அரவான் – கல்லூரி பாடம்
தஞ்சாவூரில் இயங்கிவரும் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் அரவான் நாடகம் யூனிட் 3 பாடமாக வைக்கபட்டுள்ளது.
தஞ்சாவூரில் இயங்கிவரும் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் அரவான் நாடகம் யூனிட் 3 பாடமாக வைக்கபட்டுள்ளது.
சசி எம் குமார் எழுதிய திண்ணை இருந்த வீடு சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். 23 சின்னஞ்சிறு கதைகள். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தனது கிராமிய நினைவுகளையும் வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத மனிதர்களையும் அழகான சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். மூன்று நான்கு பக்கங்களே உள்ள இந்தக் கதைகள் காட்சி ரூபமாகக் கண்முன்னே விரிகின்றன. கதை என்று சொன்னாலும் இவை உண்மையான வாழ்க்கைப் பதிவுகள். இந்த மனிதர்களில் சிலரை நாம் அறிவோம். அவர்களுக்கு வேறு பெயர்கள் இருக்கக் கூடும். சசி இவர்களைத் …
தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பினை ஒரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இருநூறு பக்க அளவில் வெளியாகியுள்ளது The Man Who Walked Backwards and Other Stories தொகுப்பில் 18 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. வாசகர்கள், நண்பர்கள் இந்த நூலை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். குறிப்பாகப் பிறமாநிலங்களிலும், அயல்நாட்டிலும் வசிக்கும் வாசகர்கள் இதனை வாங்கி நண்பர்களுக்கும் நூலகங்களுக்கும் பரிசாக அளிக்கலாம். நூலை வாங்குவதற்கான இணைப்பு. https://www.orientblackswan.com/details?id=9789354424373
ஜான் ஃபோர்டின் The Searchers ஹாலிவுட் சினிமாவின் காவியங்களில் ஒன்றாகும். இது ஜான் ஃபோர்டின் நூற்றுப் பதினைந்தாவது திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார் ஜான் ஃபோர்ட். அவரது மோசமான குடிப்பழக்கம் மிதமிஞ்சிய கோபம் காரணமாக அவரைக் கண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். திரையில் அவர் உருவாக்கிக் காட்டிய பிரம்மாண்டம் இன்றும் அதிசயமாகப் பேசப்படுகிறது. இப்படம் ஃபிராங்க் எஸ். நுஜென்ட் எழுதிய திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவர் ஜான் ஃபோர்டின் 11 …
யூஜி.அருண் பிரசாத். தூத்துக்குடி. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நிலம் கேட்டது கடல் சொன்னது புத்தகத்தில் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இன்றைய ஹிரோஷிமா எப்படி இருக்கிறது என்பதில் துவங்கி வரலாற்றில் ஜப்பான் எப்படி இருந்தது , ஏன் ஹிரோஷிமா நாகசாகி என்ற இரு ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டது என்பது வரை தனது விரிவான பயண அனுபவங்களைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா. இதை வாசிக்கும் போது நாமும் அவருடன் இணைந்து ஜப்பானில் …
கோவை புத்தகக் கண்காட்சியில் இரண்டு நாட்களும் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். இனிமையான அனுபவமாக இருந்தது. வாசிக்க வேண்டிய புத்தகங்கள், அரிய ஒவியங்கள், உலகசினிமா, மற்றும் எழுதும் கலை குறித்து அறிந்து கொள்வதில் இளம்வாசகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தேசாந்திரி சார்பில் இதற்கென சிறப்பு நிகழ்வுகளை நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நாள் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். சனிக்கிழமை மாலை மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற கோல்டன் லீப் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து …
புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ள நாளை கோவை வருகிறேன். 22 .07.23 சனிக்கிழமை மற்றும் 23.07.23 ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் கோவையில் இருப்பேன். புத்தகத்திருவிழாவில் தேசாந்தரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 17. அங்கே என்னைச் சந்திக்கலாம். சனிக்கிழமை மாலையும், ஞாயிறு காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை தேசாந்திரி அரங்கில் இருப்பேன்.
கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர் பூபதி எனது சஞ்சாரம் நாவலின் ஒரு பகுதியை காமிக்ஸ் வடிவில் உருவாக்கியிருப்பதாக விரிவுரையாளரும் நண்பருமான கோ.வில்வநாதன் தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பூபதியை நேரில் காண வேண்டும் என அழைத்து வரச் சொன்னேன். சில தினங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். திரைப்படங்களுக்கான ஸ்டோரி போர்ட் வரைவதில் முனைப்புடன் செயல்படுகிறார் பூபதி தனது விருப்பத்திற்காக சஞ்சாரம் நாவலின் முதல் அத்தியாயத்தை காமிக்ஸ் வடிவில் உருவாக்கியிருக்கிறார். மிக அழகான ஓவியங்கள். கருப்பு …
சோழநாட்டில் பௌத்தம் பரவியிருந்த வரலாறு மற்றும் புத்தர் சிலைகள் குறித்து நீண்டகாலமாக ஆய்வு செய்து வருபவர் முனைவர் ஜம்புலிங்கம். இவரது களப்பணியின் காரணமாக அய்யம்பேட்டை, உள்ளிக்கோட்டை, காஜாமலை, குடவாசல், குழுமூர், சுந்தரபாண்டியன் பட்டினம், திருநாட்டியத்தான்குடி, பட்டீஸ்வரம், புதூர், மங்கலம், வளையமாபுரம் போன்ற ஊர்களில் அரிய புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. ஜம்புலிங்கம் தனது முப்பது ஆண்டுகாலப் பௌத்த ஆய்வின் தொகுப்பாகச் சோழநாட்டில் பௌத்தம் என்ற நூலை எழுதியுள்ளார். அழகிய புகைப்படங்களுடன் கெட்டி அட்டையில் நேர்த்தியாக இந்நூலை புது எழுத்துப் …
கொரோனா காலத்தில் உலகெங்கும் மூன்று புத்தகங்கள் விரும்பி வாசிக்கப்பட்டன. ஒன்று Albert Camus எழுதிய The Plague நாவல் மற்றொன்று Daniel Defoe எழுதிய A Journal of the Plague Year மூன்றாவது jose saramago எழுதிய blindness நாவல். பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் ஏன் இதை வாசிக்க விரும்பினார்கள் என்பது குறித்து இப்போது நிறையக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளியாகி வருகின்றன. நெருக்கடியான காலத்தில் மக்கள் என்ன புத்தகத்தை வாசிக்கத் தேர்வு செய்கிறார்கள் என்பது முக்கியமானது. …