எழுத்தின் அடையாளம்.
கோவில்பட்டியிலிருந்து ஏழுகிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இடைசெவல் கிராமம். கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சிறிய கிராமம். கரிசல் பூமி. இந்தச் சிற்றூரில் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, இசைக்கற்று, தமிழ் இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டு எழுத்தாளர்களாகி, இருவருமே சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும்.இப்படி ஒரே கிராமத்தைச் சேர்ந்த, ஒன்றாக வளர்ந்த இரண்டு நண்பர்கள் வேறு எந்த மொழியிலும் சாகித்ய அகாதமி …