ஆசிரியர்களுக்கான இணையதளம்

“டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா” என்ற  இணையதளத்தை பார்வையிட்டேன்,  மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சியாளர்கள், கல்விக்காக பணியாற்றும் அனைவருக்கும் இந்த இணையம்  பெரிதும் உதவக்கூடும்

இந்த இணையதளம் தேசிய அறிவுக் கழகம் (National Knowledge Commission) மற்றும் அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் (AzimPremji Foundation) ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியாகும்.

ஆசிரியர்களுக்குப் பலவிதமான கற்றல்-கற்பித்தல் கருவூலங்களை அளிப்பதன் மூலம், அவர்களின் பாடம் குறித்த அனுபவ அறிவையும், அதனை எவ்வாறு வகுப்பறையில் கற்பிக்க வேண்டும் என்பதையும் கற்பித்து திறன்மிக்கவர்களாக அவர்களை உருவாக்கும் ஒரு முயற்சியாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கற்றல்/கற்பித்தல் வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன், வகுப்பில் பயன்படுத்தும் கற்றல்-கற்பித்தல் கருவிகளை ஆதாரமாக அளித்து இந்த மின் தளம் உதவுகிறது.

https://www.teachersofindia.org/ta

0Shares
0