கொட்டுக்காரர்கள்.
நேற்று நண்பர் ஒருவரின் குடியிருப்பில் வாட்ச்மேனாக உள்ள வயதான ஒருவரை சந்தித்தேன். அவரது தோற்றம் வித்யாசமாக இருந்தது. யார் என்று விசாரித்தேன். அவர் மிகுந்த தயக்கத்துடன் நான் கொட்டுக்காரன் என்றார். அந்த வார்த்தை எனக்கு பரவசமாக இருந்தது. ஏன் இங்கே வந்துவிட்டீர்கள் என்றேன். இப்போ யாரு கொட்டு அடிக்க கூப்பிடுறா. ஊர்ல சாந்து சட்டி சுமந்துகிட்டு இருந்தேன், போதும்னு கிளம்பி வந்துட்டேன். இங்கே ஆயிரத்திஇருநூறு ருபாய் மாச சம்பளம் என்றார். அவரது விரல்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். எத்தனை …