Month: December 2011

ஷரீபின் வரிகள்

கர்நாடகத்தில் வாழ்ந்த ஞானியான ஷரீஃப் பற்றி பாவண்ணன் மிகச்சிறப்பான ஒரு கட்டுரையை திண்ணை இணைய இதழில் எழுதியிருக்கிறார், நூற்றி எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மகத்தான ஞானி ஷரீஃப். கர்நாடகாவின் சிறுநகரம் ஒன்றில் தான் ஷரீஃப்பின் பாடல்களைக் கேட்ட அனுபவத்தை அற்புதமாக விவரித்திருக்கிறார், அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள பாடலிது, இதை வாசித்த நேரத்தில் இருந்து குரங்கைக் கோழி விழுங்கியதே என்ற வரிகள் மனதில் ஒலித்தபடியே இருக்கின்றன, சாத்தியமற்ற ஒன்றைச் சொல்வதன் வழியே மின்னல்வெட்டென ஒரு அகதரிசனத்தை …

ஷரீபின் வரிகள் Read More »

தங்க வேட்டை

அமெரிக்க எழுத்தாளரான ஜாக் லண்டனின் (Jack London) ஒயிட் பேங்க் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட ஹாலிவுட் படத்தை நேற்றுப் பார்த்தேன் ஜாக் லண்டனின் கானகத்தின் குரல் (The Call of the Wild) என்ற நாவல் மிகவும் பிரபலமானது, அந்த நாவலின் தொடர்ச்சியைப் போல அமைந்துள்ளது ஒயிட் பேங் கானகத்தின் குரல் நாவலில் பழக்கபடுத்தப்பட்ட நாயின் உள்ளே மறைந்திருக்கும் உக்கிரமான மனநிலையை, இயல்பான மூர்க்கத்திற்குத்  திரும்ப முற்படும் ஆசையை எழுதிய ஜாக் லண்டன், அதற்கு நேர்எதிரான …

தங்க வேட்டை Read More »

ஆம் புருனோ – நாடகம்

எனது புத்தக வெளியீட்டு விழாவில் ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே என்ற எனது சிறுகதையின் நாடகவடிவம் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது,  தியேட்டர் லேப் சார்பில் ஜெயராவ் நாடகத்தை இயக்கியிருந்தார். இந்தச் சிறுகதை எனது புத்தனாவது சுலபம் சிறுகதைத்தொகுப்பில் உள்ளது புருனோ நாடகத்தினை 2012 புத்தாண்டு மாலை தியேட்டர் லேப் அரங்கில் மறுமுறை நிகழ்த்த இருக்கிறார். முதல் நிகழ்வு மாலை ஆறுமணிக்கு, அடுத்த நிகழ்வு ஏழு மணிக்கு என்று இருமுறை நாடகம் நிகழ்த்தப்பட இருக்கிறது விருப்பமான நண்பர்கள், பார்வையாளர்கள் அனைவரும் …

ஆம் புருனோ – நாடகம் Read More »

இனிதானது விழா

எனது ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிரம்பி நூறு பேருக்கும் மேலாக நின்று கொண்டே உரைகளைக் கேட்டார்கள், ஆம்புருனோ, அவர்கள் குற்றவாளிகளே என்ற எனது சிறுகதையை ஜெயராவ் மிகச்சிறப்பாக நாடகமாக்கியிருந்தார், அறிவியல் மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தில் உள்ள பள்ளிகள் தோறும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய நாடகமிது. புருனோவின் விசாரணையைச் சமகாலச் சூழலோடு பொருத்தி அவர்கள் நாடகமாக்கியிருந்தது சிறப்பாக இருந்தது, ஜெயராவ் தமிழ் சூழலின் தனித்துவமிக்க நாடக இயக்குனர் என்பதை …

இனிதானது விழா Read More »

