ஆங்கிலத்தில் இடக்கை நாவல்

எனது இடக்கை நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  ப்ரீதம் சக்கரவர்த்தி மிகச்சிறப்பாக மொழியாக்கம்  செய்திருக்கிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் இதை வெளியிடுகிறது. நாவலின் பிரதியைச் செம்மைப்படுத்துவதில் வித்யா சுபாஷ். ராம்ஜி. காயத்ரி ஆகியோர் கடும் உழைப்பைத்  தந்திருக்கிறார்கள்.  சர்வதேச அரங்கில் இந்த நாவல் கவனம் பெற வேண்டும் என்ற கனவோடு ராம்ஜி இதை மிகச்சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.

தமிழில் இந்நாவலின் நான்காவது பதிப்பு தற்போது வெளியாகிவுள்ளது. நல்ல வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்ற  இடக்கை நாவல் ஆங்கிலத்திலும் அதற்கான இடத்தைப் பெறும் என நம்புகிறேன்.

ஆங்கிலத்தில் வெளியாகும் எனது முதல் நாவலிது.

உலகெங்குமுள்ள தமிழ், ஆங்கில இலக்கிய வாசகர்களின் ஆதரவு அவசியம் தேவை.

நூலகங்களுக்கும், இலக்கிய அமைப்புகளுக்கும் இதனைப்பரிசாக அளிக்கலாம்.

ரூபாய்  நானூறு விலையுள்ள இந்நாவல் முன்வெளியீட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 300 விலைக்கு அளிக்கபடுகிறது.

உங்கள் பிரதியை முன்பதிவு செய்ய

https://zerodegreepublishing.com/product/the-final-solitude/

phone : +91 – 8838291541
Email :zerodegreepublishing@gmail.com

இடக்கை நாவல் குறித்து

மொகலாய மாமன்னர் ஔரங்கசீப்பின் கடைசிநாட்களை மையமாகக் கொண்ட நாவல். சத்கர் என்ற மத்திய இந்தியாவின்  சிற்றரசு ஒன்றில் நடக்கும் அநீதியும் அதில் பாதிக்கபடும் தூமகேது என்ற கதாபாத்திரத்தின் அலைக்கழிப்புமே நாவலின் மையச்சரடு. நீதி மறுக்கபட்ட ஒருவனின் குரலை நாவல் உரத்து ஒலிக்கிறது. இந்திய வரலாற்றின் அறியப்படாத பக்கங்களை துல்லியமாகச் சித்தரிக்கிறது என்ற விதத்திலும், கதை சொல்வதில் புதிய சாத்தியங்களை சிறப்பாக முன்னெடுத்துள்ளது என்ற விதத்திலும் இடக்கை கொண்டாடப்பட வேண்டிய நாவல்.

•••

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: