பிலோ இருதயநாத்

இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்டு அதை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு மிக நுட்பமாக கட்டுரைகள் எழுதியவர்  பிலோ இருதயநாத்.  சென்னை மந்தை வெளியில் உள்ள லாசர் கோவில் தெருவில் வசித்தவர். 1915ல் மைசூரில் பிறந்த இவர் சாந்தோமில் படித்தார். பள்ளி ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகாலம் வேலை செய்திருக்கிறார். இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றியலைந்தவர் என்பவர் இவரது தனிச்சிறப்பு. பயண நாட்களில் சைக்கிளை மரத்தின் …

பிலோ இருதயநாத் Read More »

அந்தரத்தில் சர்க்கஸ்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் சர்க்கஸ் பார்க்கச் சென்றிருந்தேன். தேனியில் பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த கிரேட் இந்தியன் சர்க்கஸை சாலை பயணத்தில் கண்ட போது அதை பார்க்கலாமே என்று மதியகாட்சிக்கு சென்றிருந்தேன். என் பால்யநாட்களில் சர்க்கஸ் மிக அரிதான நிகழ்வு.  அதன் வருகை சுற்றுப்புற கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தும். ரஷ்யன் சர்க்கஸ், ஏசியன் சர்க்கஸ், பாரத் சர்க்கஸ் என்று மிகப்பெரிய சர்க்கஸ்களை பார்த்திருக்கிறேன். எனது முதல் வசீகரம் சர்க்கஸ்கூடாரம். அது போல ஏன் வீடுகள் …

அந்தரத்தில் சர்க்கஸ் Read More »

நவ கண்டம்

தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டு கொள்ளும் மரபு தமிழகத்தில் தொன்மையாக இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாக தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்து பலியிட்டு கொண்டவர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. குறிப்பாக கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனை பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையை தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. பிடிபட்ட திருடனை குடும்பத்துடன் ஒரு நாள் சந்தோஷமாக வாழச்செய்து மறுநாள் …

நவ கண்டம் Read More »

பதிலற்ற மின்னஞ்சல்கள்

இறுதிப்போரின் பின்பு மீளாத துயரமும் அழிவுமாக ஈழம் சிதைந்து போயிருக்கிறது. மின்ஊடகங்கள் அவற்றைத் திரும்பத் திரும்ப காட்சிப் பொருளாக காட்டிக் கொண்டேயிருக்கின்றன. மனித உயிரிழப்பு தரும்  வேதனை வெற்று காட்சிகளாக கடந்து போவது தாங்க முடியாத வலி தருவதாக உள்ளது. குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் ஈழப்போரினை தங்களது அற்ப அரிப்புகளும் தீனி கொடுப்பதற்கே அதிகம் பயன்படுத்திக் கொள்கின்றன. தமிழ் ஊடகங்களில் பெரும்பான்மை இதையே நகலெடுக்கின்றன. இறந்து போன பல்லாயிரம் மனிதர்களுக்கான துக்கத்தையோ  உயிர் பிழைத்தவர்களின் சொல்லவொண்ணாத துயரத்தையோ …

பதிலற்ற மின்னஞ்சல்கள் Read More »

சாப்பாட்டு புராணம்.

தினமணி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றும் சமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன உணவிற்கு பேர் போனது என்பதை எழுதியிருக்கிறார். இது போன்ற தமிழக உணவு கலாச்சாரம் குறித்த நுண்மையான பதிவுகள் மிக அரிதானது, சமையற்கலை குறித்த புத்தகங்களை வாசிப்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அவை மிக நுட்பமாக …

சாப்பாட்டு புராணம். Read More »

யானையின் பல்

தேக்கடியில் உள்ள வனஉயிர் காட்சியகம் ஒன்றில் யானையின் பல்லை முதன்முறையாக பார்த்தேன். சிறு வயதில்  பல்தேய்க்க மறுக்கும் சிறார்களை கேலி செய்வதற்காக வீட்டில் யானை எல்லாம் என்ன பல்லா தேய்கிறது என்பார்கள். அந்த நாளில் யானைக்கு எத்தனை பல் இருக்கிறது என்ற கேள்வி எனக்குள் எழும். ஆனால் யாரிடம் கேட்டாலும் அதற்கு பதில் இருக்காது. ஆகவே அக்கேள்வி அப்படியே புதையுண்டு போயிருந்தது வேறுவேறு அடர்ந்த காடுகளில் பிறகு பலமுறை யானைக்கூட்டங்களை  கண்டிருக்கிறேன். யானையில் ஏறி கானக உலா …

யானையின் பல் Read More »

ஜென் கவிதைகள்.

