புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்

டிசம்பர் 25 மாலை எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய இளைஞர்கள். திருப்புகழ் ஐஏஎஸ் நூல்களை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்தினார். கவிஞர் ஷங்கர ராம சுப்ரமணியன் குற்றமுகங்கள் குறித்து செறிவான உரையை நிகழ்த்தினார். இந்த உரை அகல் இணைய தளத்தில் தனிக்கட்டுரையாக வெளியாகியுள்ளது நிலக்கோட்டை ஸ்ரீதர் எனது சிறுகதைகள் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. நிகழ்வில் ஆயிரம் ஆண்டுகளுக்கு …

புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள் Read More »

உலகின் முதல் நாவல்

டிசம்பர் 25 மாலை எனது புத்தக வெளியீட்டு விழாவில் உலகின் முதல் நாவல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறேன் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

டாலியின் அனிமேஷன்

1946-ல் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து ஓவியர் சால்வடார் டாலி ஒரு அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்க முயன்றார். ‘Destino’ என்ற அந்த அனிமேஷன் அவரது காலத்தில் முடிக்கபடவில்லை. 2003-ல் முடிக்கப்பட்ட இக் குறும்படம் டாலியின் வியப்பூட்டும் கற்பனையை அழகாக வெளிப்படுத்துகிறது. 1945 ஆம் ஆண்டு வார்னர் ஸ்டுடியோவின் உரிமையாளரான ஜாக் வார்னர் வீட்டில் நடந்த விருந்தில் டிஸ்னியும் டாலியும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது தனது சர்ரியல் ஓவியங்களைக் கொண்ட அனிமேஷன் ஒன்றை உருவாக்க விரும்புவதாக டாலி தெரிவித்தார். அதனை …

டாலியின் அனிமேஷன் Read More »

புத்தக வெளியீட்டு விழா / டிசம்பர் 25

எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

இருவேறு உலகம்.

The Best Years of Our Lives 1946ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம். ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்ற படம். இதனை வில்லியம் வைலர் இயக்கியுள்ளார் இரண்டாம் உலகப் போரிலிருந்து மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் வீடு திரும்புகிறார்கள். அவர்கள் சிறிய வணிக விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மூவரும் ராணுவத்தின் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு பதவிகளை வகித்தவர்கள். அவர்கள் புதிய கனவுகளுடன் வீடு திரும்புகிறார்கள். அந்தப் பயணத்தில் மூவரும் நண்பர்களாகிறார்கள். ஆகாயத்தில் பறந்தபடியே …

இருவேறு உலகம். Read More »

ஆழ்ந்த இரங்கல்கள்

அன்பிற்குரிய நண்பர் அம்மாசத்திரம் சரவணன் மறைவு மிகுந்த மனவருத்தம் தருகிறது.   தினமதி நாளிதழில் சரவணன் பணியாற்றிய நாட்களில் அவரது அறையில் தங்கியிருக்கிறேன். அவருடன் திருபுவனம் சென்று நண்பர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். சரவணன் மிகுந்த நேசத்துடன் பழகுவார். அவரது மறைவு தாளாத மனத்துயரை அளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு சரவணன் ஒரு இரவு போனில் அழைத்திருந்தார். பழைய நாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் ஊடாக மறைந்த திருபுவனம் கனகு பற்றிப் பேசி கண்ணீர் சிந்தினோம். சொந்த …

ஆழ்ந்த இரங்கல்கள் Read More »

நட்சத்திரங்களின் இடைவெளி

அனதோல் பிரான்ஸின் பால்தஸார் சிறுகதையைப் புதுமைப்பித்தன் மொழியாக்கம் செய்திருக்கிறார். இயேசு பிறந்த போது அவரைக் காண காணிக்கையுடன் வந்த மூன்று ஞானியர்களில் ஒருவர் தான் இந்தப் பால்தஸார். மற்ற இருவர் காஸ்பர் (Caspar), மற்றும் மெல்கியர் (Melchior) ஆகும். மூவரும் நட்சத்திரங்களின் வழிகாட்டுதலில் பயணம் செய்தவர்கள். இவர்கள் குறித்துப் பல்வேறு புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் அனதோல் பிரான்ஸின் கதை வியப்பூட்டக்கூடியது இக்கதை பால்தஸாரின் காதலை விவரிக்கிறது. அதுவும் பால்தஸார் பித்தாக அரசி பெல்கிஸைக் காதலிக்கும் போது அவள் …

நட்சத்திரங்களின் இடைவெளி Read More »

சாய்ந்தாடும் குதிரை

எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு சாய்ந்தாடும் குதிரை. டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

நாவல்வாசிகள்

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. அதில் ஐந்து புதிய நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் நடத்தும் இந்த வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் மகத்தான இந்திய நாவல்களைக் கொண்டாடும் நாவல்வாசிகள் இந்து தமிழ்திசை நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பொம்மைகளின் பேரரசன்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 வியாழன் மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது ஐந்து நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. பொம்மைகளின் பேரரசன் சிறார்களுக்கான புனைகதை. இதில் வரும் பொம்மைகளின் பேரரசன் முடிவில்லாத பயணத்தை மேற்கொள்கிறான். அவன் சொல்லும் கதைகளின் வழியே விசித்திரமான வாழ்க்கையும் மனிதர்களும் அறிமுகமாகிறார்கள். நட்சத்திரங்களின் வீட்டைத் தேடும் ஆடும். கதை கேட்கும் மீன்களும், முதலையை வரையும் ஓவியனும். எரிமலைக்குள் கதை சொல்லும் பூர்வகுடிகளும் …

பொம்மைகளின் பேரரசன் Read More »