எப்போதாவது இசைகேட்பவன்.
ரத்தத்தில் மிதந்து வரும் பித்தப்பூவை பறிக்கிறேன் – தேவதச்சன் சில வாரங்களாகவே தொடர்ந்து நாளைக்கு நாலைந்து மணிநேரம் இசை கேட்டுவருகிறேன். பொதுவில் நான் அதிகம் இசை கேட்பவன் இல்லை. என்னுடைய நண்பர்கள் சுரேஷ்கண்ணன், ஷாஜி போன்றவர்கள் இசையில் தேர்ந்த விற்பன்னர்கள். அவர்கள் அளவு நான் கேட்க கூடியவன் இல்லை. எனக்கு இசை தேவைப்படும் தருணங்கள் எப்போதாவது தான் ஏற்படுகின்றது. அதன் முன்பு வரை என் அருகாமையில் உலகின் சிறந்த இசை ஒலித்துக் கொண்டிருந்தாலும் அது என்னுள் செல்வதேயில்லை. …