மதுரை வருகை

செப்டம்பர் 13 மற்றும் 14 நாட்களில் மதுரை வருவதாகத் திட்டமிட்டிருந்தேன். முக்கியப்பணி ஒன்றின் காரணமாக சென்னையில் இருக்க வேண்டியதால் மதுரை புத்தகக் கண்காட்சிக்கு வர இயலவில்லை. அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை மாலை திருச்சி புத்தகத் திருவிழாவில் பேசுகிறேன்.

பேனா மருத்துவமனை

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பேனா மருத்துவமனை பற்றிய செய்தி ஒன்றை இணையத்தில் கண்டேன். பேனா மருத்துவமனை என்ற கடையின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. மைப்பேனாக்களைச் சரி செய்து தரும் இந்தக் கடை 75 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது என்கிறார்கள் முகம்மது இம்தியாஸ் தன்னைப் பேனா மருத்துவர் என்றே அழைத்துக் கொள்கிறார். சிறிய மருத்துவமனையை நடத்தும் மூன்றாம் தலைமுறை மருத்துவர் என்றே தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அமெரிக்காவின் லூயிஸ் வாட்டர்மேன் தான் பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர். …

பேனா மருத்துவமனை Read More »

காதலின் இருநிலைகள்

பிரெஞ்சு ஓவியர் ஹென்றி ஷெல்சிங்கரின் Girl with dead bird ஓவியத்தில் ஒரு இளம்பெண் தனது மடியில் இறந்து போன பறவை ஒன்றை வைத்திருக்கிறாள். சோகமான அவளது முகம். பிரார்த்தனை செய்வது போலக் கைவிரல்களைக் கோர்த்துள்ள விதம். உதிர்ந்த இலை ஒன்றைப் போல மடியில் கிடக்கும் பறவை. அதுவும் தலைகீழாக உள்ள அதன் தோற்றம். பெண்ணின் சாய்ந்த கழுத்து. பறவையை நோக்கும் கண்கள். சிறிய பறவைக்கூண்டு ஒன்றும் ஓவியத்தில் காணப்படுகிறது இறந்த பறவை என்பது காதலின் பிரிவைத்தான் …

காதலின் இருநிலைகள் Read More »

போர்ஹெஸின் சித்திரக்கதை

போர்ஹெஸின் வாழ்க்கையை விவரிக்கும் புதிய கிராஃபிக் நாவல் “Borges: The Infinite Labyrinth,” ஸ்பானிஷ் மொழியில் வெளியாகியுள்ளது. இதற்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் நிக்கோலஸ் காஸ்டெல். கதைவடிவத்தை எழுதியிருப்பவர் ஆஸ்கார் பாண்டோஜோ. போர்ஹெஸின் வாழ்வைப் பத்து சிறிய அத்தியாயங்களில் விவரிக்கிறது இந்தக் கிராபிக் நாவல். இதன் ஆங்கில வடிவம் இன்னமும் வெளியாகவில்லை. இணையத்தில் இதன் சில பக்கங்கள் காணக் கிடைக்கிறது. போர்ஹெஸ் நூற்றாண்டு விழாவின் போது அவரைப் பற்றிய சிறிய அறிமுக நூலை எழுதினேன். அதற்கான புத்தகங்களைத் தேடி …

போர்ஹெஸின் சித்திரக்கதை Read More »

மதுரைப் புத்தகத் திருவிழா

மதுரை தமுக்கம் மைதானத்தின் உள் அரங்கில் வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 155. எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும் செப்டம்பர் 14 சனிக்கிழமை மற்றும் 15 ஞாயிறு இரண்டு நாட்களும் மதுரையில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்

அரவான் நாடகம்

எனது அரவான் நாடகத்தை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் தீபக் குமார். இளம் நாடக நடிகரான இவர் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். டிசம்பரில் மும்பையில் நடைபெறவுள்ள நாடகவிழாவில் இதனை நிகழ்த்த இருக்கிறார். அரவான் நாடகம் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதனை ஒரியண்ட் லாங்மேன் வெளியிட்டிருக்கிறார்கள்.

