சந்தையின் இரவுக்காட்சி

பெல்ஜிய ஓவியர்  பெட்ரஸ் வான் ஷெண்டல் (Petrus van Schendel) வரைந்த சந்தையின் இரவுக்காட்சி ஓவியங்களில் எரியும் மெழுகுவர்த்திகளுக்கு நடுவே காய்கறி, மீன், மற்றும் பழங்களின் விற்பனை நடக்கிறது. ஒளி எப்போதும் கருணையின், அன்பின் அடையாளமாகவே கருதப்படுகிறது. புனிதர்களின் கையிலிருந்து ஒளி பிறக்கும் காட்சியை ஓவியங்களில் கண்டிருக்கிறேன். ஒளி பேதமறியாதது. ஒளி ஒவ்வொன்றின் தனித்தன்மையை நமக்கு புலப்படவும் புரியவும் வைக்கிறது. ஒளிரும் பொருட்களை, ஒளி படும் விதத்தை யாவரும் விரும்புகிறார்கள். எல்லா சமயங்களும் ஒளியைப் புனிதமாகவே கருதுகின்றன. …

சந்தையின் இரவுக்காட்சி Read More »

உடலும் உணர்வும்

சீன எழுத்தாளரான ஷாங் சியான் லியாங்கின் இரண்டு கதைகளை உடலும் உணர்வும் என்ற பெயரில் கணேஷ் மொழியாக்கம் செய்திருக்கிறார். சவுத் ஆசியன் புக்ஸ் 1992ல் வெளியிட்டுள்ளது. இதில் கைப்பு ஊற்று என்றொரு சிறுகதையிருக்கிறது. அக்கதை லாரி ஒட்டுநரால் சொல்லப்படுகிறது. பத்திரிக்கையாளர் ஒருவர் பாலைவனத்தினைக் கடந்து செல்லும் பயணத்தின் போது லாரியில் பயணிக்கிறார். அப்போது லாரியின் ஒட்டுநர் தனது கடந்தகாலக் கதையைச் சொல்லத் துவங்குகிறார். நீண்ட தூரப் பயணங்களின் போது லாரி ஒட்டுநர்கள் பேச்சுத்துணைக்கு ஏங்குவதைப் பற்றியும் அவர்கள் …

உடலும் உணர்வும் Read More »

இசையும் வெளிச்சமும்

எத்தனை முறை பார்த்தாலும் வியப்புக் குறையாத படம் சத்யஜித்ரேயின் ஜல்சாகர் (Jalsaghar) . அவரது திரை இதிகாசமாகவே இப் படத்தைக் கருதுகிறேன். ஜல்சாகரில் வரும் இசைக்கூடத்தில் தொங்கும் சரவிளக்குகள் நிலப்பிரபுத்துவத்தின் கடைசி அடையாளமாக விளங்குகின்றன. பணியாளர்களில் ஒருவரான அனந்தா அந்த விளக்குகளைச் சுத்தம் செய்து ஏற்றுவதை விருப்பத்துடன் செய்கிறார். அவரது சிரிப்பு அலாதியானது. ஜமீன்தார் பிஸ்வாம்பரர் இசையினையும் வெளிச்சத்தையும் விரும்புகிறார். இசைக்கூடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டவுடன் அது வீட்டின் பகுதியாக இல்லாமல் கலையரங்கமாக மாறிவிடுகிறது. இசைகேட்பதற்காக வரும் பார்வையாளர்கள் …

இசையும் வெளிச்சமும் Read More »

உதிர்ந்த பற்கள்.

மைக்கேல் ஜோஷெங்கோ (Mikhail Zoshchenko) ரஷ்யாவின் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர். அரசியல் நையாண்டிக் கதைகள் எழுதியவர். இதன் காரணமாக ரஷ்ய எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர். 1895ல் உக்ரேனில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு ஓவியர். அம்மா நாடக நடிகை. ஏழு வயதிலே ஜோஷெங்கோ கவிதைகள் எழுத துவங்கினார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். முதல் உலகப்போரின் காரணமாகத் தனது படிப்பைப் பாதியில் கைவிட்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். போரின் போது விஷவாயு தாக்கியதால் இவரது உடல் …

உதிர்ந்த பற்கள். Read More »

