மழை என்ன செய்யும்
இரவில் பெய்யும் மழை தனித்த சுபாவமுடையதாக இருக்கிறது. அது எப்போது சீறும் எப்போது தணியும் என்று அறிய முடியாது. பள்ளி வயதில் ஒரு நாளிரவு தூக்கத்தின் ஊடே ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். வெளியே மழை பெய்து கொண்டிருந்த சப்தம் கேட்டது. மின்விசிறி சுழலும் ஒசை தான் அப்படி இருக்கிறதா அல்லது மழை தானா என்று உறுதியாக தெரியவில்லை. ஜன்னல்கள் அடைத்து சாத்தப்பட்டிருந்தன. மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் சுவர்களில் ஊர்ந்து கொண்டிருந்தது. பின்னிரவில் வீடு …