ஐந்து வலைப்பக்கங்கள்

இணைய வலைப்பக்கங்களில் எழுதுகின்றவர்களில் பலர் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். உலக சினிமா, புத்தகங்கள், வாழ்க்கை அனுபவம், நகைச்சுவை. கட்டுரைகள், விவாதம் என்று தொடர்ந்து பலரது பதிவுகளை வாசிப்பது முற்றிலும் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை தருவதாக உள்ளது.  இணைய எழுத்து தரும் உடனடித்தன்மையும்  உலகம் தழுவிய பங்கேற்பும் முக்கிய மாற்றுஊடகவெளியாக இதை உணரச்செய்கிறது. சமீபத்தில் நான் வாசித்த மிக சுவாரஸ்யமான வலைப்பக்கங்கள் இவை.  அடிக்கடி : பத்திரிக்கையாளர் அந்தணன்  எழுதும் சினிமா தொடர்பான பதிவுகள் வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியவை. …

ஐந்து வலைப்பக்கங்கள் Read More »

ஈரக்காகிதம்

உதயம் தியேட்டரில் இருந்து கேகேநகர் செல்லும் சாலையில் ஈஎஸ்ஐ மருத்துவமனையின் அருகில் உள்ள நடைபாதையில் புத்தகங்களை குவித்து போட்டிருக்கும் ஒரு பழைய புத்தக கடைக்காரருடன் எனக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம். சில நாட்கள் எனக்கு போன் செய்து   பழைய புத்தகங்கள் வந்துள்ளது பாருங்கள் என்று அழைப்பார். ஐம்பது வயதைத் தாண்டிய உருவம். பெயர் பாய். எப்போதுமே வெள்ளை ஜிப்பா அணிந்திருப்பார். பல ஆண்டுகாலமாக குப்பை தூசி நிரம்பிய காகிதங்களுடன் வாழ்ந்து நுரையீரல் பாதிப்பு கொண்டவர், சக்கரை நோயும் …

ஈரக்காகிதம் Read More »

சிறுநடை.

கூடல் இலக்கிய சந்திப்பிற்காக மூன்று நாட்கள் மதுரையில் இருந்தேன். ஒரு நாள் மாலையில் நானும் எழுத்தாளர் பிரபஞ்சன் மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் மூவரும் நேதாஜி சாலை வழியாக  நடக்க துவங்கி மீனாட்சியம்மன் கோவிலை முழுமையாக சுற்றி புதுமண்டபம், வடக்கு வாசல், சிம்மக்கல் சாலை என  மூன்று மணி நேரம் நடந்து சிறிய வீதிகளுக்குள்  அலைந்து திரிந்தோம். நேதாஜி சாலை மிக பரபரப்பாக மாறியிருக்கிறது. வாகன போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் அந்த வீதியின் இயக்கத்தை பெரிதாக மாற்றியிருக்கிறது. திருவிழா …

சிறுநடை. Read More »

ஐமாக்ஸ்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலகின் மிகப்பெரிய ஐமாக்ஸ் திரையரங்கு வளாகம் உள்ளது. அதை திரையரங்கம் என்று சொல்லி எளிமை படுத்த முடியாது. அது ஒரு உலகம்.  பிம்பங்களின் பிரபஞ்சம். ஐமாக்ஸில் திரைப்படம் பார்த்தவர்கள் அதன்பிறகு வேறு எந்த திரையிடலையும் ரசிக்க முடியாது. வழக்கமாக நாம் பார்க்கும் திரையிடலை போன்று பத்து மடங்கு பெரிய திரை. படம் பார்க்கும் அனுபவமே அற்புதமானது.  டிக்கெட்டின் விலை 25 டாலர்.  அதில் இரண்டு முறை சினிமா பார்த்திருக்கிறேன். கனவுலகிற்குள் நாம் நுழைந்துவிட்டது …

ஐமாக்ஸ். Read More »

எழுத நினைத்த நாவல்

நாவல் எழுதுவதற்காக ஐரோப்பிய எழுத்தாளர்கள் யாருமில்லாத தீவுகள் , பனிமலை சார்ந்த விடுதிகள், மலைநகரங்களை தேடிச் சென்று அங்கேயே தங்கியிருந்து எழுதுவார்கள் என்று வாசித்த நாளில் இருந்து நானும் அப்படி எங்காவது பயணம் செய்து நாவல் எழுதலாமே என்று விருப்பமாக இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முறை கோணங்கியும் நானும்  இதற்காக தனுஷ்கோடிக்கு சென்று சில நாட்கள் இருந்தோம். கடல் பார்த்ததை தவிர ஒன்றும் நடக்கவில்லை. காட்டிற்குள் போனால் இயற்கையோடு இணைந்த மனநிலை உருவாகும். புதிதாக  …