வகுப்பறை

காரைக்கால் கீழையூர் அரசுப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் விசாகன் மாணவர்களுக்கான புத்தக அறிமுக நிகழ்வில் டோட்டோ சான் பற்றிய எனது உரையை வகுப்பறையில் ஒளிபரப்பியிருக்கிறார். யூடியூப்பில் உள்ள எனது காணொளியை இது போல வகுப்பறையில் ஒளிபரப்பியது பாராடிற்குரிய முயற்சி. இந்நிகழ்வில் நூறு மாணவர்களும் எட்டு ஆசிரியர்களும் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியைக் காணும் போது சந்தோஷமாகயிருக்கிறது. விசாகனுக்கு எனது அன்பும் நன்றியும்

கவிஞனின் ஒரு நாள்

அகழ் இணைய இதழில் என்னுடைய ஒரு நாள் என்று மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனின் கட்டுரை வெளியாகியுள்ளது. தமிழாக்கம் செய்திருப்பவர் அழகிய மணவாளன். சரளமான, நேர்த்தியான மொழியாக்கம். கல்பற்றா நேரடியாகத் தமிழில் எழுதியது போலிருக்கிறது. நான் கல்பற்றா நாராயணன் கவிதைகளை மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். அவரது கவிதைகளை மிகவும் பிடிக்கும். மலையாளத்தின் முக்கியக் கவிஞர் என்பதாக மட்டுமின்றிச் சர்வதேச அளவிலான முக்கியக் கவிஞர்களில் ஒருவராகவே அவரைக் கருதுகிறேன். அவரது இத்ரமாத்ரம் நாவல் சுமித்ரா என ஷைலஜா மொழியாக்கத்தில் தமிழில் …

கவிஞனின் ஒரு நாள் Read More »

சென்னையும் நாவல்களும்

சென்னையைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள் குறித்து தமிழ் இந்துவில் வெளியாகியுள்ள கட்டுரையில் யாமம் நாவல் குறித்து விபின் எழுதியுள்ளார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

பசித்தவர்

புதிய சிறுகதை தரையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து அடுக்கு டிபன்கேரியரைப் பார்த்தபடியே இருந்தார் துரைக்கண்ணு. நாற்பத்தியாறு வயதிற்குள் தலை முழுவதும் நரைத்துப் போய்விட்டது. எப்போதும் அணிவது போன்ற வெள்ளைச் சட்டை. பளுப்பு நிற பேண்ட். அகலமான பிரேம் கொண்ட கண்ணாடி. அவரது சட்டைபையில் ஒரு மொபைல் போன். கையில் ஒரு மொபைல் போன். சற்றே பெரிய காதுகள். இடது கண் ஓரம் சிறிய மச்சம். சமீபமாக யாராவது அதிர்ந்து பேசினால் கை நடுக்கம் வந்துவிடுகிறது. அரசாங்க விருந்தினர் …

பசித்தவர் Read More »

கேமிராவின் சிறகுகள்

உலகின் பார்வையில் என்றோ முடிந்து போன நிகழ்வுகள் கூடத் திரையில் காணும் போது நமக்குள் பதைபதைப்பையும், மகிழ்ச்சியினையும் ஏற்படுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா. அப்படியான அனுபவத்தை Tokyo Olympiad ஆவணப்படம் காணும் போது உணர்ந்தேன். 1964ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைக் கோன் இச்சீகாவா ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய ஆவணப்படங்களில் இதுவே தலைசிறந்தது என்கிறது பிபிசி. அது வெறும் புகழ்ச்சியில்லை. கோன் இச்சிகாவா ஒலிம்பிக் போட்டிகளை வியப்பூட்டும் விதமாகப் படமாக்கியிருக்கிறார். எங்கிருந்து படமாக்கினார்கள். எப்படிப் படமாக்கினார்கள் …

கேமிராவின் சிறகுகள் Read More »

குளிர்மலைக்குச் செல்லும் வழி

மலையை நோக்கிச் செல்லும் பாதைகள் வசீகரமானவை. அவை அறியாத உலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்பவை. தொலைவிலிருந்து மலைப் பாதையைக் காணும் போது அது மலையின் நாக்கை போலவேயிருக்கிறது. உண்மையில் பாதைகள் காத்திருக்கின்றன. மனிதர்களைப் போலவே பாதைகளுக்கும் வாழ்நாளிருக்கிறது. சில பாதைகள் அற்ப ஆண்டுகளில் மறைந்து விடுகின்றன. பழைய பாதைகள் கதை சொல்லக் கூடியது என்கிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். அது உண்மையே. பாதையை நம்முடைய தலை மறந்துவிடும் கடந்து சென்ற பாதங்கள் மறக்காது என்றொரு சீனப்பழமொழி இருக்கிறது. …

குளிர்மலைக்குச் செல்லும் வழி Read More »