கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் எனக்கு இந்த ஆண்டிற்கான கண்ணதாசன் விருது வழங்குகிறது, 50 ஆயிரம் பணமும் பட்டயமும் கொண்டது இவ்விருது, அதைப்பெறுவதற்காக கோவை வருகை தர இருக்கிறேன், 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் இருக்கிறேன், சந்திக்க விரும்பும் நண்பர்கள் கோவை ராஜவீதியில் உள்ள விஜயா புத்தகக் கடையைத் தொடர்பு கொள்ளவும்.
26.06.2011 ஞாயிறு அன்று காலை பத்துக்கு கண்ணதாசன் விழா துவங்குகிறது, இதில் கண்ணதாசன் குறித்து கவிஞர் மு. அர்ச்சுனன் எழுதியுள்ள கண்ணதாசன் என்றும் வீசும் தென்றல் என்ற புத்தகம் வெளியீடு நடைபெறுகிறது,
அதைத் தொடர்ந்து கண்ணதாசன் படைப்புகளில் காணப்படும் சிறப்பியல்புகள் குறித்து சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் தலைமையில் மரபின் மைந்தன் முத்தையா .இசைக்கவி ரமணன், கவிஞர் வ.வே.சு, கவிஞர் ருக்மணி பன்னீர்செல்வம் ஆகியோர் மகிழ்வுரை நிகழ்த்துகிறார்கள்
மாலை நான்குமணிக்கு கண்ணதாசன் அவர்களின் சகோதரர் இராம.முத்தையா அவர்கள் கண்ணதாசன் குறித்து அரிய சொற்பொழிவு நிகழ்த்துகிறார்
மாலை ஆறுமணிக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது, இராம, முத்தையா அவர்களுக்கும், எனக்கும் கண்ணதாசன் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார் ஸ்ரீவிஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை தலைவர் திரு ஒ. ஆறுமுகசாமி. அவர்கள்.
அதைத்தொடர்ந்து திரு, த. இராமலிங்கம் அவர்கள் கம்பனும் கண்ணதாசனும் என சிறப்புரை நிகழ்த்துகிறார்.
நிகழ்ச்சி நடக்குமிடம் நானி பல்கிவாலா கலையரங்கம், மணி மேல்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம். கோவை. 641 037.