எகிப்தில்

எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகள் அரபு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. எகிப்தில் உள்ள பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

காஃப்கா பரிசுப்பொருட்கள்

நண்பர் ஆம்பூர் அசோகன் சமீபத்தில் பிராக் நகருக்குச் சென்றிருந்தார். காஃப்கா நூற்றாண்டுக் கொண்டாட்டங்களை நேரில் கண்டு மகிழ்ந்திருக்கிறார். காஃப்கா அருங்காட்சியம் மற்றும் நகரிலுள்ள காஃப்காவின் சுழலும் தலை, புத்தகக் கடைகள், நூலகம் குறித்து வியந்து புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தார் அங்கிருந்து எனக்காக சில பரிசுப்பொருட்களை வாங்கி வந்திருக்கிறார். இன்று அவற்றை அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும். புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்ற அசோகன் தேர்ந்த இலக்கிய வாசகர். சர்வதேச இலக்கியங்களை ஆழ்ந்து …

காஃப்கா பரிசுப்பொருட்கள் Read More »

எலியின் பாஸ்வேர்ட்/ ஆங்கிலத்தில்

எனது எலியின் பாஸ்வேர்ட் சிறார் நூலை மேகலா உதயசங்கர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நூல் கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

இந்து தமிழ் நாளிதழில்

இந்து தமிழ் நாளிதழில் (07.07.24) மகாபாரத நிகழ்வை மையமாகக் கொண்டு நான் எழுதிய சிறுகதை குறித்து சுப்பிரமணி இரமேஷ் தனது தொன்மம் தொட்ட கதைகளில் எழுதியிருக்கிறார். ஆழ்ந்து வாசித்துச் சிறப்பாக எழுதியுள்ள சுப்பிரமணி இரமேஷிற்கு மனம் நிறைந்த நன்றி.

கவிதை பிறக்கிறது

கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்களே கிடையாது. ஆனால் எல்லோரும் கவிதை எழுதிவிடுவதில்லை. ஒரு சிலர் ரகசியமாக டயரியில் கவிதை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் மனதிலே கவிதை எழுதி அழித்துவிடுகிறார்கள். பறக்க ஆசைப்படுவதும் கவிதை எழுத ஆசைப்படுவதும் இயல்பான ஒன்றும் தான். எந்த வயதிலும் ஒருவர் கவிதை எழுதத் துவங்கலாம். சிறந்த கவிஞராக வெளிப்படலாம். சாங்-டாங் லீ இயக்கிய Poetry என்ற கொரியப்படத்தில் யாங் மி-ஜா என்ற 66 வயதான பெண் கவிதை …

கவிதை பிறக்கிறது Read More »

மற்றொருவன்

புதிய குறுங்கதை. அவன் கிரிகோர் சாம்சாவைப் போலவே சேல்ஸ்மேனாக அதே நிறுவனத்தில் வேலை செய்தான். அவர்களது நிறுவனம் துணிவிற்பனை செய்யக்கூடியது. அவனைப் போன்ற சேல்ஸ்மேன்களின் வேலை வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவதற்கான துணி சாம்பிள்களுடன் ஊர் ஊராகச் சுற்ற வேண்டியது. அவர்களின் முதலாளி கருணையற்றவர். ஊழியர்களின் குரலை காது கொடுத்துக் கேட்காதவர். நிறுவன மேலாளரும் கண்டிப்பானவர்.  மாதச் சம்பளம் என்ற கடிவாளம் அவர்களை எதையும் பற்றி யோசிக்கவிடாமல் செய்திருந்தது. கிரிகோர் சாம்சா சில நாட்களாக அலுவலகம் வரவில்லை. நிறுவன ஊழியர்கள் …

மற்றொருவன் Read More »

காஃப்கா கடிதங்கள்

காஃப்கா எழுதிய கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகள் குறித்து நாளை உரையாற்றுகிறேன். அனுமதி இலவசம். அனைவரும் கலந்து கொள்ளலாம். நுங்கம்பாக்கம் ஜெர்மன் பண்பாட்டு மையமது. புனைவில் நாம் காணும் காஃப்கா வேறு. நாட்குறிப்பு மற்றும் கடிதங்களில் காணும் காஃப்கா வேறு. அவர் தஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்தே உருவாகியிருக்கிறார். அதற்கான சான்றுகளை அவரது நாட்குறிப்பு மற்றும் கடிதங்களில் காண முடிகிறது. நீச்சலில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்த, உடல் நலத்தினைப் பேணுவதில் அக்கறை கொண்டிருந்த, தீவிரமாக வாசிக்க கூடிய, இசையில் ஆர்வமான காஃப்காவை இதில் …

காஃப்கா கடிதங்கள் Read More »

கடலோடு சண்டையிடும் மீன்

கோவை புத்தகக் கண்காட்சிக்கான புதிய வெளியீடு -1 சிறார்களுக்காக எழுதப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பு. இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன. அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.