இரவின் உருவம்

காலண்டரில் உள்ள நாட்களையும் கடிகாரம் காட்டும் நேரத்தையும் நம்பியே உலகம் இயங்குகிறது. ஆனால் கலைஞர்கள் நாளையும் நேரத்தையும் தனது கற்பனையின் வழியே மாற்றிக் கொள்கிறார்கள் புதிய தோற்றம் கொள்ளச் செய்கிறார்கள். தங்கள் விருப்பம் போலக் கலைத்துப் போட்டு அனுபவிக்கிறார்கள். கடந்தகாலம் என்ற சிறுசொல் எவ்வளவு பெரிய வாழ்க்கையை உள்ளடக்கியது என உலகம் உணரவில்லை. ஆனால் கலைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். காலம் தான் கலைஞனின் முதன்மையான கச்சாப்பொருள். கண்ணாடியில் நாம் காணுவது நமது தோற்றத்தை மட்டுமில்லை. வயதையும் தான் என்று …

இரவின் உருவம் Read More »

அனாவின் வகுப்பறை

ஹங்கேரியின் சிறிய நகரமென்றில் பள்ளி ஆசிரியராக இருக்கிறாள் அனா பாஷ். 150 வருடப் பாரம்பரியம் கொண்டது அப்பள்ளி. அங்கே இலக்கியம் பயிற்றுவிக்கும் அவளுக்கு நாடகம், கவிதையில் ஆர்வம் அதிகம். தனது வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் போது உறுதுணையாக உள்ள திரைப்படங்கள் மற்றும் பாடல்களையும் அறிமுகப்படுத்துகிறாள். பதின்ம வயதினரின் புரிதல்களை விரிவுபடுத்துவதிலும், ஆளுமையை வளர்ப்பதிலும் தனித்துவமிக்க ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறாள். ஒரு முறை தனது வகுப்பறையில் புகழ்பெற்ற கவிஞர் ஆர்தர் ரைம்போவின் கவிதைகளை அறிமுகம் செய்யும் அனா …

அனாவின் வகுப்பறை Read More »

மகிழ்ச்சியின் இசைத்தட்டு

புதிய சிறுகதை. செப்டம்பர் 1 , 2024 புதன்கிழமையோடு ஜெயசங்கரி அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறுகிறாள். அதற்கான பிரிவு உபசார விழா விழாவை எப்படி நடத்துவது என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். விழாவைப் புதுமையாக நடத்த வேண்டும் என்றாள் விமலா. ஆனால் என்ன புதுமை. அதை எப்படிச் செயல்படுத்துவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஜெயசங்கரி பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்று வைக்கலாம் என்ற யோசனையைச் சொன்னது மதுரவன். அவரே அலுவலக விழாக்களில் எடுக்கபட்ட பழைய புகைப்படங்களைத் தேடி …

மகிழ்ச்சியின் இசைத்தட்டு Read More »

திருடன் படித்த புத்தகம்

சில நாட்களுக்கு முன்பு ரோமில் ஆள் இல்லாத ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடன் அங்கிருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு வெளியேறும் போது புத்தகம் ஒன்றைக் காணுகிறான். இத்தாலிய எழுத்தாளர் Giovanni Nucci எழுதிய The Gods at Six O’Clock என்ற புத்தகத்தை வாசிக்கத் துவங்கி தன்னை மறந்து வாசித்துக் கொண்டிருக்கவே வீட்டின் உரிமையாளர் வந்துவிடுகிறார். தப்பியோட முயன்றவனைப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள் தனது குற்றச்செயலை மறந்து திருடன் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்த நிகழ்வை இணைய …

திருடன் படித்த புத்தகம் Read More »