிட்டது. எப்படி இந்தப் பாடல் மனதில் பசுமையாக இருக்கிறது. அதைப் பாடும்போது எங்கே கை அசைக்க வேண்டும் என்பது கூட நன்றாக நினைவிருக்கிறது. மறுபடி மறுபடி அதைப் …

வளரும் புத்தகங்கள். Read More »

என் உரை

9.7.2010 வெள்ளிக்கிழமை அன்று உயிர்மை நடத்திய இந்திரா பார்த்தசாரதி் அவர்களுக்கு நடந்த விழாவில் நான் பேசிய உரையை நண்பர் பிரபு ராமகிருஷ்ணன் இணையத்தில் தரவிற்க்கம் செய்து கொள்ளும்படியாக இணைத்திருக்கிறார், அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி, என் உரை பற்றி தனது இணைய பக்கத்தில் எழுதி தன் அன்பை பகிர்ந்து கொண்ட நண்பர் சாரு நிவேதிதாவிற்கு நிறைந்த நன்றியும், அன்பும் தெரிவித்து கொள்கிறேன் இணைப்பு எஸ்.ராமகிருஷ்ணன் விழாஉரை https://www.garageband.com/mp3player?|pe1|S8LTM0LdsaShZFazYW8

ஆயிரம் கொக்குகள்

டஞ்சோ எனப்படும் கொக்குகள் ஜப்பானில் மிக புகழ்பெற்றவை. இந்த கொக்குகள் ஆயிரம் வருடம் வாழக்கூடியவை என்ற நம்பிக்கை ஜப்பானியர்களிடமிருக்கிறது. அரிதாகிவரும் இந்தக் கொக்குகளை காப்பாற்றுவதற்காக அரசு பெரும்முயற்சி எடுத்துவருகிறது. டஞ்சோ கொக்கைக் காண்பது நீண்ட ஆயுளைத் தரக்கூடியது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஆன்மாவின் குறியீடாகவும், சமாதானத்தின் அடையாளம் போலவும் கொக்குகள் சித்தரிக்கபடுகின்றன. அதை ஜென் கவிதைகளில் தொடர்ந்து காணமுடிகிறது. டிராகன் போல கொக்குவும் ஒரு புனிதபிம்பமே. நம் ஊரிலும் கொக்குகள் அதிர்ஷடத்தை கொண்டு வருகின்றன என்ற நம்பிக்கையிருக்கிறது. …

ஆயிரம் கொக்குகள் Read More »

தேவதாஸைக் காதலிப்பவர்கள்

தேவதாஸ் இந்திய சினிமாவில் கடந்த ஐம்பது வருசங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு அழியாத பிம்பம். காதலைப் பற்றிய எல்லா உரையாடல்களிலும் தேவதாஸை பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. தேவதாஸ் நாவலை வாசிக்கும் வரை நானும் காதலின் உன்னத நாயகனாகவே தேவதாஸை நினைத்திருந்தேன். நாவலை வாசித்தபிறகு அந்த எண்ணம் முழுமையாக மாறிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு வார காலம் தேவதாஸ் திரைப்படங்களாக பார்த்துக் கொண்டிருந்தேன். நாகேஸ்வரராவ் நடித்த தமிழ், தெலுங்கு தேவதாசு. பிமல்ராயின் தேவதாஸ், திலிப்குமார் நடித்த …

தேவதாஸைக் காதலிப்பவர்கள் Read More »

கால்பந்தாட்டம்

Football is the love of form. A spectacle that scarcely leaves a trace in the memory and does not enrich or impoverish knowledge. This is its appeal : it is exciting and empty. -Mario Vargas Llosa நேற்று உலகப்கோப்பை கால்பந்தாட்டத்தில் ஜெர்மனியின் ரசிகனாக விளையாட்டை ரசித்து கொண்டிருந்தேன். அற்புதமான போட்டியது. விளையாட்டு முடிந்த பிறகும் மனதில் பந்தை துரத்தி ஒடிக்கொண்டேயிருக்கிறார்கள். நான் தொலைக்காட்சி …

கால்பந்தாட்டம் Read More »