முடிவில்லாப் போராட்டம்

நீதி மறுக்கப்பட்ட ஒருவனின் போராட்டத்தை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது Ghodwa. 2021ல் வெளியான துனிசியப்படம். துனியப்புரட்சிக்குப் பிந்திய அரசியல் சூழலை விவரிக்கும் இப்படத்தை இயக்கியவர் தாஃபர் எல்’அபிதீன். இவரே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அதிகாரத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் வழக்கறிஞரான ஹபீப் தீவிரமான மனச்சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறார். புரட்சிக்கு முந்திய அரசின் மோசமாக வன்கொடுமையால் அவரைப் போலப் பலரும் பாதிக்கப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். புரட்சி அரசாங்கம் உருவானதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹபீப் நம்பினார். ஆனால் …

முடிவில்லாப் போராட்டம் Read More »

கோபத்தின் எடை

புதிய சிறுகதை. 2023 ஜனவரி 28. நீண்டநேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது பிரேமாவிற்குக் கால் சூகை பிடித்துக் கொண்டது. பேருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்த போது இரவு மணி பதினோறு இருபதைத் தாண்டியிருந்தது பஸ்ஸை விட்டு இறங்கி காலை உதறிக் கொண்டாள். தலையில் போடப்பட்ட முக்காட்டினை விலக்கி சேலையைச் சரிசெய்து கொண்டாள். மூக்குக்கண்ணாடியில் படித்த தூசியைச் சேலை நுனியால் துடைத்துக் கொண்டாள். மனதில் கோபம் நிரம்பிவிட்டால் ஏனோ கால் வீங்கிவிடுகிறது. வீட்டிலிருந்த போதும் இதை உணர்ந்திருக்கிறாள். பேருந்து …

கோபத்தின் எடை Read More »

கவிஞனும் கவிதையும் 1 பொதுவெளியின் குரல்

பிரிட்டனில் சென்ற ஆண்டு வெளியான கவிதைத் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை ஒன்றில் நம்முடைய காலத்தில் கவிதை பொதுவெளியின் குரல் என்பதிலிருந்து உருமாறித் தனிப்பட்ட உரையாடலாகச் சுருங்கிவிட்டது என்று வால்டர் பிளமிங் குறிப்பிடுகிறார். அவரது கட்டுரையில் இன்று கவிதை வாசிப்பவர்களாகக் கவிஞர்களும் குறைவான வாசகர்களும் மட்டுமே இருக்கிறார்கள். கவிதை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பழங்காலக் கடிகாரம் ஒன்றைப் போலிருக்கிறது . கவிதைக்கான பிரத்யேக மொழியும் சிறப்பு வடிவங்களும் தேய்ந்து கவிதையென்பது சிறிய உரைநடைபோல மாறிவிட்டது என்றும் விவரிக்கப்படுகிறது இந்தக் கட்டுரை …

கவிஞனும் கவிதையும் 1 பொதுவெளியின் குரல் Read More »

போர்ஹெஸ் துப்பறிகிறார்

லூயிஸ் பெர்னாண்டோ வெரிசிமோ பிரேசிலின் புகழ்பெற்ற எழுத்தாளர், போர்ஹெஸ் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர் BORGES AND THE ETERNAL ORANG-UTANS என்ற நாவலை எழுதியிருக்கிறார் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆங்கில நாவல்கள் விற்கும் பழைய புத்தகக்கடை குவியல் ஒன்றினுள் இந்த நாவலைக் கண்டெடுத்தேன். எட்கர் ஆலன் போ பற்றிய கருத்தரங்கிற்காகப் பியூனஸ் அயர்ஸ் நகருக்கு வருகை தரும் வோகெல்ஸ்டீன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு துப்பறியும் கதையை எழுதியிருக்கிறார். வியப்பூட்டும் இந்த நாவலில் போர்ஹெஸ் துப்பறியும் …

போர்ஹெஸ் துப்பறிகிறார் Read More »

