பால்சாக் பற்றிய சிறப்புரை

உலக இலக்கியத்தினை அறிமுகம் செய்யும் விதமாக நிறைய உரைகள் ஆற்றியிருக்கிறேன். இதன் வழியே மகத்தான படைப்பாளிகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் படைப்புகளைக் கொண்டாடவும் முடிந்திருக்கிறது. இந்த முறை டிசம்பர் 25 ஞாயிறு மாலை பிரெஞ்சு இலக்கியத்தின் நிகரற்ற படைப்பாளி பால்சாக் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன். தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்வு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது பால்சாக்கின் வாழ்வு மற்றும் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. யதார்த்தவாத எழுத்தின் நாயகராகக் கொண்டாடப்படும் …

பால்சாக் பற்றிய சிறப்புரை Read More »

புதிய புத்தகங்கள்-3

டிசம்பர் 25 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் மற்றும் அரிய ஓவியங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நிறங்களை இசைத்தல் வெளியாகிறது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள்-2

டிசம்பர் 25 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது அதில் உலக இலக்கியம் மற்றும் இந்திய இலக்கியம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு வான் கேட்கிறது வெளியாகிறது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள்-1

டிசம்பர் 25 மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது அதில் எனது புதிய சிறுகதைத் தொகுப்பு பகலின் சிறகுகள் வெளியாகிறது தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்தத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கவிக்கோ மன்றம், சி.ஐ.டி காலனி,மயிலாப்பூர்,சென்னை – 600 004

புலிக்கட்டம் – மொழியாக்கம்

எனது புலிக்கட்டம் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் பரத் குமார்.www.usawa.in இணைய இதழில் கதை வெளியாகியுள்ளது நன்றி : https://www.usawa.in/issue-8/Translation/lambs-and-tigers-bharath-kumar.html

பெயர் தெரியாத ஞானி.

The Unknown Saint அலா எடின் அல்ஜெம் இயக்கிய 2019 மொராகோ திரைப்படம் தான் திருடிய பணத்தை எங்கே ஒளித்து வைப்பது என்று தெரியாமல் யாருமற்ற பாலைவன மணல்மேடு ஒன்றில் புதைத்துவைத்துவிட்டு அடையாளத்திற்காகப் புதைமேடு போல ஒன்றை உருவாக்கி விட்டு சிறைக்குப் போகிறான் யான்ஸ். சிறை வாழ்க்கையை அனுபவித்துவிட்டு வெளியே வந்து தான் புதைத்த பணத்தை எடுக்க வருபவன் அங்கேயுள்ள காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். காரணம் அவனது புதைமேட்டினை ஒரு ஞானியின் சமாதி என நினைத்து …

பெயர் தெரியாத ஞானி. Read More »

சி. மோகன் விழா

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கலைவிமர்சகர் சி.மோகன் அவர்களின் கலை இலக்கியப் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாக அவரது படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. அத்துடன் அவருக்குப் பணமுடிப்பு அளித்து கௌரவிக்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன் டிசம்பர் 18 மாலை இந்த நிகழ்வு நடைபெறுகிறது இடம் கவிக்கோ மன்றம் சென்னை.

புத்தக வெளியீட்டு விழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் டிசம்பர் 25 2022 ஞாயிறு மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது. நிகழ்வினைத் தலைமையேற்று புத்தகங்களை எழுத்தாளர் வண்ணநிலவன் வெளியிடுகிறார் சென்னை சிஐடி நகரிலுள்ள கவிக்கோ மன்றத்தில் மாலை ஆறுமணிக்கு நிகழ்வு நடைபெறுகிறது