பசித்த பொழுது

நாளை மறுதினம் மனுஷ்யபுத்திரனின் புதிய கவிதைத்தொகுப்பான பசித்த பொழுது வெளியாக இருக்கிறது, அந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேசுகிறேன், மனுஷ்யபுத்திரனின் சமீபத்தைய கவிதைகளை ஒரே சேர வாசிக்கும் போது அது தமிழ் நவீன கவிதையின் அரிய குரலாக, கவித்துவ உச்சத்தைத் தொட்டிருப்பதை உணர முடிகிறது, இக்கவிதைகளை தமிழ் சமூகம் கொண்டாடி மகிழ வேண்டும் என்று தான் சொல்வேன். கவியின் குரலில் தான் எத்தனை மிருது, எத்தனை வன்மம், எவ்வளவு நெகிழ்வு, எவ்வளவு கருணை, எவ்வளவு ஆவேசம், …

பசித்த பொழுது Read More »

தேவதச்சனுக்கு விருது

தமிழ்நவீன கவிதையின் தனிப்பெரும் ஆளுமையான கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விளக்கு விருது வழங்கப்படுகிறது, அமெரிக்காவில் இருந்து இயங்கும் விளக்கு அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு விளக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது, இந்த விருதை நகுலன், விக்ரமாதித்யன், பூமணி. சி.மணி உள்ளிட்ட பல முக்கிய படைப்பாளிகள் பெற்றிருக்கிறார்கள், விருது வழங்கும் விழா ஜனவரியில் நடைபெற உள்ளது தேவதச்சன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். ஆறுமுகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1952இல் பிறந்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற, …

தேவதச்சனுக்கு விருது Read More »

காந்தி

மகாத்மா காந்தி எனும் எழுத்தாளர் என்ற தலைப்பில் காந்தி குறித்து நான் பேச இருக்கிறேன் டிசம்பர் 24 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் எனது புத்தக வெளியீட்டுவிழா நடைபெற உள்ளது, அதில் இந்தத் தனிஉரை நடைபெற இருக்கிறது. புத்தரைப் போலவே உலகெங்கும் அறியப்பட்ட மகத்தான ஆளுமை மகாத்மா காந்தி. இருவருமே அயராத பேச்சாளர்கள், சமூகப் போராளிகள், மக்களைத் தேடித் தேடி சந்தித்தவர்கள். காந்தி குறித்து நிறையப் பேசியும், எழுதியுமிருக்கிறார்கள், …

காந்தி Read More »

ஆண்டாளைப் பின்தொடர்வது

மார்கழி மாதத்தில் ஆண்டாளின் பாசுரங்களைக் கேட்பதை விட உன்னதமானது இந்த உலகில் வேறு எதுவுமில்லை, மார்கழியை அவளைப் போல கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை. மற்ற மாதங்கள் தங்களைப் பாடமால் விட்டுவிட்டாளே என்று ஆண்டாளிடம் வருத்தம் கொண்டிருக்கும், கொடுத்து வைத்தது மார்கழி மாதம்,  இப்போதெல்லாம் மார்கழியில் பனி அதிகம் பெய்வதில்லை, பூசணிப் பூக்கள் வைத்து கோலமிட்ட வீடுகளைக் காண்பது அரிதாக இருக்கிறது, கிணற்றடியும் ஈரவாளியும் கண்ணில் இருந்து மறைந்து போய்விட்டன, ஆனால் ஆண்டாள் எல்லாவற்றையும் நினைவுபடுத்திவிடுகிறாள், தன் பாடலின் வழியே …

ஆண்டாளைப் பின்தொடர்வது Read More »

அழைப்பிதழ்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 24 மாலை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

புத்தக வெளியீடு

உயிர்மை பதிப்பகம் நடத்தும் எனது ஐந்து புதிய நூல்களின் வெளியீட்டு விழா  டிசம்பர் 24ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற உள்ளது, இந்த விழாவின் ஒரு பகுதியாக ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே என்ற எனது சிறுகதையின் நாடகவடிவம் நடைபெற உள்ளது, இதைத் தியேட்டர் லேப் சார்பில் இயக்குபவர் ஜெயராவ். புத்தக வெளியீட்டில்  திரு. R.பாலகிருஷ்ணன் IAS, எஸ்.ஏ.பெருமாள், முனைவர் பர்வீன் சுல்தானா, முனைவர்.ராமகுருநாதன், கபிலன்வைரமுத்து, …

புத்தக வெளியீடு Read More »