பறத்தலின் ஆனந்தம்

நேற்று Winged Migration   என்ற ஆவணப்படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்ற வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமா என்ற கலை எத்தனை வலிமையானது. அதன் உதவியால் இயற்கையை எவ்வளவு நுட்பமாகவும் நெருக்கமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்ற சிலிர்ப்பு உண்டானது. சில நாட்களுக்கு முன்பாக Winged Migration ஆவணப்படத்தை பார்த்தேன். 86 நிமிசங்கள் ஒடும் இந்தப் படம் பருவகாலத்தில் இடம் விட்டு இடம் பறக்கும் பறவைகளின் முடிவற்ற பயண வழிகளைப் பற்றியது. உலகின் நிரந்தர யாத்ரீகன் பறவைகளே. படம் துவங்கிய …

பறத்தலின் ஆனந்தம் Read More »

ரயிலோடும் தூரம்

ரயில் பயணத்தில் பின்னிரவில் விழித்துக் கொண்டு இருட்டில் ஒடும் மரங்களையும் நட்சத்திரங்கள் கவிழ்ந்து கிடக்கும் தொலைதூர கிராமங்களையும் பார்த்திருக்கிறீர்களா ? எனது பெரும்பான்மை ரயில்பயணங்களில் பின்னிரவில் விழித்தபடியே தொலைதூர காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். கல்கத்தாவை நோக்கிய ரயிலில் இருந்து பார்த்த நிலவு. வாரணாசி எக்ஸ்பிரஸில் இருந்து கண்ட கங்கை காட்சிகள், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸில் தென்பட்ட ஈரமான கிராமங்கள், மலைரயிலில் கண்ட குகைகள், சபர்மதி எக்ஸ்பிரஸில் பார்த்த விடிகாலையின் மழை. இப்படி எத்தனையோ காட்சிகள். ஈரத்துணி போல மனது …

ரயிலோடும் தூரம் Read More »

உதவும் இணையதளங்கள்.

அன்றாடம் இணையத்தில் ஏதாவது தேடிக்கொண்டிருக்கும் போது கண்ணில் படும் சில முக்கிய இணையதளங்களை குறித்து வைத்துக் கொள்வது எனது பழக்கம். சில வேளைகளில் நண்பர்கள் முக்கியமானதாக கருதும் இணையதளங்கள் குறித்து மின்னஞ்சல் அனுப்புவார்கள். அப்படி சமீபத்தில் என் கண்ணில் பட்ட முக்கிய இணையதளங்கள் இவை. குறிப்பாக திரைப்படத்துறை சார்ந்து பணியாற்றுபவர்களுக்கும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை இயக்குபவர்களுக்கும், சினிமாவை கற்றுக் கொள்ளவும் சுயமாக குறும்படங்களை உருவாக்கவும் விரும்புகின்றவர்களுக்கும் இந்த இணைப்புகள் பயன்தரக்கூடும். இலவசமாக கிடைக்க கூடிய சில மென்பொருட்கள் …

உதவும் இணையதளங்கள். Read More »

சேகர்கபூரின் இந்திய காமிக்ஸ்.

இரும்புக்கை மாயாவி, வேதாளம்,டின்டின், என்று காமிக்ஸ் புத்தகங்களை தேடித் தேடி படித்தவன் நான். இன்றைக்கும் அந்த ஆர்வம் குறையவேயில்லை. சென்னை புத்தக கண்காட்சியில் ஐம்பதுக்கும் அதிகமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வந்து இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன்.  சில மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக சாது என்ற புதிய காமிக்ஸ் புத்தகத்தை லேண்ட்மார்க்கில்  வாங்கி வந்தேன். மிகசிறப்பாக இருந்தது.  யார் இதை உருவாக்குகிறார்கள் என்று தேடிப் படித்த போது  பிரபல திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் தான் இந்த …

சேகர்கபூரின் இந்திய காமிக்ஸ். Read More »

கசப்பு பழங்கள் .

நேற்று மாலை ஒரு பழக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கே தற்செயலாக சீதாப்பழத்தை பார்த்தேன். ஆசையாக ஒரேயொரு சீதாப்பழத்தை வாங்கி பிய்த்து சாப்பிட்டேன், பற்பசையை தின்பது போன்று சக்கையாக இருந்தது. ஏன் இப்படி ருசியேயில்லை என்று கடைக்காரனிடம் கேட்டபோது இது எல்லாம் கலப்பு விதைல வர்றது  சார் . அப்படி தான் இருக்கும். ஜ÷ஸ் போட்டு நிறைய சீனி போட்டு சாப்பிடணும். தனியா சாப்பிடக்கூடாது என்று சொன்னார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சீதா பழத்தை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் …

கசப்பு பழங்கள் . Read More »