எழுத நினைத்த நாவல் Read More »

குட்டி இளவரசன்

இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றான குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக  வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம். அந்துவான்த் செந்த் எக்ச்பெரி ( Antoine de Saint-Exupery)பிரெஞ்சு எழுத்தாளர். இவர் விமான ஒட்டியாக ராணுவத்தில் பணியாற்றியவர். இவர் ஒரு முறை விமானகோளாறு காரணமாக …

குட்டி இளவரசன் Read More »

நூறு சிறந்த சிறுகதைகள்

கேணி இலக்கியச் சந்திப்பில் பேசுவதற்காக என் விருப்பக் கதைகளை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்த போது இளம் வாசகர்களுக்காக நான் முக்கியம் என நினைக்கும் சிறுகதைகளை அடையாளம் காட்டலாமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப் பட்டியல் கட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளைப் பட்டியிலிட்டிருக்கிறேன். இது தரவரிசைபட்டியல் இல்லை.  மாறாக பல்வேறுவிதமான கதை சொல்லும் முறைகளில் அமைத்த சிறந்த சிறுகதைகள் இவை. இவர்கள் தனித்துவமாக கதை சொல்லும் எழுத்தாளர்கள். என் நினைவில் உள்ள கதைகளிலிருந்து …

நூறு சிறந்த சிறுகதைகள் Read More »

கேணி

எழுத்தாளர் ஞாநி  அண்மையில் கேகேநகருக்கு வீடு மாறி குடியேறியிருக்கிறார், அந்த வீட்டின்  பின்னால் அழகான கிணறும் தோட்டமுமாகவும் உள்ளது.   அந்த கிணற்றடியினை நண்பர்கள் சந்தித்து பேசும் வெளியாக பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தில்  கேணி என்ற இலக்கிய சந்திப்பு அமைப்பை ஞாநி உருவாக்கியுள்ளார்   நல்ல சிறுகதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளைப் படித்து ரசிக்கும் பழக்கத்தையும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும் இளைய தலைமுறை சிநேகிதர்களிடம் ஊக்குவிப்பது தொடர்பாக கேணி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு …

கேணி Read More »

அண்டா ஹாஹசம்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளியாகி ஐம்பது வருடங்களுக்கும் மேலாகிறது. இன்றைக்கும் அந்த திரைப்படத்தின் சுவாரஸ்யம் குறையவேயில்லை. கோடை விடுமுறையின் போது சிறார்களுடன்  மீண்டும் ஒரு முறை பார்த்தேன். ஆரவாரத்துடன் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தார்கள். படம் முடிந்த போது அலிபாபாவின் சாசகங்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்து போயிருந்தன.  அன்று மாலையில் சிறுவர்கள் விளையாடும் போது ஒரு கதவை பிடித்து கொண்டு அண்டா ஹா ஹசம். அபு ஹா குகூம் திறந்திடு …

அண்டா ஹாஹசம். Read More »

கலாப்ரியா

நவீன தமிழ் கவிதையுலகின் முக்கிய கவி ஆளுமையான கலாப்ரியா  தனது இளமைகால ஞாபகங்களை  நினைவின் தாழ்வாரங்கள் என்று  தனது  வலைப்பக்கத்தில்  எழுதி வருவதை தொடர்ந்து வாசித்து  வருகிறேன். அந்திமழை இணையதளத்தில் இது தொடராக வெளியாகிறது. காலம் அப்படியே புரண்டு படுத்தது போன்ற துல்லியம் கொண்ட அற்புதமான பதிவுகள்.  கவித்துவமும் ,சுய எள்ளலும் ,கேலியும் கலந்த சரளமான உரைநடை. எவ்விதமான ஒளிவு மறைவுமற்று மனம் திறந்து எழுதப்பட்டிருக்கிறது..  திருநெல்வேலி பற்றி புதுமைபித்தன் எழுதியது ஒரு விதம். வண்ணதாசன் வண்ணநிலவன் …

கலாப்ரியா Read More »