தெலுங்கு சிறுகதை தொகுப்பில்

மொழிபெயர்ப்பாளர் பாலாஜி தமிழிலிருந்து சிறந்த கதைகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த தொகுப்பில் எனது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது

அதிகாரத்தின் அறைகள்

(இடக்கை ‘ நாவல் விமர்சனம்; நெய்வேலி பாரதிக்குமார்  அதிகாரம் என்பது எல்லா காலத்திலும் இரக்கமற்றது, கொலைக்கரங்கள் கொண்டது, இரத்தக்கறை படிந்தது, குரூர மனமும் கோமாளித்தனங்களும், மனநிலை பிறழ்ந்த நோய்மை பீடித்தது என்பதை ஔரங்கசீப் மற்றும் பிஷாடன் ஆகிய கதா பாத்திரங்கள் வழியே திரும்பத் திரும்ப நாவல் நெடுக காட்சிப்படுத்திக் கொண்டே போகிறார்.  போரில் தோல்வி அடைந்த வீர்ர்களின் நாவுகளை அறுத்து எடுத்து வரச்சொல்லி ஆணையிடுகிறான் ஔரங்கசீப். கற்பனையில் கூட நினைக்கமுடியாத குரூரமான அந்த உத்திரவின் வழியே தன்னை …

அதிகாரத்தின் அறைகள் Read More »

இந்து தமிழ் நாளிதழில்

இன்று வெளியாகியுள்ள இந்து தமிழ் நாளிதழில் இந்திய இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். https://www.hindutamil.in/news/literature/929422-todays-indian-literature.html

சென்னை சங்கமம் -நாவல் கருத்தரங்கம்

தைத்திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் இன்று துவங்குகிறது. கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி. அவர்கள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்நிகழ்வு பெரும்கலைவிழாவாக மாநகரம் எங்கும் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறையும் கலை பண்பாட்டுத் துறையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக இலக்கிய சங்கமம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் அடையாறு ராஜரத்தினம் அரங்கில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இலக்கிய நிகழ்வினை கவிஞர் இளையபாரதி ஒருங்கிணைப்பு செய்கிறார். 16ம் தேதி மாலை …

சென்னை சங்கமம் -நாவல் கருத்தரங்கம் Read More »

கடக்க முடியாத நிலப்பரப்பு

சமகால ஐஸ்லாந்து  திரைப்படங்கள் மாறுபட்ட கதைக்களன்களுடன் மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்படுகின்றன. Godland என்ற திரைப்படம் 2022ல் வெளியானது. கான்ஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றிருக்கிறது. படத்தின் முன்னோட்டக்காட்சியைக் காணும் போது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த The Mission திரைப்படம் நினைவிற்கு வந்தது.. Roland Joffé இயக்கிய அப்படத்தில் ராபர்ட் டி நீரோ நடித்திருப்பார். படத்தில் Ennio Morricone இசை அபாரமானது,. சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கார் விருது பெற்ற படம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டேனிஷ் பாதிரியார் …

கடக்க முடியாத நிலப்பரப்பு Read More »

நட்பின் மறுபக்கம்.

சமீபத்தில் பார்த்த சிறந்த படம். The Banshees of Inisherin. படத்தை இயக்கியிருப்பவர் Martin McDonagh அயர்லாந்தின் மேற்குக் கடற்கரையில் உள்ள தீவு ஒன்றில் கதை நிகழுகிறது. இரண்டு நண்பர்களுக்குள் ஏற்படும் பிரிவையும் அதன் விளைவுகளையும் பேசும் இப்படம் நட்பின் நிலைகுலைவை அழுத்தமாகச் சித்தரிக்கிறது இசைக்கலைஞரான கோல்ம் டோஹெர்டி எளிய விவசாயியான பாட்ரைக் உடன் நீண்டகாலமாக நட்புடன் பழகுகிறார். இருவரும் ஒன்றாகக் கூடிக் குடிக்கிறவர்கள். சகல விஷயங்களையும் பற்றி அரட்டை அடிக்கக் கூடியவர்கள். திடீரென ஒரு நாள் …

நட்பின் மறுபக்கம். Read More »