யாமம் நாவலுக்கு விருது

            கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற இலக்கிய அமைப்பு ஆண்டு தோறும் தமிழ் எழுத்துலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு இயல் விருது அளித்துக் கௌரவப்படுத்துகிறது. இந்த நிகழ்வின் ஒருபகுதியாக சிறந்த நாவல் ஒன்றினைத் தேர்வு செய்து பரிசளிக்கிறார்கள். இந்த ஆண்டு யாமம் நாவல் தேர்வு பெற்று பாராட்டுச் சான்றிதழும் 500 டாலர் பரிசும் பெறுகிறது.

கரைக்க முடியாத நிழல்

பஷீர் பற்றிய ஆவணப்படம் வைக்கம் முகமது பஷீரின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு அவரைப்பற்றிய ஆவணப்படம் Basheer – The Man சென்னையில் திரையிடப்பட்டது. ஆனால் அதைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனது நண்பர்களில் ஒருவர் தனது சேமிப்பில் இருந்த பஷீரைப்பற்றிய ஆவணப்படத்தின் பிரதியொன்றை எனக்காகத் தந்து அனுப்பினார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எடுக்கபட்ட ஆவணப்படம் என்ற போதும் இன்றும் அதன் அழகுணர்வும் தேர்ந்த உருவாக்கமும் அதை ஒரு முன்மாதிரி படமாகவே வைத்திருக்கிறது. பஷீர் கதைகளை தமிழில் வாசிப்பதற்கும் மலையாளத்தில் …

கரைக்க முடியாத நிழல் Read More »

ஆட்ரி ஹெபர்னைக் காதலிப்பவர்கள்.

            அறுபது வயதைக்கடந்த பலரது நினைவிலும் இன்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை ஆட்ரி ஹெபர்ன் (Audrey Hepburn)  தீராக்காதலியாகவே இருக்கிறாள். ஹாலிவுட் திரைப் படங்களை பற்றி வயதானவர்களுடன் பேசத் துவங்கியதுமே அவர்கள் முகத்தில் ஆட்ரி ஹெபர்ன் மீதான காதல் ஒளிவீசுவதை பலரிடமும் காண முடிந்திருக்கிறது. உலகமெங்கும் வயதானவர்கள் இந்த ஒரு விஷயத்தில் மாறாமலே யிருக்கிறார்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது. சமீபத்தில் எனது நண்பரின் அப்பாவோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் ஆட்ரி …

ஆட்ரி ஹெபர்னைக் காதலிப்பவர்கள். Read More »

காமத்துக்கு ஆயிரம் உடைகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி – ஜெயமோகன் மரணம் அதுவரை வாழ்க்கைக்கு இல்லாதிருந்த ஓர் அர்த்தத்தை அளிக்கிறது என்று அல்பேர் காம்யூவின் புகழ்பெற்ற வரி ஒன்று உண்டு. பல நாவல்கள் இவ்வரியின் நீட்சியாக நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. குறிப்பிடத்தக்கவை இரண்டு. டாக்டர் சிவராம காரந்தின் அழிந்த பிறகு என்ற கன்னட நாவல் அதில் ஒன்று.[தமிழில் சித்தலிங்கையா. தேசிய புத்தக நிறுவனம் வெளியீடு] சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் இன்னொன்று. இரண்டுமே இறந்துபோன ஒருவரை நினைவுகள் மற்றும் தடையங்கள் மூலம் தேடிப்போய் …

காமத்துக்கு ஆயிரம் உடைகள் Read More »

காந்தியின் நினைவில்.

            தமிழகத்தின் பல இடங்களில் காந்தி வந்த இடம், காந்தி பேசிய மைதானம் என்று  உள்ளன. சில ரயில் நிலையங்களில்அப்படிபெயர்பலகைகளைக் கண்டிருக் கிறேன். விருதுநகர் ரயில் நிலையத்தின் வெளியே காந்தி விருதுநகருக்கு வந்த நாளின் நினைவாக ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. காந்தியை பார்த்தவர்கள், காந்திக்காக தன் அணிந்திருந்த நகைகளை கழட்டி தந்தவர்கள் என்று பலரது நினைவுகளை என் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். காந்தியின் கையைத் தொட்டவர்கள் கடவுளின் கையைத் தொட்டது போன்ற …

காந்தியின் நினைவில். Read More »

