ஆங்கில இதழில்

எனது புருவமில்லாத பொம்மைகள் சிறுகதை borderlessjournal இதழில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி இணைப்பு

துகளின் பயணம்.

ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் பட இயக்குநர் டுடோக் இயக்கிய குறும்படம் The Aroma of Tea (Michael Dudok de Wit.)2006 ஜப்பானிய சித்திர எழுத்து பாணியில் நேர்த்தியான இசையோடு அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்.

வளையத்திற்கு வெளியே

புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரனின் வீழ்ச்சியைப் பேசுகிறது Requiem for a Heavyweight (1962) திரைப்படம். பெலினியின் La Strada படத்தில் ஆன்டனி குயின் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். அதற்கு இணையான படமாகவே இதைச் சொல்வேன். பதினேழு வருடங்கள் ஹெவிவெயிட் சேம்பியனாகயிருந்த, நாற்பது வயதான மவுண்டன் ரிவேரா என்ற குத்துச்சண்டை வீரனாக ஆன்டனி குயின் நடித்திருக்கிறார். மிக நேர்த்தியான நடிப்பு. அடிபட்டு வீங்கிய கண்ணுடன், எதிர்காலம் பற்றிய குழப்பங்களுடன், குடிபோதையில் அவர் நடந்து கொள்வதும். உதவி செய்ய முன்வரும் பெண்ணுடன் …

வளையத்திற்கு வெளியே Read More »

கசப்பான பாராட்டு

.பல்கேரிய திரைப்படம் Glory 2016ல் வெளியானது. நேர்மையான ஒரு மனிதன் சமூகத்தால் எப்படி நடத்தப்படுகிறான். புரிந்து கொள்ளப்படுகிறான் என்பதையே படம் பேசுகிறது. ரயில்வே லைன்மேனாக வேலை செய்யும் சாங்கோ பெட்ரோவ் நடுத்தரவயதுடையவன். தனித்து வாழுகிறான். அவனது வீடு குப்பையும் தூசியும் அடைந்திருக்கிறது. அவனது தோற்றமும் சீராகயில்லை. தானே சமைத்துச் சாப்பிடுகிறான். ரயில்வே துறை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் சம்பளம் கிடைப்பதே போராட்டமாக இருக்கிறது. ரயில் தண்டவாளத்தில் உள்ள போல்ட்களைச் சரிசெய்வதே அவனது அன்றாடப் பணி ஒரு நாள் …

கசப்பான பாராட்டு Read More »

பொள்ளாச்சியில்

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நூறாவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் அக்டோபர் 16 ஞாயிறு காலை பொள்ளாச்சி என்,ஜி. எம் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

அரூ இதழில்

அக்டோபர் மாத அரூ இணைய இதழில் எனது சிறுகதை மற்றும் இரண்டு குறுங்கதைகள் வெளியாகியுள்ளன இணைப்பு –  https://aroo.space/issue-15/

விழித்திருப்பவனின் இரவு

அசோக் The idiot   என்ற வலைப்பதிவில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அசோக் என்ற இலக்கிய வாசகர் எழுதியுள்ள குறிப்பு. ஆழ்ந்த வாசிப்பிலிருந்து உருவான பதிவு என்பதால் இதனைப் பகிர்ந்து கொள்கிறேன் ••• இரவில் விழித்திருந்து வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு. என் மேசை அருகே ஒரு ஜன்னலுண்டு. ஜன்னல் வெளியே ஒரு மரமுண்டு. மரங்களில் எப்போதும் பறவைகள் வந்து அமர்வதுண்டு. இரவில் நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு எழுத்தாளரும் அம்மரத்தில் அமர்ந்து எனக்காக பாடும் அல்லிசைப் புள் என …

விழித்திருப்பவனின் இரவு Read More »

இஸ்மாயில் கவிதைகள்

மலையாள, கன்னட இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்குத் தெலுங்கு இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமாகவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கும் சில தெலுங்கு நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்த போதும் அதிகம் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் சமீபமாகக் கவிஞர் இஸ்மாயில் கவிதைகளை வாசித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. அவர் தெலுங்கு நவீன கவிதையின் முக்கியமான கவிஞர் என்பதை உணர்ந்தேன். ஒரு கவிதையில் பறந்து செல்லும் காகத்தின் நிழலைக் கறுப்பு மௌனம் என்று இவர் குறிப்பிட்டிருப்பது கூடுதல் ஈர்ப்பை உருவாக்கியது தத்துவப் பேராசிரியராக இருந்த முகமது …

இஸ்மாயில் கவிதைகள் Read More »

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்

எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் எழுதியுள்ள தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூலின் வெளியீட்டுவிழா அக்டோபர் 8 மாலை சென்னை தேனாம்பேட்டையில் பாரதி புத்தகாலயம் துவங்கியுள்ள புதிய கடையினுள் நடைபெறுகிறது 900 பக்கங்கள் கொண்ட பெரிய நூல். தமிழ் சிறுகதையுலகினை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். நூலை நான் வெளியிடுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பெற்றுக் கொள்கிறார். அண்ணன் தமிழ்செல்வனின் நூலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவரது நிழலில் கோணங்கியோடு சேர்ந்து வளர்ந்தவன் என்பதால் அந்தப் பசுமையான …

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் Read More »

அன்பு வந்தது

சுடரும் சூறாவளியும் படத்தில் இடம்பெற்ற அன்பு வந்தது என்னை ஆள வந்தது பாடல் எனக்கு பிடித்தமானது. இந்த பாடல் இருமுறை படத்தில் இடம்பெறுகிறது.தாயினை இழந்த பிள்ளைகளை தந்தை ஆறுதல்படுத்திப் பாடும் பாடல் ஜெமினி நடித்த இப்படத்தின் இசை எம்.எஸ்.வி பாடலை எழுதியவர் கண்ணதாசன். எஸ்பிபி பாடிய அன்பு வந்தது பாடலை எப்போது கேட்டாலும் மனது கரைந்துவிடுகிறது. அருமையான பாடல். எஸ்பிபியின் குரல் அமிர்தமாக இனிக்கிறது. கண் இரண்டில் கலக்கம் இன்றிஅமைதி காணலாம்காலம் வெல்லும் வெல்லும் என்றுஉறுதி கொள்ளலாம் …

அன்பு வந்தது Read More »