டென்சிங் – எவரெஸ்டின் தனிமை.

        எல்லா சாதனைகளுக்கு பின்னும் எளிய மனிதர்களின் உதவியும் உழைப்பும் அடையாளம் தெரியாமல் போய்விடுவது போல எவரெஸ்ட் சாதனைக்கு பின்னும் நுற்றுக்கணக்கான ஷெர்பா எனப்படும் நேபாளிகளின் கடும் உழைப்பும் உதவியும் அடையாளம் தெரியாமலே போய்விட்டிருக்கின்றது.எவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் என்று யாவருக்கும் தெரியும். ஆனால் எவரெஸ்ட் என்பது தாமஸ் எவரெஸ்ட் என்ற ஆங்கிலேய நில அளவையாளரின் பெயர் என்பதோ, இந்தியாவின் நிலப்பரப்பை துல்லியமாக அளவிடுவதற்காக முதன் முதலாக நடைபெற்ற நில அளவைபணியை …

டென்சிங் – எவரெஸ்டின் தனிமை. Read More »

விரும்பி கேட்டவை

வார்த்தை என்ற புதிய இலக்கிய இதழ் வெளியாகி உள்ளது. அதன் வெளியிட்டினை தொடர்ந்து மறுநாள் நண்பர்கள் சந்திப்பு மற்றும் சிறிய விருந்து ஒன்றிற்கு நண்பர் பிகே.சிவகுமார் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொள்ள நண்பரின் அலுவலகத்திலிருந்து கிளம்பினேன்.வழியில் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல் காரணமாக வழி சொல்ல மறந்து போய்  வானகஒட்டுனர் என்னை பெருங்குடி பக்கமாக கூட்டிக் கொண்டு போய்விட்டார். எப்படி இவ்வளவு சரியாக வழிமாறி இவ்வளவு தூரம் வந்தோம் யோசிக்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அந்த …

விரும்பி கேட்டவை Read More »

வெர்மரின் தேவதை.

மூன்று வருடங்களுக்கு முன்பாக Girl with a Pearl Earring என்ற திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் காண நேர்ந்தது. டச்சு ஒவியரான ஜோகனஸ் வெர்மரின் வாழ்வைப் பற்றியது என்ற அறிமுகத்தோடு படம் திரையிடப்பட்டது. வெர்மரின் சில ஒவியங்களை முன்னதாகக் கண்டிருக்கிறேன். ஆனால் அவரது வாழ்வு குறித்த எதையும் வாசித்து அறிந்திருக்கவில்லை. அந்தப் படம் துவங்கிய சில நிமிசங்களிலே மொத்த அரங்கமும் நிசப்தத்தில் ஆழ்ந்து போனது.காலம் அப்படியே பின்னால் திரும்பி பதினேழாம் நூற்றாண்டிற்குள் நழுவிவிட்டதோ எனும்படியாக …

வெர்மரின் தேவதை. Read More »

இணையதளங்கள் – 3

கொட்டிக் கிடக்கும் கோடானு கோடி இணைய தளங்களில் தரமானதும் பயனுள்ளதும் தான் விரும்பி உலாவுவதுமான இணைய தளங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் எஸ். ராமகிருஷ்ணன் ஆசிய சினிமாhttps://www.slantmagazine.comசமீபத்தைய ஆசிய சினிமாவினை அறிய விரும்புகின்றவர்களுக்கான சினிமா இதழ். இளம் இயக்குனர்களுக்கென தனியான பகுப்பு உள்ளது. இதில் இடம் பெறும் திரைவிமர்சனங்களை வாசித்து வருவதன்வழியே எவை தற்போது வெளியான முக்கியபடங்கள் என்று அறிந்து கொள்வது சுலபம். இயக்குனர்களின் நேர்முகம் மற்றும் விரிவான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளனதமிழ்மரபுhttps://www.tamilheritage.org/தமிழக கோவில்களின் ஸ்தலபுராணங்கள். அரிய தமிழ் …

இணையதளங்கள் – 3 Read More »

நடையால் வென்ற உலகம

இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார். முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து கூர்ந்த அவதானிப்பும் எதிர்வினைகளையும் செய்து வரும் தீவிரமான இளைஞர். இவரது கட்டுரைகள் உயிர்மை, தலித் முரசு, தமிழினி உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அன்றைய பயணத்தில் படித்த புத்தகங்கள், பயணங்களில் கண்டவை, நாட்டார்தெய்வங்கள் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். நீங்கள் …

நடையால் வென்ற உலகம Read More »

