சிறிய நகரத்திலிருந்து ஒரு குரல்

Spring in a Small Town 1948ல் வெளியான சீனத் திரைப்படமாகும். சீனாவின் மகத்தான திரைப்படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது ஜியாங்னான் பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு பாழடைந்த குடும்ப வளாகத்தில் கதை நடைபெறுகிறது படம் ஒரு பெண்ணின் குரலில் துவங்குகிறது. பதினெட்டு நிமிஷங்கள் நீளும் காட்சிகள் முழுவதும் யுவென் என்ற இளம்பெண்ணின் குரலில் விவரிக்கபடுகின்றன. போருக்குப் பிந்திய இடிபாடுகள் கொண்ட நகரச் சுவரில் நின்றபடி யுவென் தனது வாழ்வினை விவரிக்கிறாள் கையில் காய்கறிக்கூடையும் கணவனுக்குத் …

சிறிய நகரத்திலிருந்து ஒரு குரல் Read More »

நிழலானை

புதிய சிறுகதை. மார்ச் 13. 2026 அவர்கள் ராய பூபதிக்காகக் காத்திருந்தார்கள். ஐமீன் பங்களா என்று அழைக்கபடும் ராயவிலாசம் மிகப்பெரிய வீடு. ஒரு காலத்தில் அந்த வீட்டில் ஐந்து குடும்பங்கள் ஒன்றாகக் குடியிருந்தார்கள். ராய பூபதியின் அண்ணன் புகழ்மாற பூபதி தற்கொலை செய்து கொண்டு இறந்தபின்பு ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிரிந்து போய்விட்டார்கள். குடும்பச் சொத்திற்காக நடந்த வழக்கில் பூபதிக்கு இந்த மாளிகையும் கொஞ்சம் நிலமும் மட்டுமே கிடைத்தது. குடும்பத்திற்குச் சொந்தமான கோவிலை நிர்வாகம் செய்யும் பொறுப்பும் …

நிழலானை Read More »

துறவியின் கவலை

மறுபிறவி எடுத்த புத்த துறவியாகக் கருதப்படும் சிறுவனைப் பற்றியது Becoming Who I Was ஆவணப்படம். இந்தக் கொரிய ஆவணப்படத்தை மூன் சாங்-யோங் இயக்கியுள்ளார். துறவிகளுக்கு கவலையிருக்குமா. இப்படத்தில் தன்னை வாழும் புத்தனாக அங்கீகரிக்க வேண்டி ஒரு இளந்துறவி கவலைப்படுகிறான். அந்த அங்கீகாரம் கிடைப்பது எளிதாகயில்லை. துறவியின் கண்ணீர் துளியைப் படத்தில் காணுகிறோம். திபெத்திய பௌத்த மரபில் மறுபிறவிக்கு முக்கிய இடமிருக்கிறது. லாமாக்களை அப்படித் தான் தேர்வு செய்கிறார்கள். இன்றைய தலாய் லாமா கூடத் தனது முற்பிறவி …

துறவியின் கவலை Read More »

“எம்பாவாய்“ வாசிப்பில் உருவாகும் உறவு

. பேராசிரியர் சாமி. பொ. விருதுநகர் நன்மதி எனும் அரிதானப் பெயர் கொண்ட ஒரு பெண்மணியின் மகள் தனது அம்மாவைப் பற்றி கூறுவது போல எழுதப் பட்ட கதைதான் “எம்பாவாய் “. 2014ல் வெளியான சிறுகதை. அவளது வீடு சிறுகதைத் தொகுப்பில் உள்ளது, சிறுகதையின் தலைப்பைப் பார்த்தவுடன் நம் அனைவருக்குமே ஸ்ரீ ஆண்டாள் எழுதிய திருப்பாவைதான் நினைவுக்கு வரும். இந்தக் கதைக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்னும் எண்ணத்துடன் கதையினை வாசிக்க ஆரம்பித்தேன். …

“எம்பாவாய்“ வாசிப்பில் உருவாகும் உறவு Read More »

தகழி

மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன்பிள்ளை குறித்து எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய ஆவணப்படம். சாகித்ய அகாதமி தயாரித்துள்ளது. எம்.டியின் குரலில் தகழியின் வாழ்வு விவரிக்கபடுகிறது. தகழியின் எழுத்தும் வாழ்வும் பற்றியதாக மட்டுமின்றி அன்றைய கேரளத்தின் சமூக நிலை, கல்வி பயிலும் முறைகள், பத்திரிக்கைகள், நீதிமன்றம். வழக்கறிஞர் வேலை என நூற்றாண்டின் சித்திரம் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கனவைத் துரத்தியவர்.

