இரண்டு முடிவுகள்

பாவ்லோ ஸோரன்டினோ இத்தாலிய சமகால இயக்குநர்களில் முக்கியமானவர். இவரது சமீபத்திய திரைப்படம் லா கிராசியா, 2025ல் வெளியானது. இத்தாலியின் ஜனாதிபதியான மரியானோ டி சாண்டிஸ் தனது பதவிக்காலம் முடியும் தருவாயில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் தவிக்கிறார். ஒன்று கருணைக்கொலை தொடர்பான சட்டம். அதில் கையெழுத்து இடுவதன் வழியாகத் திருச்சபை மற்றும் எதிர்க்கட்சிகள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்துத் தயங்குகிறார். ஆகவே அதனை நீண்டகாலமாகவே கையெழுத்துப் போடாமல் தவிர்த்து வருகிறார். இரண்டு மரணதண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு …

இரண்டு முடிவுகள் Read More »

வார்த்தைகளின் இல்லம்

The Book of Embraces எட்வர்டோ கலியானோவின் முத்தொகுதிகளில் ஒன்று இந்த நூல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றை மையமாகக் கொண்டது. ஆய்வாளர்கள் வரலாற்றை உயரிய கோபுரமாகக் கட்ட முயலும் போது படைப்பாளிகள் அவற்றை நீருற்று போலவோ, பனி உருகியோடுவது போலவே மாற்ற முயலுகிறார்கள். வரலாற்றின் சிறுதுண்டுகளையே எடுவர்டோ கலியானோ உருவாக்குகிறார். கூழாங்கல்லைப் போன்ற அழகிய உருவம் கொண்ட அந்தச் சிறுகுறிப்புகள். குறுங்கதைகள், அசாதரண நிகழ்வுகள் வசீகரமாக விளங்குகின்றன. கலைடாஸ்கோப்பினுள் உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒன்று சேர்ந்து புதிய …

வார்த்தைகளின் இல்லம் Read More »

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில்

9வது நெல்லை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கிறேன். பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை மாலை எழுத்தாளர் அ.மாதவையா வாழ்வும் எழுத்தும் குறித்து உரையாற்றுகிறேன். அ. மாதவையா தமிழின் முன்னோடி நாவலாசிரியர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியைத் திருநெல்வேலியில் படித்திருக்கிறார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்றவர் Salt Inspector ஆகப் பணியாற்றியுள்ளார். முத்துமீனாக்ஷி, பத்மாவதி சரித்திரம், கிளாரிந்தா போன்ற நாவல்களை எழுதியுள்ளார் இந்தியாவின் புகழ்பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞரும் சுற்றுச்சூழல் ஆய்வாளருமான எம். கிருஷ்ணன் …

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் Read More »

சி.சு. செல்லப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை சார்பில் நடைபெறும் எழுத்தாளர் சி.சு. செல்லப்பா நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். மெரினா வளாக அரங்கில் 18.2.26 புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

ஷேக்ஸ்பியரின் மகன்

அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளரான மேகி ஓ’ஃபாரலின் ஹாம்னெட் நாவல் ஷேக்ஸ்பியரின் மனைவி பார்வையில் ஹாம்னெட்டின் இறப்பு மற்றும் அதன் விளைவுகளை விவரிக்கிறது. ஷேக்ஸ்பியரின் ஒரே மகன் ஹாம்னெட். இதில் ஆக்னஸ் எதிர்காலத்தை உணரும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திறனையும் கொண்ட மருத்துவராகச் சித்தரிக்கபடுகிறாள். கிரேக்க தேவதைகளில் ஒருவரைப் போலவே ஆக்னஸ் உருவாக்கபட்டுள்ளார் ஷேக்ஸ்பியரின் மனைவியைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை விவரிக்கும் இந்த நாவலை Nomadland திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற இயக்குரான Chloé Zhao திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்த …

ஷேக்ஸ்பியரின் மகன் Read More »

