நினைவில் வந்த கவிதை.
ஈழத்தின் நவீன கவிஞர்களில் முக்கியமானவர் சி.சிவசேகரம். அவரது நதிக்கரை மூங்கில், செப்பனிட்ட படிமங்கள்,போரின் முகங்கள், மிக முக்கியமான கவிதை தொகுப்புகள். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த சிவசேகரத்தின் கவிதை இது. இன்றுள்ள சூழலில் வாசிக்கையில் மனது மிகுந்த துயரமும் குற்றவுணர்ச்சியும் கொள்கிறது. ** என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர் இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன் இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன் போர்ப் பறைகளை எனச் …