
1934 ஆண்டு தயாரிக்கப்பட்ட Song of Ceylon என்ற ஆவணப்படத்தை கல்கத்தாவில் நடைபெற்ற உலக திரையிடப்பட விழாவில் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். சமீபமாக அதை சின்னக்குட்டிவின் வலைத்தளத்தில் பார்வையிட்டேன். ஆவணப்படங்களின் வரிசையில் மிக முக்கியமான படமிது.
Song of Ceylon
https://sinnakuddy1.blogspot.com/2008/06/song-of-1934.html
***
நாற்பது நிமிசங்கள் உள்ள இந்த ஆவணப்படம் இலங்கையின் கடந்த கால வாழ்வைப் பற்றிய மிக பசுமையான பதிவு . பேசில் ரைட் இயக்கிய இப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான புருசெல்ஸ் திரைப்பட விழா விருதைப் பெற்றிருக்கிறது.
நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் Walter Leigh யின் பின்ணணி இசை மிக அற்புதமானது. காட்சிகளோடு இணைந்த இசை படிமங்களை போல மனதில் ஏதேதோ ஏக்கங்களையும் வலியையும் நினைவுகளையும் உருவாக்கிவிடுகிறது.
பனைமரங்களுக்கு ஊடே தென்படும் நிலப்பரப்பு. புத்த தரிசனத்திற்காக ஆதம்ஸ் பீக்கை நோக்கி மலையேறி நடந்து செல்லும் யாத்ரீகர்களின் பயணத்துடன் இடைவெட்டாக இலங்கையின் இயற்கை வனப்பு காட்டப்படுகிறது.
இயற்கையோடு இணைந்த வாழ்வும் அதன் அன்றாட செயல்களில் பீறிடும் அழகும் படம் முழுவதும் காவியத்தன்மை மிக்கதாக உள்ளது.
நான்கு பகுதிகளாக உள்ள இந்த ஆவணப்படத்தில் மூன்றாவது பகுதி புதிய தொழிற்சாலைகளின் வரவும் அதனால் ஏற்படும் மாற்றங்களையும் பேசுகிறது. கடைசி அங்கத்தில் பௌத்த வழிபாட்டு நடனம் ஒன்று விவரிக்கபடுகிறது. முடிவில் பனைமரம் ஒன்றின் மெல்லிய காற்றசைவோடு நிறைவடைகிறது .
மாண்டேஜ் காட்சிகளும் அதற்கு இணைக்கபட்ட ஒவிக்கோர்வைகளும் வெகு நேர்த்தியாக பொருத்தியுள்ளன. பௌத்தமத நம்பிக்கையின் படி காலம் பல ஆரங்கள் கொண்ட அரூபமான சக்கரம் போன்றது. துவங்கிய இடத்திலே முடியக்கூடியது. இப்படத்தின் வடிவம் சற்று ஏறக்குறைய பௌத்த காலச்சக்கர வடிவத்தையே கொண்டிருக்கிறது.
இலங்கையின் தேயிலை தோட்ட வாரியத்தின் நிதி உதவியோடு இந்த படம் தயாரிக்கபட்டிருக்கிறது.
Robert Knox என்ற பதினாறாம் நூற்றாண்டு வெள்ளைகார கடலோடி இலங்கையில் இருபதாண்டுகாலம் தங்கி வாழ்ந்திருக்கிறார். அதைப்பற்றி An Historical Relation of Ceylon புத்தகம் எழுதியுள்ளார். அதை வாசித்த பேசில் அதன் உந்துதலில் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள வர்ணனைகள் இந்த புத்தகத்திலிருந்து கையாளப்பட்டவையே.
பிரிட்டனை சேர்ந்த பேசில் ரைட் மிக சிறந்த ஆணவப்படங்களை இயக்கியவர். Night Mail என்ற இவரது ஆவணப்படம் தபால் கொண்டு செல்லும் மெயிலைப்பற்றியது. அது போலவே இவரது தயாரிப்பில் உருவான Diary For Timothy, O`er Hill and Dale, Pett and Pott போன்றவை முக்கிய ஆவணப்படங்கள்.
இந்த படத்தை இயக்கிய போது பேசில் ரைட்டிற்கு வயது 26 இதற்கான செலவு மூவாயிரம் டாலர். படத்தயாரிப்பிற்கான மூன்று மாதங்களுக்கும் மேலாக இலங்கை முழுவதும் பயணம் செய்திருக்கிறார்கள். பேசில் ரைட்டே படத்தின் பிரதான ஒளிப்பதிவாளர். படத்தில் இடம் பெற்றுள்ள புத்த பிரதிமைகளை படமாக்கும் காட்சிக்காக விசேசமான ஒளிப்பதிவு கருவிகளும் முறைகளும் பயன்படுத்தபட்டிருக்கின்றன.
ஆவணப்படங்களில் விருப்பம் உள்ளவர்களுக்காக சில குறிப்பிடத்தக்க ஆவணப்படங்கள் மற்றும் எழுத்தாளர்களின் நேர்காணல்கள், வாழ்க்கை வரலாற்று ஆவணப்படங்கள் குறித்த இணைப்புகள் இவை.
The Jnanpith award winner, M. T. Vasudevan Nair.
https://video.webindia123.com/interviews/scriptwriters/mtvasudevannair/index.htm
Arundhati Roy
https://video.google.com/videoplay?docid=4100322562082185221
Jorge Luis Borges
https://www.ubu.com/film/borges.html
Dali
https://www.ubu.com/film/dali_impressions.html
Orson Welles
https://www.ubu.com/film/welles_oneman.html
Samuel Beckett
https://www.ubu.com/film/beckett.html
Hitler
Ramana Maharishi
Hitchcock
18 short films
https://www.thefirstpost.co.uk/index.php?storyID=7906
Sweet Music
https://www.collegehumor.com/video:1742172
animation about a tango dancer.