குற்றமுகங்கள்

காலனிய காலத்தின் குற்றங்களை முன்வைத்து நான் எழுதிய புனைவுகளின் தொகுப்பு குற்றமுகங்கள். இந்த நூல் குறித்து கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் சிறப்பான மதிப்பீட்டை எழுதியுள்ளார். அகல் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி ••• எஸ். ராமகிருஷ்ணனின் குற்றமுகங்களில் வரும் சம்பவங்களும், நாயக, நாயகியரும் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்கள் வரை வாழ்ந்தவர்கள். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய அதே காலப்பகுதியில், இந்தியாவை ஆள்வதற்காக வந்த …

குற்றமுகங்கள் Read More »

அவர்களின் திருமணம்.

தொழிலதிபரான தனது கணவனை ஏமாற்றிப் பணம் பறிக்க நினைத்த இளம் மனைவி ஒரு திட்டம் தீட்டுகிறாள். அதன்படி வேறு ஒரு பெண்ணுடன் அவர் ஹோட்டல் அறையில் இருப்பது போன்ற நாடகத்தை ஏற்பாடு செய்கிறாள். அதைக் காரணம் காட்டி மிரட்டி அவரது சொத்துகளை எழுதி வாங்கிவிட முயலுகிறாள். ஆசை மனைவியால் ஏமாற்றப்படுவதை அறிந்த ஃப்ரெடி மெல்ரோஸ் தடுமாறிப்போகிறார். அந்தப் பெண் ஒரு வக்கீலை அழைத்து வந்து அவள் பெயருக்கு எல்லாச் சொத்துகளையும் எழுதி வாங்கிவிட முயலுகிறாள். சொத்து கிடைத்தவுடன் …

அவர்களின் திருமணம். Read More »

நாவல்வாசிகள்

இந்தியாவின் மகத்தான நாவல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்து தமிழ் திசை நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தியப் பண்பாடு மற்றும் சமூக வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்திய இலக்கியம் சிறப்பாகப் பிரதிபலித்துள்ளது. அதன் உன்னதப் படைப்பாளிகளையும் அவர்களின் தனித்துவமிக்க நாவலையும் இந்தத் தொடரில் அடையாளப்படுத்தியிருக்கிறேன் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள இந்த நூல்கள் நேஷனல்புக் டிரஸ்ட், சாகித்ய அகாதமி பதிப்பகங்களில் கிடைக்கின்றன. புத்தகத் திருவிழா தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 472 & 473 …

நாவல்வாசிகள் Read More »

தபால் பெட்டி எழுதிய கடிதம் / ஆங்கிலத்தில்

தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூலின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியுள்ளது. அந்த நூல் குறித்த அகிலேந்திரா என்ற மாணவரின் கடிதம் தபாலில் வந்து சேர்ந்தது. அவருக்கு நானும் நன்றிக் கடிதம் தபாலில் அனுப்பி வைத்தேன்.

தேசாந்திரி பதிப்பக அரங்கு

சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கு எண் 472 & 473 தினமும் மாலை 4.30 மணி முதல் 8 வரை தேசாந்திரி அரங்கில் இருப்பேன். விருப்பமான வாசகர்கள் சந்திக்கலாம்

துஞ்சன் இலக்கிய விழா

கேரளாவில் நடைபெற்ற துஞ்சன் இலக்கிய விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றினேன். பிரம்மாண்ட அரங்கு. திரளான மக்கள் கூட்டம். எழுத்தச்சனின் புகழ்பாடும் நிகழ்வுகள். நிறைய எழுத்தாளர்களும் கலைஞர்களும் வந்திருந்தார்கள். மறைந்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நினைவாக திறந்த வெளி அரங்கம் அமைக்கபட்டிருந்தது. எம்.டி. வாசுதேவன் நாயரின் வாழ்க்கை வரலாறு விரிவான நூலாக வெளியாகியுள்ளது. புத்தகத் திருவிழாவில் அந்த நூலை எழுத்தாளர் ஸ்ரீகுமாரிடமிருந்து நான் பெற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளித்தது. நானும் எனது மனைவியும் மூன்று நாட்கள் டாக்டர் ரகுராம் வீட்டில் …

துஞ்சன் இலக்கிய விழா Read More »

ஐந்தாவது எம்.ஏ.

புதிய சிறுகதை. டிசம்பர் 30 அம்மா சமையலறையின் விளக்கை போட்டிருந்தார். அது ஹாலில் படுத்திருந்த வள்ளியின் கண்களைக் கூசியது. கலைந்த உறக்கத்தினுடாக அவள் போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டாள். மணி நாலாக இருக்ககூடும். அலாரம் வைக்காமலே அம்மா தினமும் நான்குமணிக்கு எழுந்து கொள்கிறாள். சமையலறையினுள் கிரைண்டரை ஒட்டிய சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தனது பாடங்களைப் படிக்க ஆரம்பிப்பாள். உதடு அசையாமல் கண்கள் வரிகளைக் கடந்து செல்லும். ஊசியால் எம்பிராய்டரி வேலை செய்வது போலப் பாடங்களை மனதில் …

ஐந்தாவது எம்.ஏ. Read More »

துஞ்சன் இலக்கியவிழா

மலையாள மொழியின் தந்தையாகப் போற்றப்படும் துஞ்சத்து ராமானுசன் எழுத்தச்சனின் நினைவாக, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர், துஞ்சன் பறம்பில் ஆண்டுதோறும் துஞ்சன் இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. இதில் கலைநிகழ்ச்சிகள். இலக்கிய அமர்வுகள். புத்தக வெளியீடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு நடைபெறும் துஞ்சன் இலக்கியவிழாவைத் துவக்கி வைக்க அழைக்கப்பட்டிருக்கிறேன். ஜனவரி 2 திரூரில் நடைபெறும் இலக்கிய விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறேன். இந்த இலக்கிய விழா ஜனவரி 6 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதில் மலையாளத்தின் …

துஞ்சன் இலக்கியவிழா Read More »

கெஞ்சிக் கதை / உலகின் முதல்நாவல் உரை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானிய மொழியில் லேடி முரசாகி எழுதிய கெஞ்சிக் கதை நாவல் குறித்து சிறப்புரை ஆற்றினேன். 1300 பக்கங்களுக்கும் மேலான இந்த நாவலுக்கு மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. தமிழில் இந்த நாவலின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அது முழுமையானதில்லை.