அம்பு துளைக்கப்பட்ட மான்

புகழ்பெற்ற ஓவியரான ஃபிரைடா காலோ வாழ்க்கையை விவரிக்கும் புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. ஃபிரைடாவின் டயரி மற்றும் கடிதங்களைப் பயன்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃபிரைடாவின் ஓவியங்கள் திரையில் உயிர்பெற்று இயங்குவது அழகானது. அனிமேஷன் மற்றும் ஆவணக்காட்சிகள் மூலம் ஃபிரைடா வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் சித்தரிக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாகச் சல்மா ஹாயக் நடித்த ஃப்ரைடா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு ஜூலி டெய்மரால் இயக்கப்பட்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஆவணப் படம் அதிலிருந்து நிறைய வேறுபடுகிறது. …

அம்பு துளைக்கப்பட்ட மான் Read More »

ஸி.வி. ஸ்ரீராமனின் கதைகள்

மலையாள எழுத்தாளர் ஸி.வி. ஸ்ரீராமனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுப்பினை சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கிறது. ஸ்ரீராமனின் இரண்டு சிறுகதைகளை அரவிந்தன் திரைப்படமாக்கியிருக்கிறார். ஸ்ரீராமன் கதைகள் இதுவரை நாம் அறியாத கதைப்பரப்பினைக் கொண்டிருக்கின்றன. பாண்டிச்சேரி. கடலூர். சென்னை எனத் தமிழ் வாழ்க்கையின் ஊடாகவும் ஸ்ரீராமன் கதைகள் எழுதியிருக்கிறார். குறிப்பாகப் பாண்டிச்சேரி அன்னை ஆசிரமம் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை சிறப்பானது. ஸ்ரீராமனின் கதைகள் நினைவுகளால் வழிநடத்தப்படும் மனிதர்களின் வாழ்க்கையை விவரிக்கின்றன.   கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை  விஷ்ணுகுமாரன் சிறப்பாக மொழியாக்கம் …

ஸி.வி. ஸ்ரீராமனின் கதைகள் Read More »

எழுத்தின் வலிமை

ஸ்டீபன் ஸ்வேக் (Stefan Zweig) ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் 1930 களில், அவர் உலகில் மிகவும் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். குறிப்பாகச் சீனாவில் அவரது புத்தகங்கள் மிகவும் விரும்பி படிக்கப்பட்டன. அவரது முக்கியப் படைப்புகள் யாவும் சீனமொழியில் வெளியாகியுள்ளன. சீனாவின் பெஸ்ட் செல்லராக ஸ்வேக் அறியப்பட்டார். எதனால் ஸ்டீபன் ஸ்வேக்கை சீனர்கள் இவ்வளவு ஆர்வமாகப் படித்தார்கள் என்பதை ஆராய்ந்து ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அது ஸ்வேக்கின் கதைகள் உளவியல் ரீதியாகக் கதாபாத்திரங்களின் செயல்களை …

எழுத்தின் வலிமை Read More »

மிதக்கும் காதலர்கள்

மார்க் சாகலின் ஓவியங்கள் கதை சொல்லக் கூடியவை. அச்சிடப்பட்ட கதைகளை வாசிப்பதைப் போல அவரது ஓவியத்தில் மறைத்துள்ள கதைகளையும் நம்மால் படிக்க முடியும். அவை நினைவின் சிதறிய வடிவங்கள். மார்க் சாகலை மகிழ்ச்சியின் ஓவியன் என்றே சொல்வேன். பிராயத்தின் கனவுகள் போன்ற காட்சிகளையே தொடர்ந்து வரைந்திருக்கிறார். தனது நினைவுகளையும் கனவினையும் ஒன்று சேர்த்து ஓவியமாக்குகிறார். அவரது ஓவியத்தில் பசு நீலநிறமாக இடம்பெறுகிறது. ஆடு வயலின் வாசிக்கிறது. மனிதர்கள் வானில் பறக்கிறார்கள். ஆகாசமும் பூமியும் இடம் மாறியிருக்கின்றன. அவரது …

