இன்றைய நிஜம்

மரியம் தௌசானி இயக்கிய மொராக்கோ திரைப்படமான ‘கல்லே மலகா’ அழகாகத் துவங்குகிறது. தனித்து வாழும் எண்பது வயதான மரியா டான்ஜியரில் வசிக்கிறார். அதுவும் கடைகள் நிறைந்த பரபரப்பான வீதி ஒன்றில் அவரது வீடிருக்கிறது. காலையில் அவர் நடந்து திரிந்து சமையலுக்குத் தேவையான காய்கறிகள். பழங்கள் என ஒவ்வொன்றாக வாங்குகிறார். கடை நடத்துபவர்களுடன் அவருக்குள்ள நீண்டகால நட்பு. அங்குள்ள இளைஞர்களுடன் நடக்கும் இயல்பான உரையாடல். பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் உள்ள உறவு என அவரது உலகம் நேர்த்தியாக மலர்கிறது. …

இன்றைய நிஜம் Read More »

அஞ்சலி

எனது அன்பிற்குரிய நண்பரும் எழுத்தாளருமான அரவிந்தன் இன்று காலமானார்.  25 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நல்ல நட்பிருந்தது. நான்கு நாட்களுக்கு முன்பாகக் கூட தொலைபேசியில் அழைத்துப் பேசினார். ஞாயிற்றுகிழமை சந்திப்போம் என்றார். அவரது மரணம் அதிர்ச்சி தருவதாக உள்ளது. காலச்சுவடு நிறுவனத்தில் பதிப்பாசிரியராக பணியாற்றியவர் இன்று முற்பகல் நாகர்கோவிலில் மாரடைப்பின் காரணமாக இயற்கை எய்தினார். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழகிக் கொள்.

புதிய சிறுகதை. ஏப்ரல் 2. 2026 சுதர்சனம் வீட்டின் முன்கேட்டைத் திறக்க முடியாதபடி அந்த பஸ் நின்றிருந்தது. அது ஏதோ போராட்டத்திற்காக வெளியூர் ஆட்களை ஏற்றி வந்த தனியார் பஸ். அதன் முகப்பில் பெரிய துணிபேனர் வைத்திருந்தார்கள். யார் அவர்கள், என்ன போராட்டம் என எதுவும் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் சுதர்சனத்திற்கு இல்லை. காரணம் அவர்கள் தெருவை ஒட்டிய திடலை சில ஆண்டுகளாகப் போராட்ட மைதானமாக மாற்றி விட்டிருந்தார்கள். அதற்குக் கேசிஆர் திடல் எனப் …

பழகிக் கொள். Read More »

இரண்டு ஊசிகள்

தனது என் சரித்திரம் நூலில் தமிழ்தாத்தா உ. வே. சாமிநாதையர் , தனது பாட்டனாரைப் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். வேங்கடாசலம் என்ற அந்தத் தாத்தா மரணத்தருவாயில் உ.வே.சாவின் அன்னையை அருகில் அழைத்து “ நீ எனக்கு எவ்வளவோ உபசாரம் செய்திருக்கிறாய் . நான் உன்னைப் பல சமயங்களில் கடிந்து பேசியிருக்கிறேன் . வருத்தப்படாதே. நீ நல்ல பெண் ” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய தலைமாட்டிலுள்ள சிறு மூட்டையை எடுத்து . அதில் போடப்பட்டிருந்த ஒரு முடிச்சை …

இரண்டு ஊசிகள் Read More »

உருமாறும் அன்றாடம்.

எரான் கொலிரின் இயக்கிய தி எக்ஸ்சேஞ்ச் என்ற இஸ்ரேலியத் திரைப்படம் நகரவாழ்வின் சலிப்பை, தனிமையை அழகாகச் சித்தரிக்கிறது. டெல் அவிவ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்யும் ஓடெட் ஒருநாள் தனது பையை வீட்டில் மறந்துவிட்டுச் செல்கிறான். அதை எடுப்பதற்காக வீடு திரும்பும் போது பகலில் தனது வீடு வேறு ஏதோ ஒரு தோற்றத்தில் இருப்பதாக உணர்கிறான். தனிமையாக வெறுமையாகவும் அமைதியாகவும் இருக்கும் ஒரு அந்நியனின் வீட்டிற்குள் நுழைந்தது போல் அவனுக்குத் தோன்றுகிறது அன்றாடம் காலை வேலைக்குப் போய்விட்டு …