தொடர்ந்து சில வாரங்கள் ஜென் கவிதைகளாக வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜென் கவிதை குறித்து என் மனதில் தோன்றிய குறிப்புகள் இவை. ஜென் கவிதைகள் இயற்கையை கடந்த காலத்தில் வைத்து பார்ப்பதில்லை. நாம் ஒரு மலையை அருவியை சந்திக்கும் போது இந்த கணம் என்ற மட்டுமே நம்மோடு இருக்கிறது. அருவிக்கு கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் யாவும் இக்கணமாகவே வெளிப்படுகிறது. அதை தான் ஜென் கவிதைகள் தன் கவிதைகாலமாக முன்வைக்கின்றன கவிதையில் வரும் மலை தன்  வருசத்தை …

ஜென் கவிதைகள். Read More »

சிறிது வெளிச்சம்

ஆனந்த விகடனில் சிறிது வெளிச்சம் என்ற புதிய தொடரை துவங்கியுள்ளேன். துணையெழுத்து கதாவிலாசம், தேசாந்திரி போல இந்த தொடரும் என்னை சுற்றிய நிகழ்வுகள் மனிதர்கள், அவர்களின் அறியப்படாத சிறப்பம்சங்கள் பற்றியதாக இருக்கும். சிறிது வெளிச்சம் என்பது குபராவின் சிறுகதை தலைப்பு. அந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது.  அதற்காக குபராவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். விடிகாலையில் வீட்டின் அடுப்படியில் சிறிய வெளிச்சம் ஒன்றிற்குள் பிறர் தூக்கம் கெட்டுவிடாமல் வேலை செய்யும் அம்மாவை கண்டிருக்கிறேன். பெண்களுக்கு சிறிய வெளிச்சம் …

சிறிது வெளிச்சம் Read More »

கோடை பதிவுகள் 2

விருதுநகரின் பழைய பேருந்து நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்தேன். தார் உருகியோடுவது போன்ற வெயில். ஒதுங்குவதற்கு நிழல் அற்ற நகரம். அருகாமை கிராமத்தின் சாலைகள் நன்றாக போடப்பட்டிருக்கின்றன. ஆனால் நகரின் உள்ளே பழுதடைந்து போன சாலைகள் . நடமாடவே முடியவில்லை.   நான் சென்ற நாளில் 109 டிகிரி வெயில் என்றார்கள். உள்ளுர்வாசிகளுக்கு அது பழகிப்போன ஒன்று. அந்த வெயிலில் ஒரு ஆள் சாவகாசமாக நின்றபடியே சினிமா போஸ்டரில் உள்ள பெயர்களை வாசித்து கொண்டிருந்தார். காலத்தின் பின்னால் சென்று …

கோடை பதிவுகள் 2 Read More »

கோடை பதிவுகள் 1

சிப்பிபாறை என்ற ஊரைக்கடந்து சென்று கொண்டிருந்தேன். உச்சிவெயில் நேரம். பாதி சிதைந்து போன சிறியமலையொன்று கண்ணில் பட்டது. காரை விட்டு இறங்கி அந்த மலையை பார்த்தபடியே இருந்தேன். வெயில் வடிந்து கொண்டிருந்தது. அப்படி அரித்து போன மலையை அருகில் கண்டதேயில்லை. அருகில் யாருமில்லை. தனியே நடந்து மலையின் மீதேறினேன். வெயில் கொதித்து கொண்டிருந்ததால் பாறையில் நடக்க முடியவில்லை. அந்த ஊர் வேட்டை நாய்களுக்கு பிரசித்திபெற்றது. வெயில் தாங்க முடியாமல் ஊரே அடங்கியிருந்தது. ஏதோ காரணம் தெரியாத ஈர்ப்பு …

கோடை பதிவுகள் 1 Read More »