நீலக்குடை

        ஹிந்தி திரைப்பட உலகம் கடந்த சில ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. புதிய கதை சொல்லும் முறை, புதிது புதிதான இளம் இயக்குனர்கள். மாறுபட்ட கதைகள் என்று அதன் வளர்ச்சி உலக அளவில் விரிந்துள்ளது. வழக்கமான கேளிக்கை படங்களின் வருகை ஒரு பக்கம் அதிகரித்திருந்த போதும் மறுபக்கம் மாற்றுமுயற்சிகளுக்கான வாசல் திறந்து விடப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பெருநகரங்களில் உருவாகியுள்ள மல்டிபிளக்ஸ் எனப்படும் சிறிய அரங்கங்களுக்கான திரைப்படங்கள் அதிகரித்துள்ளன.பெரும்பான்மை ஹிந்தி படங்களின் முக்கிய …

நீலக்குடை Read More »

கரப்பான்பூச்சிகள் காதலிப்பதில்லை.

                                               ருஷ்ய இலக்கியங்கள் அறிமுகமான அளவு தமிழில் மற்ற நாடுகளின் இலக்கியங்கள் அறிமுகமாகவில்லை. பிரெஞ்சு இலக்கியத்தின் மாபசானும் விக்டர் க்யூகோவும் எமிலிஜோலாவும் தமிழுக்கு 1950களில் அறிமுகமானார்கள். அந்த நாட்களில் ஜெர்மனிய இலக்கியத்தைப் பொறுத்தவரை அறிமுகமாகியிருந்த ஒரே பெயர் கதே. அதுவும் அவரது பாஸ்டஸ் நாடகம் மட்டுமே.நவீன ஜெர்மானிய இலக்கியம் பற்றிய அறிமுகம் மிகக் குறைவாகவே உள்ளது . நவீன தமிழ் இலக்கியத்தின் ஊடாக அறிமுகமான முக்கிய ஜெர்மானிய எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா …

கரப்பான்பூச்சிகள் காதலிப்பதில்லை. Read More »

தொஷிரோ மிபுனே

      ஏப்ரல் 1 மிபுனேயின் பிறந்த தினம். யார் மிபுனே என்று கேட்கிறீர்களா? பெயரைச்சொன்னால் பலருக்கும் தெரிந்திருக்காது ஆனால் அகிரா குரசேவாவின் படங்களில் சாமுராயாக நடித்தவர் என்றால் நிச்சயம் பலருக்கும் அடையாளம் தெரிந்துவிடும்.ஹாலிவுட் நடிகர்களை அறிந்துள்ள அளவு பிறமொழிகளின் நடிகர்களைக் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. உலகத் திரைப்படங்களைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்த போதும் கூட படத்தின் இயக்குனர் யார் என்பதில் கொள்ளும் கவனம் யார் நடித்திருக்கிறார்கள் என்பதில் இருப்பதில்லை. ஒரு சில முகங்கள் …

தொஷிரோ மிபுனே Read More »

எறும்பின் கால்கள்

எறும்புகள் எப்போது துங்கும் என்றொரு நாள் என் பையன் என்னிடம் கேட்டான். என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இரவானதும் அது துங்கிவிடும் என்று பொய்யாக ஒரு சமாதானம் சொன்னேன். உடனே அவன், இல்லை, ராத்திரியிலும் சமையலறையில் எறும்புகள் போவதைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னான்.வேறு வழியில்லாமல் எறும்புகள் எப்போது உறங்கும் என்று எனக்குத் தெரியாது என்றேன். ஏன் தெரியாது என்று திரும்பவும் கேட்டான். கவனித்ததில்லை என்று சற்றே எரிச்சலோடு சொன்னேன். உடனே அவன் ஏன் கவனித்தில்லை …

எறும்பின் கால்கள் Read More »

திரைக்கு பின்னால்

        வலைப்பக்கங்களில் சில அபூர்வமான கட்டுரைகள் வாசிக்க கிடைத்திருக்கின்றன. சமீபத்தில் எழுத்தாளர் ஆபீதீனின் வலைப்பக்கத்தில் நாகூர் படைப்பாளிகள் என்ற பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தக் கட்டுரையை வாசித்த போது இவ்வளவு நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த ஒரு விஷயம் கவனத்தை ஈர்த்தது. கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்கும் போது அது யாருடைய கதை, யார் வசனம் எழுதியிருக்கிறார்கள் என்று கவனித்துப் பார்ப்பேன். அது போலவே யார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய …

திரைக்கு பின்னால் Read More »