ரிச்சர்ட் பெயின்மென

அறிவியலில் உயர் ஆய்வு செய்யும் நண்பர் ஒருவரை தற்செயலாகச் சந்தித்தேன். சேர்ந்து காபி குடிக்க சென்றோம். வழியில் பேசிக் கொண்டிருந்த போது ரிச்சர்டு பெயின்மெனை  (Richard P. Feynman  )எனக்கு பிடிக்கும். அவரை விரும்பி படித்திருக்கிறேன் என்று சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. வியப்புடன் நீங்கள் பெயின்மெனை எப்படிக் கண்டுபிடித்தீர்கள். எழுத்தாளர்களுக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். நானும் அந்த இடைவெளி அப்படியே தானிருக்கிறது. எனக்கும் பெயின்மேனின் இயற்பியல் …

ரிச்சர்ட் பெயின்மென Read More »

பதில் இல்லாத பரிட்சை.

சென்னையில் எந்தச் சாலையை எப்போது தோண்டுவார்கள். என்ன வேலை நடக்கிறது எப்போது அது முடியும். எந்த சாலை எப்போது திருப்பிவிடப்படும் என்று எவராலும் சொல்லிவிட முடியாது. எந்த முன்னறிவிப்பும் கிடையாது. தொலைக்காட்சி, பண்பலை, இணையம் என்று இத்தனை ஊடகங்கள் இருந்த போதும் காவல்துறையும் மாநகராட்சியும் அதில் எதையும் பயன்படுத்தி முன்கூட்டி தெரிவிப்பதுமில்லை. குறிப்பாக தேர்வு காலங்களில் சென்னை மாநகரம் படும்பாடுகள் எழுதி தீராத வலி நிரம்பியது. மைக்கேல் டக்ளஸ் நடித்த Falling Down  படத்தில் வீடு திரும்பும் மைக்கேல் …

பதில் இல்லாத பரிட்சை. Read More »

உலகசினிமாவில் ஒவியர்கள்.

உலக சினிமாவில் ஒவியர்கள் என்ற தலைப்பில் பிப்ரவரி 28 அன்று கும்பகோணம் அரசு ஒவியக்கல்லூரியில் நடைபெற்ற கவின்கலை விழாவில் பேசினேன். புகழ்பெற்ற ஒவியர்களை பற்றிய ஆவணப்படங்கள் மற்றும் முழுநீளப்படங்கள் என்ன வெளியாகி உள்ளன. ஏன் ஒவியர்களின் வாழ்க்கை படமாக்கபடுகின்றன என்பதை பற்றியதாக எனது உரை அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மிக உற்சாகத்துடன்  கலந்துரையாடல் செய்தார்கள். முன்னதாக கும்பகோணம் ஒவியக்கல்லூரியின் திறந்த வெளி காட்சிக்கூடத்தில்  சிற்பங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை அந்த …

உலகசினிமாவில் ஒவியர்கள். Read More »

ஜெகதி

மலையாள சினிமாவில் எப்போதும் என் விருப்பத்திற்குரிய நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். பல படங்களை இவரது நகைச்சுவை காட்சிகளுக்காகவே பார்த்திருக்கிறேன்.  எப்போதாவது ஏசியாநெட் காணும் போது  அவரது நகைச்சுவை காட்சிகளை விரும்பி பார்ப்பதுண்டு. தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு மோகன்லால், மம்முட்டி, திலீப், ஜெயராம் என்று முன்னணி நடிகர்கள் பலரையும் தெரிந்த அளவிற்கு ஜெகதி அறிமுகமாகவில்லை. முக்கிய காரணம் அவர் மலையாளப் படங்கள் தவிர வேறு எதிலும் நடிக்காததே.  என் வரையில் இந்திய அளவிலான சமகால நகைச்சுவை நடிகர்களில் ஜெகதி …

ஜெகதி Read More »

பாடு புஜ்ஜி பாடு.

புத்தக அலமாரியை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த போது மேலடுக்கில் கிடந்த ஒரு தெலுங்கு புத்தகம் கண்ணில் பட்டது. நிறைய ரோஜாப்பூக்கள் கொண்ட அட்டைபடம்.. ஏதோ கோபத்தில் வீசி எறிந்திருக்கிறேன். இன்று தான் மறுபடியும் கண்ணில் படுகிறது.நிச்சயம் ஆறு ஏழு வருசம் இருக்க கூடும். பின்அட்டையில் ஒரு பூங்காவில்  புல்வெளியில் அமர்ந்தபடியே மடியில் ஒரு பேடு, பேனாவுடன் கன்னத்தில் கைவைத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தார் கவிஞர் புஜ்ஜி. (அவர் நிஜபெயர் வேண்டாமே ). சபாரி உடை. முகத்திற்கு பொருந்தாத கண்ணாடி.  …

பாடு புஜ்ஜி பாடு. Read More »