சோம்பல் நாயகன்

ருஷ்ய இலக்கியத்தின் பிரதான படைப்பாளி களாக அறியப்பட்ட செகாவ் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி,  கார்க்கி போன்றவர்களின் படைப்புகள் அறிமுகமான அளவு அதே காலகட்டத்தை சேர்ந்த பல முக்கிய படைப்புகள்  உலக இலக்கிய பரப்பிற்குள் அறிமுகமாகவில்லை. அவை பல ஆண்டு காலமாக முறையான ஆங்கில மொழி பெயர்ப்பின்றி  முடங்கி கிடந்துள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் வியந்து போற்றி தங்களது எழுத்துலக போட்டியாளர் என்று வர்ணித்த இவான் கோன்சரோவின் (Ivan Goncharov) படைப்புகள் ஆங்கிலத்தில் நூறு வருடத்திற்கு பிறகு தற்போது தான் நல்ல மொழிபெயர்ப்பில் …

சோம்பல் நாயகன் Read More »

குயிலியேட்டா மசினா

        சில முகங்கள் திரையில் தோன்றியதும் நம் கவனம் முழுதுவம் அவர்களில் மீது தன்னியல்பாக குவிந்துவிடும். குறிப்பாக கறுப்பு வெள்ளைப்படங்களின் கதாநாயகிகளாக நடித்தவர்களில் பலரும் தனித்துவமான முகப் பொலிவும் உடலமைப்பும் கொண்டவர்கள். அந்த முகங்கள் மொழி கடந்து பேசக்கூடியவை. அப்படி என்னை இன்று வரை வசீகரப்படுத்திக் கொண்டிருக்கும் வெகு தனித்துவமான பெண் முகம் குயிலியேட்டா மசினாவுடையது..( Giulietta Masina) உலகப்புகழ் பெற்ற இயக்குரான பெலினியின் மனைவியும் கான்ஸ் விருது பெற்ற நடிகையுமான குயிலியேட்டா …

குயிலியேட்டா மசினா Read More »

மூவர் கோவில்.

        புதுக்கோட்டையிலிருந்து 35கிலோ மீட்டர் தொலைவில் குடுமியான்மலை  மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது கொடும்பாளுர். சோழ சரித்திரத்தின் புகழ் பெற்ற ஊர் .கொடும்பாளுரில் நடைபெற்ற யுத்தங்கள் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இங்கே இரண்டு முக்கிய கோவில்கள் உள்ளன. வேளிர் மரபின் மிச்சமாக உள்ள மூவர் கோவில் அதில் ஒன்று. மற்றது முசுகுந்தேஸ்வரர் கோவில். இரண்டுமே அதன் கலை எழிலுக்காக மிகவும் பிரசித்தி பெற்றவை. புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தமிழகத்தில் அதிகமான புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன.குறிப்பாக திருமயம் …

மூவர் கோவில். Read More »

ஹசர் தினார்

            அவனுக்குப் பெயர் கிடையாது.அவனை விலைக்கு வாங்கியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவனது பெயர் மாறிக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவனை விலைக்கு வாங்கிய வணிகன் ஆயிரம் தினார் விலை கொடுத்து வாங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனை ஹசர் தினார் என்று அழைக்கத் துவங்கினார்கள். அந்த வணிகனிடம் அவனைப் போல இருபதுக்கும் மேற்பட்ட இளவயது ஆண்களிருந்தார்கள்.தேசம் முழுவதுமே ஆண் மோகம் கொண்டவர்கள் அதிகமாகியிருந்தார்கள்.அழகான பெண்களை அடைவதை விடவும் ஆண்களோடு உடல் உறவு கொள்வதற்கே ஆசைபட்டார்கள். ஹசர் …

ஹசர் தினார் Read More »

கீயிங்கே வனத் திருடன்

              செல்மா லாகெர்லெவின் தேவமலர் ஒரு குறுநாவல். அதை எனது பதினெட்டாவது வயதில் முதன்முறையாக வாசித்தேன். பின்மதிய நேரமது. வாசிக்கத் துவங்கும் போது வெளியில் இருந்த வேம்பின் காற்று வீசிக் கொண்டிருப்பதை லேசாக உணரமுடிந்தது. நான்கு பக்கங்களை கடந்து போவதற்குள் கதை ஒரு சுழலைப் போல என்னைத் தனக்குள் இழுத்துக் கொண்டு போகத் துவங்கியது. நாவலில் வரும் சம்பவங்களின் பின்னால் ஒரு நிழலைப் போல மெளனமாக சென்று கொண்டிருந்தேன். …

கீயிங்கே வனத் திருடன் Read More »