லெஃப்டர்: தி ஸ்டோரி ஆஃப் தி ஆர்டினேரியஸ் 2025 ல் வெளியான துருக்கி நாட்டுத் திரைப்படம். இப்படத்தை கேன் உல்கே இயக்கியுள்ளார். எர்டெம் கெய்னார்கா லெஃப்டராக நடித்துள்ளார். புகழ்பெற்ற துருக்கி கால்பந்தாட்ட வீரர் லெஃப்டரின் வாழ்க்கை வரலாற்றை படம் விவரிக்கிறது. கிரேக்க குடும்பத்தில் பிறந்த லெஃப்டர் துருக்கி அணிக்காக விளையாடி பெரும்சாதனைகளைச் செய்திருக்கிறார். லெஃப்டரின் வாழ்வின் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் படம் உண்மையாகப் பதிவு செய்துள்ளது. ஏதென்ஸில் கிரேக்கத்திற்கு எதிராகத் துருக்கி அணியில் அவர் விளையாடும் போது …

கனவைத் துரத்தியவர். Read More »

வரைபடமில்லாத பயணம்.

மவுண்டன்ஸ் ஆஃப் தி மூன் திரைப்படம் நைல்நதியின் தோற்றுவாயைக் கண்டறிவதற்காகப் பிரிட்டீஷ் ஆய்வாளர் ரிச்சர்ட் பர்டன் மற்றும் ஸ்பீக் மேற்கொண்ட நெடும்பயணத்தை விவரிக்கிறது. இப்படத்தைப் பாப் ரஃபெல்சன் இயக்கியுள்ளார் ரோஜர் டீகன்ஸின் கேமிரா படத்தின் பெரும்பலம். கிழக்கு ஆப்ரிக்காவின் முடிவற்ற நிலவெளியில் பர்டனின் குழு பயணிக்கும் போது கேமிரா அவர்களைப் பருந்தெனப் பின்தொடர்கிறது. இரவுக்காட்சிகளை ரோஜர் டீக்கன்ஸ் படமாக்கியுள்ள விதம் அற்புதம். குறிப்பாக மெழுகுவர்த்தி ஒளியில் பர்ட்டன் தனது காதலி இசபெலின் நிர்வாண உடலைக் காணும் போது …

வரைபடமில்லாத பயணம். Read More »

அஞ்சலி

பெருமதிபபிற்குரிய தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூற்றாண்டு கண்ட தியாகச் செம்மல் . பொதுவாழ்வில் அவர் காட்டிய தீரமும் அறமும் போற்றுதலுக்குரியது.

நீரறியா அன்னங்கள்

புதிய சிறுகதை. பிப்ரவரி 24, 2026 டர்க்கி டவலால் அன்னம் செய்வது அவளது வேலை. ஜேசி டவர்ஸ் ஹோட்டலில் அறுபத்து நான்கு அறைகளிருந்தன. அதில் ஆடம்பர அறைகள் எட்டு. அந்த அறைகளுக்கு மட்டும் வெண்ணிற டர்க்கி டவலால் அன்னம் செய்து வைக்க வேண்டியது ராஜதிலகத்தின் வேலை. ஜோடி அன்னங்கள் செய்து இதய வடிவில் படுக்கையில் வைக்க வேண்டும். அறையில் தங்குகிறவர்களில் குழந்தைகள் இருப்பார்கள் எனில் அவர்களுக்கெனக் குட்டியானை அல்லது முயலை டவலில் செய்து வைப்பது வழக்கம். டர்க்கி …

நீரறியா அன்னங்கள் Read More »

சி. சு. செல்லப்பா உரை.

நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் சி. சு. செல்லப்பா குறித்து உரையாற்றினேன். ஒரு மணி நேர விரிவான உரை. தமிழ்மொழித்துறை மாணவர்களும் ஆய்வுமாணவர்களும், பேராசிரியர்களும் நிறைந்த அவை. சி.சு.செல்லப்பாவின் பேரன் கார்த்திக் சுப்ரமணியன் பெங்களூரிலிருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த உரையில் செல்லப்பாவின் சுதந்திரப் போராட்ட அனுபவங்கள், அவரது, சிறுகதைகள் , புதுக்கவிதை உருவான விதம், அவர் முன்னெடுத்த அமெரிக்க இலக்கிய விமர்சன முறை, அவரது இலக்கிய நண்பர்கள், செல்லப்பாவின் …

சி. சு. செல்லப்பா உரை. Read More »