கொரியக் கவிதை

நாம் ஏன் புத்தனைத் தனியே விடக் கூடாது?
புத்தனை ஒரு யானைச் சவாரி செய்ய வைக்கிறோம்,
ஒரு கிராமச் சிறுவன் ஒரு மனிதனின் தோளில் சவாரி செய்வது போல,
மற்றும் நாம் புத்தனை ஓடவும் விளையாடவும் விடுகிறோம்,
பிறகு அவரை அழச் செய்கிறோம், மற்றும் நாம் அவரை ஒரு தயிர்க்காரப் பெண்ணுடன் ஆனந்தத்துடன் இணைய விடுகிறோம்
மற்றும் அதைத் தந்திரா என்று அழைக்கிறோம்,
ஆனால் பிறகு நாம் அவரை வெறுமைக்குள் தானாக புன்னகை செய்யவிடுகிறோம், உட்காரச் செய்கிறோம், கீழே படுக்க, அவரை இடுப்பிலிருந்து பிறக்க வைக்கிறோம்,
பிறகு உடனடியாக நடப்பது எப்படி எனக் கற்பிக்கிறோம்
மற்றும் அவர் தூங்குவதற்காக கீழே படுத்தவுடன் நாம் அவரைக் கேள்விகள் கேட்கிறோம்
நீங்கள் இதையும் அதையும் கூறினீர்களா இல்லையா?.
மற்றும் நாம் அவரது விரல்களைப் பின்னலிட்டோம். அவரது மூக்கை வெட்டினோம் மற்றும் அதைத் தண்ணீரில் நனைத்து விழுங்கினோம்,
பிறகு அவரைத் தங்கத்தால் அலங்கரித்தோம், ஆனால் பிறகு அவரது தொண்டையை வெட்டினோம்
மற்றும் அவரது தலையை இன்சாடாங்கில் உள்ள ஒரு கடையில் விற்றோம்,
மற்றும் ஒரு மலையுச்சியிலிருந்த ஒரு குகைக்குள் அவரை அடைத்தோம்,
மற்றும் அது போதாமையால் ஒரு பாறையின் உட்புறம் வைத்தோம், அவரைப் பட்டினியிட்டோம், அவரால் மூச்சுவிட முடியாதபடி அவரது தோலில் தங்கத்தைப் பூசினோம்,
ஒரு தொலைதூர மலையுச்சியில் அவரை நிற்க வைத்தோம்
மற்றும் படகில் அவரை அடைந்தபோது அவரை சீராட்டினோம்,
மற்றும் அவரது காலடியில் நின்று எங்களை உதைக்குமாறு கெஞ்சினோம்.
நாம் அவரைத் தனியேவிட முடியாதா?
ஒரு நீல நதியைப் பார்த்தவாறு ஒரு மலைச்சிகரத்தில் ஒரு வீடு கட்டி அதற்குள் அவரை அடைத்தோம்,
மற்றும் நாங்கள் ஒரு கூட்டமாக்ச் சேர்ந்து அவரைக் கேவலப்படுத்த சென்றோம்.
நாங்கள் அவரை கும்மாங்குத்து குத்தினோம், அவரை நசுக்கினோம், அவரைத் தள்ளிவிட்டோம்,
பிறகு நாம் வீட்டுக்கு வந்து துளைக்கப்பட்ட விரல்களின் ரத்தத்தால் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதினோம்,
மற்றும் நாம் அவரது பற்களைப் பிடுங்கினோம் மற்றும் அவற்றை எண்ண முடியாத பைகளில் பகிர்ந்து முழு உலகுக்கே கொடுத்தோம்,
மற்றும் அதற்காக அவர் அருகில் சென்று குனிந்து முழந்தாளிட்டு ஒருமுறை அவரது கண்களுக்குள் பார்த்துவிட்டு பிறகு நமது தாழ்த்திய முகங்களோடு வீடு திரும்ப வேண்டுமா ?
தென் கொரிய மூலம்: Kim Hyesoon
மொழிபெயர்ப்பு:ஆங்கிலம்: டன் மீ சோய். தமிழ்: சமயவேல்.
Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: