ஒரிடத்தில் ஒரு பயில்வான்
பத்மராஜனின் படங்கள் மீது எப்போதுமே எனக்கு விருப்பம் உண்டு. நேற்றிரவு அவர் இயக்கிய ஒரிடத்து ஒரு பயில்வான் படத்தை திரும்பப் பார்த்தேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் என்ற சுவடேயில்லை. இன்றைக்கும் மிக நெருக்கமாக உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம் திரைப்படவிழாவில் பத்மராஜனின் திரைப்படங்களுக்கென தனியான திரையிடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அவரது முக்கியமான பத்து திரைப்படங்களை ஒரு சேரப்பார்த்தேன். மலையாள சினிமாவில் பத்மராஜன் தனித்த ஆளுமை. அவரது முக்கிய …