திருவாரூர் புத்தகத் திருவிழாவில்

4வது திருவாரூர் புத்தகத் திருவிழா பிப்ரவரி 8 முதல் 17 வரை நடைபெறுகிறது இதில் பிப்ரவரி 10 மாலை எழுத்தாளரின் பயணம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன்

யானைகளின் காவலன்

தி ரூட்ஸ் ஆஃப் ஹெவன் என்பது 1958 ஆம் ஆண்டு வெளியான ஜான் ஹுஸ்டன் இயக்கிய திரைப்படம், 1956 ஆம் ஆண்டு ரோமெய்ன் கேரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ஃபோர்ட் லாமியில் யானைகள் வேட்டையாடப்படுவதற்கு எதிராகப் போராடும் மோரல் என்ற கதாபாத்திரத்தின் வாழ்வினை படம் விவரிக்கிறது. சுற்றுப்புறச்சூழல் குறித்த இன்றைய விழிப்புணர்வும், இயக்கங்களும் உருவாவதற்கு முன்பு எழுதப்பட்ட நாவல் இது. உயரிய இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. நாஜிகளின் வதைமுகாமில் அடைப்பட்டிருந்த …

யானைகளின் காவலன் Read More »

கோவையில்

கவிஞர் சிற்பி அவர்களின் 90 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவலைகளின் தொகுப்பான நான் ஒரு வானம்பாடி நூலின் வெளியீட்டு விழா ஜனவரி 31 சனிக்கிழமை காலை கோவை கேபி ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

மன்னிப்பு : EMI வசதி உண்டு

புதிய சிறுகதை. ஜனவரி 25. 2026 தெரியாத எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. வாசவன் அதனை எடுக்கவில்லை. அதே எண்ணில் காலை பத்து மணிக்கும் அழைப்பு வந்ததாக ஞாபகம். லோன் கொடுப்பவர்கள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் அதிகமாகத் தொடர்பு கொள்கிறார்கள் என்பதால் அவர் தனது போனில் பதிவு செய்திராத எண்களில் இருந்து வரும் எந்த அழைப்பையும் ஏற்பதில்லை. முக்கியமான அழைப்பு என்றால் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு செய்தி அனுப்புவார்களே என்று நினைத்துக் கொள்வார். அன்றாடம் இரவு ஏழு மணிக்கு …

மன்னிப்பு : EMI வசதி உண்டு Read More »

நன்றி

49வது சென்னை புத்தகத் திருவிழா இன்றோடு நிறைவுபெற்றது. கடந்த இரண்டு வாரங்களாக நிறைய வாசகர்களை, நண்பர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. எனது தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து புத்தகங்கள் வாங்கி ஆதரித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த முறை இளைஞர்களே அதிக அளவில் புத்தகங்களை வாங்கினார்கள். தனது அப்பா அம்மாவிற்கு, தோழிக்கு, நண்பனுக்கு, உறவுகளுக்கு என அவர்கள் கைநிறைய புத்தகங்களை வாங்கிக் கையெழுத்து பெற்றுக் கொண்டது வாசிப்பில் உருவாகியுள்ள  புதிய மாற்றத்தின் அடையாளமாகவே …

நன்றி Read More »

லண்டனில் நரிகள்

தனது 99வது வயதில் டேவிட் அட்டன்பரோ இயக்கியுள்ள வைல்ட் லண்டன் ஆவணப்படம் வியப்பூட்டும் காட்சிகளைக் கொண்டிருக்கிறது. பிபிசி இதனைத் தயாரித்துள்ளது. பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடங்களும் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சின்னங்களும் கொண்ட லண்டன் மாநகரம் எண்ணிக்கையற்ற பூங்காங்களைக் கொண்டிருக்கிறது. இந்த நகரில் வளரும் விலங்குகளை அட்டன்பரோ ஆவணப்படுத்தியிருக்கிறார். லண்டன் நகரில் உலவும் நரிகளைக் காண ஆச்சரியமாகவுள்ளது. குறிப்பாகப் புதரிலிருந்து திடீரென ஒரு நரி வெளியே வருவதைக் காண சிலிர்ப்பாக உள்ளது. பத்தாயிரத்திற்கும் அதிகமான நரிகள் லண்டனில் வசிப்பதாகச் …

லண்டனில் நரிகள் Read More »

இடக்கை நாவல் கன்னடத்தில்

எனது இடக்கை நாவல் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. கனகராஜ் மற்றும் சம்பா ஜெயபிரகாஷ் இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள். விரைவில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளது. சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவின் நிதிநல்கையுடன் இதனை கன்னடத்தில் வெளியிடுகிறார்கள்.

புத்தகப் பரிந்துரைகள் -1

சென்னைப் புத்தகக் காட்சியில் நிறைய புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. நான் முக்கியம் எனக் கருதும் சில நூல்களைப் பரிந்துரை செய்கிறேன். இஸ்ஸாவும் பூஸனும் ஜப்பானின் புகழ்பெற்ற ஜென் கவிகளான இஸ்ஸா மற்றும் பூஸனின் தேர்ந்தெடுக்கபட்ட கவிதைகளை யுவன் சந்திரசேகர் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நூல்வனம் வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த புத்தகமாக்கம். அனாகத நாதம். இளந்தலைமுறையின் சிறந்த சிறுகதையாசிரியரான செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதைகளின் தொகுப்பு அனாகத நாதம். தனித்துவமிக்க மொழியழகும் கதைக்களமும் கொண்ட நேர்த்தியான கதைகள். சொற்றுணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது …

புத்தகப் பரிந்துரைகள் -1 Read More »

சாய்ந்தாடும் குதிரை

எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு சாய்ந்தாடும் குதிரை. இதில் 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சாய்ந்தாடும் குதிரை படித்தவுடன் எழுதுகிறேன். எங்கள் வீட்டில் ஒரு சிகப்பு நிற மரக்குதிரை இருந்தது. பதற்றத்துடன் இரட்டை சடை போட்ட சிறுமியாக அக்கா குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு போட்டோ உண்டு. இப்போது குதிரையும் இல்லை. அக்காவும் இல்லை. ஆனால் எனது மனம் இன்று கசிவது கதையில் வரும் இரண்டு மரக்குதிரைகளுக்காக.சாய்ந்தாடும் குதிரை அற்புதமான கதை சந்தானம். பெங்களூர்.

மஞ்சள் தருணங்கள்

இத்தாலிய நியோ ரியலிசத் திரைப்படங்கள் துவங்கி சமகால சர்வதேச திரைப்படங்கள் வரையிலான சினிமா கட்டுரைகளின் தொகுப்பு மஞ்சள் தருணங்கள். ஒவ்வொரு பண்பாட்டிற்கும் அதற்கென சொந்தக் குரல் உள்ளது. அது இலக்கியத்தில் மட்டுமின்றி திரைப்படங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது. ஆகவே சர்வதேச திரைப்படங்களைப் பார்ப்பது பல்வேறு சமூகங்களை, கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் உலகளாவிய அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. ஹாலிவுட் சினிமாவிற்கு வெளியே இயங்கும் திரைப்பட ஆளுமைகளையும், அவர்களின் தனித்துவமிக்க திரைப்படங்களை நாம் அறிந்து கொள்ள …

மஞ்சள் தருணங்கள் Read More »