மிதக்கும் காதலர்கள் Read More »

இசைக்குப் பின்னால்

கோ.புண்ணியவான் – மலேசியா சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம் நாவல் வடிவில் யாரும் எழுதிராத நாதஸ்வர தவில் கலைஞர்களின் கதையை ‘சஞ்சாரம்’ சொல்லிச் செல்கிறது. அச்சமூகத்தின் இந்த நூற்றாண்டின் வளர்சிதை மாற்றங்களை நேர்த்தியாகக் காட்சிப்படுத்திக்கொண்டே போகிறது நாவல். தற்காலக் கலைஞர்கள் எவ்வாறு நலிந்த சமூகமாகத் தள்ளிவைத்துப் பார்க்கப்பட்டார்கள் என்பதைத் தன் நுணுக்கமான கதைப்பின்னலால் சிக்கலில்லாமல் விவரித்துக்கொண்டே செல்கிறா எஸ் ரா. உண்மையிலேயே, பூ வேலைப்பாடு நன்கு தெரிந்த ஒரு பெண்ணின் கலைக் கைகள் நடத்துகின்ற பின்னல் நடனத்தை அழகு …

இசைக்குப் பின்னால் Read More »

நிஜமில்லாத நிஜம்

நிஜமான பசு ஒன்று ஓவியத்திலிருக்கும் பசுவைப் பார்த்துக் கொண்டிருப்பது போல வரைந்திருக்கிறார் மார்க் டான்சி, The Innocent Eye Test என்ற அந்த ஓவியம் எது யதார்த்தம் என்ற கேள்வியை எழுப்புகிறது. டச்சு ஓவியர் பவுலஸ் பாட்டர் வரைந்த பசுக்களின் ஓவியத்தைத் தான் இந்தப் பசுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதே ஓவியத்தின் இடதுபுறத்தில் மோனெட்டின் வைக்கோல் போர் ஓவியம் காணப்படுகிறது. “வெவ்வேறு யதார்த்தங்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன” என்று ஆராய்வதில் ஆர்வம் கொண்டவர் மார்க் டான்சி., …

நிஜமில்லாத நிஜம் Read More »

ரெயின்கோட்

குறுங்கதை சம்பத் தனது ஏழு வயதில் முதன்முறையாக ரெயின்கோட் அணிந்த ஒருவரைக் கிராமத்தில் கண்டான். அடைமழைக்காலமது. மண்வாசனையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். மழைபெய்யப்போகும் முன்பு எழும் வாசனை ஒருவிதம். மழை விட்ட பின்பு வெளிப்படும் வாசனை வேறுவிதமாக இருக்கும். அது மழை வாசனையில்லை. மண்வாசனை என்பார் தாத்தா. இருக்கட்டுமே. மண்ணை அவ்வளவு வாசனை மிக்கதாக மழையால் தான் முடியும். ஊரைச் சுற்றி மழைமேகம் கருகருவெனத் திரளுவதைக் காண அழகாக இருக்கும். மழைவட்டம் போட்டிருச்சி என்று மக்கள் மகிழ்ச்சி …

ரெயின்கோட் Read More »

நிழலின் இனிமை.

ஜப்பானிய எழுத்தாளர் ஜுனிச்சிரோ தனிசாகி எழுதிய In Praise of Shadows 1933 ஆம் ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரையாகும். இதில் ஜப்பானியப் பாரம்பரியத்தில் ஒளி மற்றும் இருளின் இடம் பற்றிய தனது அவதானிப்புகளை விரிவாக எழுதியுள்ளார். குறிப்பாக ஜப்பானிய வீடு மற்றும் கட்டிடங்களின் தனித்துவம், ஜப்பானிய நிகழ்த்துகலைகளில் பயன்படுத்தப்படும் குறைந்த வெளிச்சம் பற்றியும், மேற்கத்திய தொழில்நுட்பங்களுக்குப் பதிலாக சொந்த மண்ணிலிருந்து உருவாகும் அறிவியல் முயற்சிகள் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார். In Praise of Shadows வை ஒரு …

நிழலின் இனிமை. Read More »