மறக்கப்பட்ட பெண்
நேற்றிரவு திலீப் மேத்தாவின் The Forgotten Woman என்ற ஆவணப்படத்தை பார்த்தேன். படம் துவங்கிய ஒன்றிரண்டு நிமிசங்களில் இது முக்கியமான படம் என்பதை மனது உணரத்துவங்கியது. இந்தியாவில் இருபது மில்லியன் விதவைகள் இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் நான்கு வீடுகளில் ஒன்றில் ஒரு விதவை நிச்சயம் இருக்கிறாள். அவள் பிறர் கண்ணில் படாமல், ஒதுக்கபட்டு, விலக்கபட்டு அடையாளமற்றவளாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்தியாவில் பெண்களாக இருப்பது எப்போதுமே இரண்டாம் நிலையாகவே கொள்ளபடுகிறது. அதிலும் விதவையாக இருக்க நேர்வது மிகுந்த அவமதிப்பும் புறக்கணிப்பும் …