காற்றில் மிதக்கிறோம்

புதிய சிறுகதை. பிப்ரவரி 9 2026. அப்பாவும் அம்மாவும் மராத்தானில் ஓடிக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒரே போலக் கறுப்பு நிற டிராக் பேண்ட். மஞ்சள் நிற காலர் இல்லாத டீசர்ட். கழுத்தில் போட்டியில் தரப்பட்ட அடையாள அட்டை. காலில் ஸ்போர்ட்ஸ் ஷு. மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்த மினி மாரத்தான் போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பத்துகிலோமீட்டர் தூர ஓட்டமது. அப்பாவும் அம்மாவும் சாலையில் ஓடிக் கொண்டிருப்பதை யார் வீடியோ எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. இருவரும் சீராக …

காற்றில் மிதக்கிறோம் Read More »

கிளி சொல்லாதது

புதிய சிறுகதை பிப்ரவரி 7 2026 குழாயில் தண்ணீர் வராது எனப் பெரியதாக வாஷ்பேஷின் இருந்த சுவரில் எழுதி வைத்திருந்தார்கள். கூடவே ஒரு அம்புக்குறி கீழ் நோக்கி வரையப்பட்டிருந்தது. அங்கே ஒரு இரும்பு வாளி. அதில் பாதியளவு அழுக்குத் தண்ணீர். எவர்சில்வர் டம்ளர் ஒன்று தண்ணீருக்குள்ளே கிடந்தது. வாளிக்குள் கையை விட்டு டம்ளரை எடுக்கச் சாம்பசிவத்திற்கு அருவருப்பாக இருந்தது. இவ்வளவு பெரிய ஹோட்டல் நடத்துகிறவர்கள் கை கழுவத் தண்ணீர் இல்லாமல் வைத்திருக்கிறார்களே என்று எரிச்சலாகவும் வந்தது. அவன் …

கிளி சொல்லாதது Read More »

தொடுவிரல்.

புதிய சிறுகதை. பிப்ரவரி 6 2026 இந்த முறை மூன்றாவதுபரிசு கிடைத்திருந்தது. இரண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள வீட்டுஉபயோகப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று பத்திரிக்கையிலிருந்து வந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். பீங்கான் தட்டுகள்.கோப்பை கொண்ட பரிசுபெட்டியோ அல்லது கேசரோல்செட் ஒன்றோ அனுப்பி வைப்பார்கள். கிருதமால் பத்திரிக்கைகள் நடத்தும் போட்டியில் இதுவரை ஐம்பது நூறு துவங்கி ஐம்பதாயிரம் வரைப் பரிசாகப் பெற்றிருக்கிறான். பெரும்பாலும் அவன் கலந்து கொண்ட போட்டிகளில் ஏதேனும் ஒரு பரிசை வென்றுவிடுவது வழக்கம். அந்த அதிர்ஷ்டம் போட்டிக்கு …

தொடுவிரல். Read More »

காஃப்காவின் நாட்கள்

அக்னீஸ்கா ஹாலண்ட் இயக்கிய ஃபிரான்ஸ் 2025ல் அதிகம் எதிர்பார்க்கபட்ட திரைப்படமாகும். இது எழுத்தாளர் காஃப்காவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. காஃப்காவாக இடான் வெய்ஸ் சிறப்பாக நடித்திருக்கிறார், மிகப்பொருத்தமான தேர்வு. அவரது தோற்றம் அப்படியே காஃப்காவின் மறுஉருவம் போலிருக்கிறது. படத்தில் காஃப்காவின் நிஜமான புகைப்படங்களை அப்படியே திரைக்காட்சியாக உருவாக்கியிருக்கிறார்கள், அதில் இடான் வெய்ஸ் கச்சிதமாகப் பொருந்துகிறார். வழக்கமான வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களைப் போலின்றிக் காஃப்காவின் எழுத்து, கொந்தளிப்பான மனநிலை மற்றும் கனவுநிலைப்பட்ட காட்சிகளைக் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது. ஆகவே …

காஃப்காவின் நாட்கள் Read More »

திருவாரூர் புத்தகத் திருவிழாவில்

4வது திருவாரூர் புத்தகத் திருவிழா பிப்ரவரி 8 முதல் 17 வரை நடைபெறுகிறது இதில் பிப்ரவரி 10 மாலை எழுத்தாளரின் பயணம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன்