பசியற்றவள்

அயர்லாந்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் பேரதிர்ச்சி இன்றும் அவர்கள் ஆழ்மனதில் படிந்திருக்கிறது. அந்த நினைவுகளின் வெளிப்பாடு போலவே The Wonder திரைப்படம் உருவாகியுள்ளது, செபாஸ்டியன் லீலியோ இயக்கியுள்ள இந்தப் படம் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் சிறுகதையைப் படிப்பது போல விந்தையும் நிஜமும் ஒன்று கலந்திருக்கிறது. கதையின் மகத்தான விந்தையாக முன்வைக்கப்படுவது பசியே. அன்னா என்ற சிறுமி நான்குமாதங்களாக எதையும் சாப்பிடுவதில்லை. அவளிடமிருந்து பசி மறைந்துவிடுகிறது. அவள் உணவு உட்கொள்ளாமலே உயிர்வாழுகிறாள். இந்த விந்தையை ஊர் மக்களால் புரிந்து …

பசியற்றவள் Read More »

தலைகள் இரண்டு

புதிய சிறுகதை பிப்ரவரி 16 2023 குளோபல் செக்யூரிட்டி சிஸ்டம் நிறுவனத்தில் மனோகர் வேலை செய்து கொண்டிருந்தான். கண்காணிப்புக் கேமிரா பொருத்துவது தான் அவனது பணி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குளோபல் செக்யூரிட்டி சிஸ்டத்தில் வேலை கிடைத்தது. மூன்று மாத பயிற்சி கொடுத்தார்கள். அதன்பிறகு நேரடியாகக் கண்காணிப்புக் கேமிரா பொருத்தும் பணியில் ஈடுபடத் துவங்கிவிட்டான் அவனது நிறுவனம் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது. அவர்கள் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி தருவதுடன் அதன் பராமரிப்பு பணியினையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதால் …

தலைகள் இரண்டு Read More »

கதைகளின் நாற்காலி

இயக்குநர் வசந்தபாலன் (கர்னலின் நாற்காலி குறுங்கதைகள் தொகுப்பு குறித்து இயக்குநர் வசந்தபாலன் எழுதியுள்ள குறிப்பு.) எஸ்ரா சிறுகதைகளின் கருவைக் கண்டடைவதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.வரலாற்று மனிதர்கள் தவற விடும் இடைவெளிகளைக் கச்சிதமாக எடுத்து கதைகளாக்கிவிடுவார். அப்படி இந்த 125 குறுங்கதைகளில் பல அற்புதமான கதைகள் உள்ளன. உலகின் உயர்ந்த இலக்கியமாகக் கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னகரீனாவில் அன்னாகரீனா தனது மகனுக்காக பொம்மை வாங்கினாள் என்ற இடத்தை அபகரித்து ஒரு கதை எழுதியிருக்கிறார். தன்னைப்பிரிந்து வாழும் மகனுக்கு “உண்மையில் அன்னா …

கதைகளின் நாற்காலி Read More »

நகரம் விழுங்கிய மனிதர்கள்.

ஆற்றின் சுழல் நம்மை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவதைப் போலச் சில நாவல்கள் நம்மை அதன் ஆழத்திற்குள் இழுத்துக் கொண்டுவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்தபிறகும் அதிலிருந்து வெளிவர முடியாது. மனதில் கதாபாத்திரங்கள் நடமாடியபடியே இருக்கும். அப்படியொரு நாவல் தான் அன்னையின் குரல். ஆப்பிரிக்க நாவலான இதை எழுதியவர் ஆலன் பேடன் ஆலன் பேடனின் புகழ்பெற்ற நாவலான Cry, the Beloved Country தமிழில் அன்னையின் குரல் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவல் குறித்த கவனம் தமிழ்ச் சூழலில் உருவாகவில்லை. …

நகரம் விழுங்கிய மனிதர்கள். Read More »

அப்பாவின் பெயர்

புதிய சிறுகதை பிப்ரவரி 9 2023 பேராசிரியர் அருண்சர்மா தொலைபேசியில் அவளை அழைத்தபோது இரவு ஒன்பது மணியிருக்கும். அவரது குரலில் அவசரம் தெரிந்தது “சகுந்தலா உங்கப்பா வீட்டுக்கு வந்துட்டாரா“ “இல்லை. ஏதோ மீட்டிங் இருக்குனு வெளியே போயிருக்கார் இன்னும் வரலை“ “அவர் ஐசிஎல் அவார்ட் செலக்சனுக்குப் போயிருக்கார். அதுல உன் பேரு இருக்கு. அவர் இதைப் பற்றி ஒண்ணும் சொல்லலையா“ “இல்லையே. “ “மூணு நடுவர்ல உங்கப்பாவும் ஒருத்தர். நிச்சயம் உனக்கு அவார்ட் கிடைக்கும்னு நினைக்குறேன்“ “லிஸ்ட்ல …

அப்பாவின் பெயர் Read More »

தர்மகீர்த்தியின் மயில்கள்

புதிய சிறுகதை பிப்ரவரி 7 2023 இந்தக் கதையில் நடக்கும் நிகழ்வுகள் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்திருக்கக்கூடும். அல்லது அந்த நூற்றாண்டில் பல்லவ இளவரசனாக இருந்த தர்மகீர்த்தி பற்றியதாக இருக்கவும் கூடும். தர்மகீர்த்தி ஒரு சிறுகாப்பியம் எழுதியிருக்கிறார். அதன் பெயர் தர்மகீர்த்தியாணம். முடிமன்னர்கள் கவிஞராக மாறுவதும் கவிதைகள் எழுதி அங்கீகாரம் கேட்பது தமிழ் கவிதை மரபின் விசித்திரம். தன்னிடம் இல்லாத எந்த அங்கீகாரத்தைக் கவிதையின் வழியே மன்னர் அடைய முற்படுகிறார் என்பது புரியாதது.. தோல்வி தான் மன்னர்களைக் …

தர்மகீர்த்தியின் மயில்கள் Read More »

வலது கன்னம்

புதிய சிறுகதை. பிப்ரவரி 3. 2023 வீட்டுச் சாமான்கள் முழுவதையும் வேனில் ஏற்றியிருந்தார்கள். அந்த வேன் முதுகில் வீட்டை தூக்கிச் செல்லும் பெரியதொரு நத்தையைப் போலிருந்தது ஒரு வீட்டிற்குள் இவ்வளவு பொருட்கள் எப்படியிருந்தன என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அவனுக்குப் பதிநான்கு வயது நடந்து கொண்டிருந்தது. ஆனால் பத்துவயது பையன் போல மெலிந்த தோற்றம் கொண்டிருந்தான். போலீஸ் கட்டிங் போல வெட்டப்பட்ட தலை. கழுத்து எலும்புகள் சற்றே துருத்திக் கொண்டிருந்தன. முதன்முறையாக அவர்கள் வேனில் பயணம் …

வலது கன்னம் Read More »

ஆங்கிலத்தில்

எனது வானில் எவருமில்லை சிறுகதையை ஆர்.சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இக்கதை Borderless இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு https://borderlessjournal.com/2023/01/20/nobody-in-the-sky/

தொப்பி அணிந்த டால்ஸ்டாய்.

ஜி.கோபி மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த வாசிப்பனுபவம் •• மண்டியிடுங்கள் தந்தையே நாவல் திறந்த வேகத்தில் வாசித்து முடித்துவிடக் கூடிய எளிய சுவாரசியமான புத்தகம். ஆனாலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வாசித்தேன். ரஷ்யவில் யஸ்யானா போல்யானா பண்ணைக்குச் சென்று டால்ஸ்டோயை பார்த்து உடன் பழகியது போல இருந்தது. அந்தப் பண்ணையின் மீதுள்ள ஒரு மணற் குன்றின் மீது நின்று கொண்டு அங்குள்ள விவசாயிகளோடு தொப்பி அணிந்த படி டால்ஸ்டோய் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எந்த …

தொப்பி அணிந்த டால்ஸ்டாய். Read More »

வெயிலின் சங்கீதம்

சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன். நாவல் குறித்த வாசிப்பனுபவம் சுயாந்தன் (Suyaanthan Ratneswaran )· ** நாதஸ்வர இசையினையும் அதனை வாசிக்கும் கலைஞர்கள் பற்றியதுமான அற்புதமான  ஒரு நாவல் “சஞ்சாரம்”. கி.ராவுக்கு பின்னர் தமிழில் நாதஸ்வரம் பற்றி அதிகம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்றே நினைக்கிறேன்.  இந்த நாவலை வாசித்து விட்டுக் கோயில்களில் நாயனம் வாசிக்கும் ஒரு வித்துவானிடம் உங்கள் கலையைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் நானூறு பக்கத்தில் பெருங்கதை ஒன்றை எழுதியுள்ளார். அதில்  அசுரவாத்தியம் என்று அவர் …

வெயிலின் சங்கீதம் Read More »