உருமாறும் அன்றாடம். Read More »

நட்சத்திரத்தின் நிழல்

ஒருவர் உங்களை வானளாவப் புகழ்கிறார் என்றால் அது வெறும் பாராட்டாக மட்டுமிருக்காது. புகழ்பவர் மனதில் வேறு ஏதோ எண்ணங்கள் இருக்கக் கூடும். உங்கள் இடத்தை அடைவதற்குக் கூட அவர் உங்களைப் புகழக் கூடும். அபிமானியாக இருப்பவர் அப்பாவியில்லை. அவரது நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் நேரத்தில் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அரசியலிலும் வணிகத்திலும் திரைத்துறையிலும் இது போன்ற அபிமானிகளை, ஆராதகர்களை நிறையவே காணலாம். பல்வேறு உண்மை நிகழ்வுகள் இப்படி நடந்துமிருக்கின்றன. ஆறு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஆல் …

நட்சத்திரத்தின் நிழல் Read More »

தங்கள் பொறுப்பு

புதிய சிறுகதை. மார்ச் 20, 2026 சக்கையன் தலையில் கட்டியிருந்த சிவப்புத் துண்டினை அவிழ்த்து கையில் ஏந்தியபடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் “ வானரூ இறந்துபோயிட்டாரு.. தானம் பண்ணுங்க“ என்று கேட்டுக் கொண்டிருந்தான். வானரூ யார் என எவரும் கேட்டுக் கொள்ளவில்லை ஒரு சிலர் சில்லறைக் காசுகளைத் துண்டில் போட்டார்கள். ஒருவர் பேண்ட் பாக்கெட்டிலிருந்து மணிபர்ஸை வெளியே எடுத்துத் திறந்து பார்த்துவிட்டு இல்லை என்று கையை விரித்தார். சென்னையிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் வரவில்லை. …

தங்கள் பொறுப்பு Read More »

ஜெர்மன் மொழியாக்கம்

தமிழின் சிறந்த 16 சிறுகதைகளைத் தேர்வு செய்து ஜெர்மன் மொழியில் Meereswellen und andere Geschichten எனத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்கள். ஹேம் மகேஷ் மற்றும் சேரலாதன் இதன் மொழிபெயர்ப்பாளர்கள். கிறிஸ்டியன் வெயிஸ் இதன் வெளியீட்டாளர். Draupadi Verlag பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சென்னை சர்வதேசப் புத்தகத் திருவிழாவின் நிதிநல்கையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தொகுப்பில் எனது சிறுகதை திருடனின் மூன்று அற்புதங்கள் இடம் பெற்றுள்ளது,

கு.அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்

எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகளை ஆய்வாளர் பழ. அதியமான் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது. இதற்கான வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது, ஏப்ரல் 5 ஞாயிறு மாலை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அரங்கில் விழா நடைபெறுகிறது அதில் கலந்து கொண்டு கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் குறித்து உரையாற்றுகிறேன்

வாசகன் எனும் கதாபாத்திரம்

டேவிட் மார்க்சன் (David Markson) தனித்துவமான அமெரிக்க எழுத்தாளர். இவரது நாவல்கள் மேற்கோள்கள், தகவல்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டவை தீவிர வாசகன் ஒருவனின் சிதறுண்ட குறிப்புகளாக நீளும் இந்த வகை நாவல் புதிதானது. மரபான நாவல்களைப் போல இவரது படைப்பு ஒரு கதாபாத்திரத்தின் வழியே நிகழ்வுகளை விவரிப்பதில்லை. வாசகன் தான் இவரது புனைவின் மையக் கதாபாத்திரம். வாசகன் மனதில் பதிந்து போன இலக்கியம் மற்றும் கலை சார்ந்த நிகழ்வுகள். வரலாற்று தகவல்களைச் …

வாசகன் எனும் கதாபாத்திரம் Read More »