தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில்
19.7.2023 புதன்கிழமை மாலை தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன் தலைப்பு : எழுத்தின் பாதை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
19.7.2023 புதன்கிழமை மாலை தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன் தலைப்பு : எழுத்தின் பாதை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது மேஜிகல் ரியலிச எழுத்திற்காகப் புகழ்பெற்றவர். அவரது நாவல்களை விடவும் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சிறுகதைகளில் அவர் உருவாக்கிக் காட்டும் அற்புதங்கள் நிகரில்லாதவை. 1970ல் வெளியான அவரது சிறுகதை. DEATH CONSTANT BEYOND LOVE. இப்போது வாசிக்கும் போதும் வியக்கவைக்கிறது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் சிறுகதையில் அரிய 3சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் இந்தக் கதை தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் நாற்பத்திரண்டு வயதான செனட்டர் ஒனேசிமோ சான்செஸ் பற்றியது. அவர் இறப்பதற்குப் பதினொரு …
எத்தனை முறை பார்த்தாலும் வியப்புக் குறையாத திரைப்படங்களை உருவாக்கியவர் செர்ஜியோ லியோனி. ஏழு திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் என்ற தனிவகைச் சினிமாவை உருவாக்கியவர் செர்ஜியோ லியோனி. அவரது காட்சிக்கோணங்களும் ,இசையைப் பயன்படுத்தும் விதமும், பரபரப்பான கதைத்திருப்புகளும் மறக்கமுடியாதவை. எவரது நிர்ப்பந்தத்திற்கும் கட்டுப்படாமல் நான் படங்களை இயக்கக்கூடியவன் என்கிறார் செர்ஜியோ. இவரது தந்தையும் ஒரு திரைப்பட இயக்குநரே. முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். இவரும் இசையமைப்பாளர் எனியோ மோரிகோனும் பள்ளி நண்பர்கள். இவர்கள் …
ஜுலை 28 வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் உரையாற்றுகிறேன். தலைப்பு : புத்தகத்தின் கைகள். இடம் : நகர் மன்றம் புதுக்கோட்டை
கவிஞர் ஞானக்கூத்தன் வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையில் வருவது போல எனது பள்ளி நாட்களில் அறிவியல் பாடம் நடத்தும் போது எலும்புக் கூடு ஒன்றை வகுப்பறைக்குக் கொண்டுவருவார்கள். அந்த எலும்புக்கூடு மனிதன் யார் என்று தெரியாது. அவனது கைகால்களின் எலும்புகளைக் காட்டி ஆசிரியர் டார்வின் தியரியை விளக்கிச் சொல்லுவார். வகுப்பு முடிந்தவுடன் எலும்பு கூட்டை கொண்டு போய்ச் சயின்ஸ் லேப் உள்ளிருந்த கண்ணாடி பெட்டகத்திற்குள் வைத்துவிடுவார்கள். காரிடாரில் எலும்புக்கூடு போவதைக் காண …
வல்லினம் கலை இலக்கிய இதழில் எனது புதிய சிறுகதை வகுப்பறையில் ஒரு திமிங்கலம் வெளியாகியுள்ளது. இணைப்பு :
அமரர் அ.ராமசாமி எழுதிய தமிழ்நாட்டில் காந்தி நூல் அறிமுகவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு நூல் குறித்து உரையாற்றினேன்
ஜோஹன்னஸ் வெர்மீரின் ஒவியங்கள் இன்று பெற்றுள்ள புகழை அவர் வாழும் நாளில் பெறவில்லை. இதுவரை அவரது 34 ஓவியங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பல்வேறு நாடுகளின் அருங்காட்சியகங்களில் இடம்பெற்றுள்ள அவற்றை ஒரு சேர கண்காட்சியாக வைக்க முயலுகிறார்கள். அது குறித்த ஆவணப்படமே close to vermeer. இதனை சுசான் ரேஸின் இயக்கியுள்ளார். ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பணியாற்றும் ஜார்ஜ் வெபர். தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு மிகப்பெரிய வெர்மீர் கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனவு …
தமிழ் இணைய இதழ்களில் முதன்மையானது சொல்வனம். சர்வதேச இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும். சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து வெளியிடுவதிலும் சொல்வனம் சிறப்பாகப் பங்களித்து வருகிறது. சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள். https://solvanam.com/ சொல்வனம் 300ஆம் இதழ் : புதிய எழுத்துகளும் புதுப் புத்தகங்களும் குறித்த சிறப்பிதழாக வெளிவருகிறது. இம்முறை இளம் எழுத்தாளர்கள், புது எழுத்து முறைகள், தமிழின் அடுத்தக் கட்டப் பாய்ச்சல்களை முன்வைக்கும் முகமாக 300வது இதழை இளம் படைப்பாளிகளைக் கவனப்படுத்தும் …
எனது உப பாண்டவம் நாவல் மலையாளத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கே.எஸ்.வெங்கடாசலம். DC புக்ஸ் வெளியிட்டுள்ளார்கள். குறுகிய காலத்தில் இதன் முதற்பதிப்பு விற்றுத்தீர்ந்து இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது என்ற மகிழ்ச்சியை வெங்கடாசலம் பகிர்ந்து கொண்டார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. ஜுலை 3 2023.