பசித்த மழை.
இருபத்தி எட்டாவது வயதில் சென்னையில் தங்குமிடமின்றி அலைந்து கொண்டிருந்த போது ஒரு நண்பனோடு மேன்ஷன் அறையொன்றில் தங்கி இருந்தேன். மிகச்சிறிய அறை. பகலில் கூட வெளிச்சம் வராது. அறையின் ஜன்னல் சாலையை நோக்கியது. அதிலிருந்து புழுதி பெருகி அறைக்குள் நிரம்பிவிடுகிறது என்று சாத்தியே வைத்திருப்பான். நானோ அந்த ஜன்னலை திறந்துவிட்டு வெளியே பார்த்தபடியே இருப்பேன். இரவிற்குள் என்சுவாச கோளங்களில் தெருப்புழுதியேறி நானே நிறம் மாறியிருப்பேன். ஆனாலும் ஜன்னலை சாத்த மனது வராது. கடந்து செல்லும் காட்சிகளை பார்த்தபடியே …