சேலத்தில்

சேலம் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசக சாலை இணைந்து நடத்தும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் எனது சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல் நாளை மாலை நடைபெறுகிறது.

காஷ்மீரின் குளிர் நிலவு

ஆஹா சாகித் அலியின் கவிதைகளை கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறுநூலாக வெளியாகியுள்ளது. The Country Without a Post Office என்ற இவரது கவிதைத் தொகுப்பினை வாசித்திருக்கிறேன். சிறந்த கவிதைகளைக் கொண்டது. ஆகா சாகித் அலி 1949ல் காஷ்மீரில் பிறந்தவர். அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கேயே பல ஆண்டுகள் வசித்தவர். டிசம்பர் 8, 2001ல் மூளையில் ஏற்பட்ட கட்டியின் பாதிப்பால் காலமானார். புலம்பெயர்ந்த கவிஞராக அறியப்படும் சாகித் அமெரிக்காவில் வசித்தாலும் …

காஷ்மீரின் குளிர் நிலவு Read More »

செராபியத்தின் அழிவு

அகோரா 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இப்படத்தில் அலெக்சாண்ட்ரியாவின் புகழ்பெற்ற நூலகம் அழிக்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது. எதற்காக நூலகத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அறிவின் சேகரமாகவும் அறிவியலின் ஊற்றுக்கண்ணாகவும் அது செயல்படுகிறது என்பதால் தான். நூலகத்தைக் காப்பாற்றுவதற்காக அதன் மாணவர்கள் போராடுவதும் நூலக வளாகம் அடித்து நொறுக்கப்பட்டு ஏடுகள் தீக்கரையாவதைப் பார்த்தபடியே ஹைபேஷியா தப்பியோடுவதும் மனதை உலுக்கக்கூடிய காட்சிகள் இப்படம் 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, வானியலாளரும் தத்துவஞானியுமான ஹைபேஷியாவினை முதன்மைப்படுத்துகிறது. அத்தோடு அலெக்சாண்ட்ரியாவின் அன்றைய பெருமைகளையும் …

செராபியத்தின் அழிவு Read More »

அஞ்சலி

தனித்துவமிக்க சிறுகதை படைப்பாளியாகவும் இடதுசாரி சிந்தனை கொண்ட தீவிர சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கிய தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலி.

உறுபசி -வாசிப்பனுபவம்

அருளானந்தம் சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்கு பிறகு என்று தொடங்குகிறது இந்த நாவல். சம்பத்தின் நண்பர்களான அழகர், ராமதுரை, மாரியப்பன் மற்றும் யாழினி இவர்களின் வழியே சம்பத்தின் மனைவியாகிய ஜெயந்தியும் அவரவர் பார்வையில் சம்பத். யார் இந்த சம்பத்?அவன் ஏன் 42 வயதில் இறந்தான்? பதின் பருவத்தின் கனவுகள் மிகவும் அலாதியானவை கனவுகள் மட்டுமல்ல ஆச்சரியங்கள், நம்பிக்கைகள், மூடத்தனங்கள் மற்றும் புத்திசாலித்தனங்கள் அனைத்தும் தான்.கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை முதன்மை பாடமாகக் கொண்டு பயிலும் மாணவனாக சம்பத்.தமிழின் …

உறுபசி -வாசிப்பனுபவம் Read More »

ஞாபகக் கல்

புதிய சிறுகதை அரூ இணைய இதழில் வெளியானது •••சிறிய அலுமினிய டப்பா ஒன்றினுள் ஒரு கல்லையும் மூன்று சொற்கள் கொண்ட ஒரு துண்டு சீட்டினையும் அம்மா விட்டுச் சென்றிருந்தாள். இந்தப் பெட்டி அவளது பட்டுப்புடவைகளுக்குள் மறைத்து வைக்கபட்டிருந்தது. அம்மா இறந்தபிறகு அவளது பொருட்களை அப்படியே பீரோவில் வைத்துப் பூட்டி அதன் சாவியை அப்பா வைத்திருந்தார். அதை நாங்கள் திறக்கவேயில்லை கோடை விடுறைக்கு அமெரிக்காவிலிருந்து லீலா தனது பிள்ளைகளுடன் வந்திருந்த நாளில் அவள்தான் அப்பாவிடம் கேட்டு பீரோ சாவியை …

ஞாபகக் கல் Read More »

இடக்கை நாடகம்

சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஔவை மன்றத் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன். இந்நிகழ்வில் மாணவியர் எனது இடக்கை நாவலின் முக்கியப் பகுதியை நாடகமாக்கியிருந்தார்கள். மிகச்சிறப்பான நாடகமாக உருவாக்கபட்டிருந்தது. குறிப்பாக ஔரங்கசீப்பாக நடித்துள்ள பெண் அபாரமாக நடித்தார். இடக்கை நாவலை ஆழ்ந்து படித்து உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்திருந்தார்கள். நாடகத்தை மானசி இயக்கியிருந்தார். நாடகத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டினைத் தெரிவித்தேன். அவர்கள் இந்த நாடகத்தை வெளி அரங்கில் நிகழ்த்தினால் இன்னும் அதிக கவனமும் பாராட்டும் பெறும் …

இடக்கை நாடகம் Read More »

பெட்னா நிகழ்வு

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA)  சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணைய வழி இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். தலைப்பு : எழுதப்படாத உண்மைகள் நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 22 நேரம் : இந்திய நேரம் இரவு 9 மணி        அமெரிக்க நேரம் காலை 11 30 மணி நேரலை – Zoom Live : https://tinyurl.com/FETNAIK2022 Zoom Meeting ID: 893 5830 7330Passcode: 577073

பொள்ளாச்சியில்

16.10.22 ஞாயிறு காலை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 100 வது நிகழ்வில் கலந்து கொண்டு கவிதையும் கவிஞனும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்