முகாமில் சந்திப்போம்

ஜுன் 14 மற்றும் 15 தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள நாவல் இலக்கிய முகாமிற்கு நிறைய வாசகர்கள் ஆர்வமாக முன்பதிவு செய்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது.

முகாமினைச் சிறப்பிக்க முக்கிய எழுத்தாளர்களும் விமர்சகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

சென்னையில் இருந்து வரும் வாசகர்கள் நண்பர் வேடியப்பனுடன் இணைந்து பயணம் செய்ய இருக்கிறார்கள்.

வெளியூர்களில் இருந்து வரும் வாசகர்கள் நேரடியாக முகாம் நடைபெறும் லைப் சென்டர், திண்டுக்கல் வளாகத்திற்கு வந்து சேர்ந்து கொள்ளவும்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம் செல்லும் 1ம் நம்பர் பேருந்தில் ஏறி பதநீர்கடை பேருந்து நிறுத்தம் இறங்க வேண்டும், அங்கிருந்து இரண்டு நிமிச நடையில் உள்ளது லைப் சென்டர்.

முகாம் குறித்துத் தொடர்பு கொள்ள: வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ் தொலை பேசி எண் :  9940446650.

0Shares
0